Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 163: Only to Titan force their will lies prone

அசுரனுக்கு மட்டும் அடிபணியும் மனஉறுதி

  • மனித இதயத்தை உடும்புப்பிடியாய்ப் பிடித்து உலுக்கியது
  • சுபாவத்தின் சுணக்கத்துள் தவறாது நுழையும்
  • வலுவான சிறு வாழ்வின் அர்த்தமற்ற அதிதீவிர சிற்பிகள்
  • ஆர்வத்தையும், ஆசையையும் செப்பனிட்டு சீர் செய்பவர்
  • பிண்டமான மண்ணின் பிடி, சகதியின் சர்வவல்லமை
  • ஜடத்தின் நரம்பு கலங்கிய கருத்தைத் தெரிவிக்கும்
  • சொந்த நினைப்பின் அலங்கோலமான அமைப்புகள்
  • எண்ணத்தின் இருண்ட அரண்மனைகள்
  • பெருமையின் பெருவீச்சு விரித்த கடைகள்
  • அழகெனும் ஆத்ம கோயிலை சூழ்ந்தன
  • சிறுமையின் வண்ணம் கலைஞனின் நுட்பம்
  • வாழ்வின் வளமையை வகுக்கும் கலைவண்ணம்
  • அர்த்தமற்ற சிறு ஆபத்தை விபத்தாகத் திட்டமிடும் தேவதைகள்
  • நேரத்தைக் கூட்டி, காலத்தைக் கணித்து
  • ஆடையழகின் அனந்த குண அலங்காரம்
  • அறியாமை நெஞ்சின் அஞ்ஞான சூத்திரதாரிகள்
  • இடறி விழும் சொல்லின் செயலுக்கு இதமான வழி காட்டும் இறைவன்
  • பெட்டைக் கோபம், விலங்கின் காமம் வெறுப்பைத் தூண்டும்
  • நிலையற்ற எண்ணம், ஆழமற்ற பாசம்
  • முகமூடியணிந்த மாயை புனையும் குறு முனிகள்
  • மங்கிய கலரின் அழகையளிக்கும் மாண்புகள்
  • மக்களாடும் மாறும் திரையரங்கில் நெளியும்
  • ஒளியற்ற காட்சியில் ஒட்டாரமாகச் செயல்படும்
  • நம் விதியை நிர்ணயிக்க முடியாத நாம்
  • நடிகனாகப் பேசி, வீறாப்பாக நடந்து
  • நாடகம் முடிந்து நாமனைவரும் கலையும்வரை
  • ஒளிபொருந்திய காலத்துள், சூட்சுமமான இடத்துள்
  • குட்டை மனிதனின் குறுகிய சட்டத்தை அமுல்படுத்தும்
  • மெதுவாகப் புரண்டெழும் மனிதனைத் தடுக்கும்
  • அவன் தளர் நடையை மரணத்தால் முடித்து
  • க்ஷணம் வாழும் அற்ப ஜந்துவின் அன்றாட வாழ்வு
  • மனித விலங்கின் மாட்சியைச் செல்லும்வரை
  • இருண்ட தாழ்ந்த சுபாவம் கனிந்து ஆத்ம போர்வையாகி
  • அறிவு புறஉலகை ஆர்வமாக நாடும்வரை

**********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
புனிதம், பதம், பவித்ரம், பக்குவம் வாழ்விற்கும் யோகத்திற்கும் அடிப்படை. அரைகுறையான அடிப்படை எதையும் எப்பொழுதும் சாதித்ததில்லை. உள்ளதும் உயிரற்றுப் போவதே உண்மை. பண்பு சாதிக்கும், பண்பற்ற நிலை சாதனையைத் தடுக்கும்.
 



book | by Dr. Radut