Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

 

XXVII. The Sevenfold Chord of Being
Page 262
Para 1
27. சப்த ஜீவன்
The ancient seers fixed on seven great terms of existence.
பண்டைய முனிவர்கள் எழு பெரும் வகைகளாக
வாழ்க்கையை வரையறுத்திருந்தார்கள்.
These terms are the foundation of all cosmic existence.
இவ்வகைகள் எல்லா பிரபஞ்ச வாழ்வுக்கும் அடிப்படையானவை.
They are the sevenfold mode of all existence.
இவை எல்லா வாழ்வுக்குமுரிய எழு மடங்கு முறைகளாகும்.
We have examined these terms.
இம்முறைகளை நாம் ஆராய்ந்தோம்.
We have discovered the gradations of evolution and involution.
பரிணாமத்திற்குரிய நிலைகளை நாம் கண்டறிந்தோம்.
We have arrived at the basis of knowledge.
ஞானத்தின் அடிப்படையை நாம் அடைந்தோம்
We were striving towards this knowledge.
இந்த ஞானத்தை அடைய நாம் தீவிர முயற்சி செய்தோம்.
We have laid down the origin of reality.
நாம் உண்மையின் ஆதியை விதி முறை செய்தோம்.
We have declared about the continent of this reality.
இவ்வுண்மைக்கான வரம்பை நாம் அறிவித்தோம்.
We have declared that the initial, ultimate reality of all in the cosmos is triune.
பிரபஞ்சத்தில், முதலும் முடிவுமான எல்லா உண்மைகளும் மூன்றொன்றானவை என விளக்கினோம்.
It is the principle of transcendent, infinite Existence- Consciousness-Bliss.
அத்தத்துவம் கடந்ததும், அனந்தமுமான சச்சிதானந்தம் ஆகும்.
That is the nature of divine being.
அதுவே தெய்வீக ஜீவனின் தன்மை ஆகும்.
Consciousness has two aspects.
ஜீவியத்திற்கு இரு நிலைகள் உண்டு.
One is illuminating state and power of self-awareness.
ஒன்று அறிவொளியூட்டும், தன்னையறியும் நிலை.
The other is state and power of self-force.
அடுத்தது சுய சக்தி படைத்த நிலையும் திறனும்.
By these two the Being possesses itself.
இவையிரண்டின் மூலம் ஜீவன் தன்னைத் தனக்கு உடைமையாக்கிக் கொள்கிறது.
It does so in static condition.
அது அசைவற்ற சமநிலையில் இதைச் செய்கிறது.
It also does so in dynamic movement.
இயக்க நிலையிலும் அதைச் செய்கிறது.
In its creative action it knows all within it.
தன் படைக்கும் செயலில் தன்னுள் அனைத்தையும் அறிகிறது.
It knows this by omnipotent self- consciousness.
அதை சர்வவல்லமை கொண்ட தன் ஜீவியத்தால் அறிகிறது.
It produces and governs the universe.
அது பிரபஞ்சத்தை உருவாக்கி, ஏற்று நடத்துகிறது.
It governs its potentialiti es.
அதன் செயல்படுந்திறனை அது ஆள்கிறது.
It does this by an omniscient self-energy.
அதை எல்லாம் அறிந்த சுய வலிமையால் செய்கிறது.
This is the creative action of the All existent.
இது பரம்பொருளின் ஆக்க பூர்வமான செயல்பாடாகும்.
Its nodus is in the fourth principle of Supermind.
அதன் கருவான இடம் சத்திய ஜீவியத்தின் நான்காம் விதியில் உள்ளது.
This intermediate principle is also called Real-Idea.
இந்த இடைப்பட்ட தத்துவமும் முழு எண்ணம் என்று அழைக்கப்படும்.
In this Supermind a divine Knowledge is one with selfexistence.
சத்திய ஜீவியத்தில் தெய்வீக ஞானம், அதன் வாழ்வோடு இணைந்துள்ளது.
It is also one with self-awareness.
அது தன் சுய உணர்வோடும் இணைந்துள்ளது.
It is one with a substanti al Will.
அது திடமான உறுதியோடு இணைந்துள்ளது.
This Will is in perfect unison with that knowledge.
இவ்வுறுதி அந்த ஞானத்துடன் பூரணமாக ஒன்றியுள்ளது.
The divine Knowledge develops infallibly the movement.
தெய்வீக ஞானம், சலனத்தைக் குறையில்லாமல் வளர்க்கிறது.
It is the movement and form and law of things.
அது பொருட்களின் சலனம், தோற்றம் மற்றும் சட்டமாகும்.
They are in right accordance with their Truth.
அவை அவைகளின் சத்தியத்துடன் சரியான உடன்பாட்டைக்  கொண்டுள்ளன.
They are in harmony with the significances of its manifestation.
Page 262
Para 2
அவை அதன் வெளிப்பாட்டின் தனிச் சிறப்புகளுடன் ஒற்றுமை கொண்டுள்ளன.
The creation depends on a principle.
சிருஷ்டி ஒரு தத்துவத்தைச் சார்ந்து உள்ளது.
It moves between this biune principle of unity and multiplicity.
இது ஒருங்கிணைந்த தத்துவமான ஒருமை மற்றும் பன்மைக்கிடையே இயங்குகிறது.
It is a manifoldness of idea.
அது எண்ணம் சிறப்பான பல வகைகளாகப் பிரிந்ததாகும்.
It is also a manifoldness of force and form.
மேலும் அது சக்தியும், உருவமும் பலவகைகளாக பிரிந்ததாகும்.
These are the expressions of an original unity.
இவை மூலமான ஒருமைப்பாட்டின் வெளிப்பாடாகும்.
The creation is an eternal oneness.
சிருஷ்டி என்பது ஒரு சாசுவதமான ஐக்கியம்.
This oneness is the foundati on of multiple worlds.
எண்ணிறந்த உலகங்களுக்கு இவ்வைக்கியம் அடிப்படை.
It makes their play possible.
அவைகளின் லீலையை அது சாத்தியமாக்குகிறது.
Supermind therefore proceeds by a double faculty.
எனவே சத்திய ஜீவியம் இரட்டைத் திறனுடன் தொடர்கிறது.
This faculty is comprehensive and apprehensive knowledge.
இத்திறன் காலத்தைக் கடந்ததும் காலத்திற்குட்பட்டதுமான ஞானமாகும்.
It proceeds from the essential oneness.
அது அவசியமான ஒருமைப்பாட்டிலிருந்து தொடர்கிறது.
From this oneness it proceeds to multiplicity.
இவ்வொருமைப்பாட்டிலிருந்து அது வேறுபாட்டிற்குச்  செல்கிறது.
It comprehends all things in itself as itself, the One.
அது தனக்குள் அனைத்தையும், தானாக - ஒன்றாக அறிகிறது.
It apprehends separately all things in itself as objects,
அது தனக்குள் அனைத்தையும் பொருட்களாகப் பிரித்து உணர்கிறது,
These are objects of its will and knowledge.
அவை அதன் உறுதிக்கும், ஞானத்திற்குமுண்டான பொருட்களாகும்.
In its original self-awareness all things are one being.
அதன் ஆரம்ப, தன்னையறியும் நிலையில், யாவும் ஒன்றான ஜீவனாக உளது.
They are one consciousness, one will, one self-delight.
அவை ஒரு ஜீவியம், ஒரு உறுதி மற்றும் ஒரு சுய ஆனந்தம்
The whole movement of things is a movement of one.
பொருட்களின் முழுச் சலனம் அந்த ஒன்றின் சலனம்
Supermind proceeds in its action from unity to multi plicity.
சத்திய ஜீவியம் ஒருமையிலிருந்து பலவாக மாறும் செயலை தொடர்கிறது.
It then goes from multiplicity to unity.
பிறகு அது பன்மையிலிருந்து ஒருமைக்குச் செல்கிறது.
It creates an ordered relati on between them.
இவ்விரு செயல்களுக்கிடையே அது ஒரு சீரான தொடர்பை ஏற்படுத்துகிறது.
This creates an appearance of division.
இச்செயல் இவைகளுக்கிடையே பிரிவினைக்கான ஒரு  தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
But it is not a binding reality of division.
ஆனால், அது பிரிவினையை கட்டாயப்படுத்து நிலையில்லை.
It is a subtle unseparati ng division.
அது சூட்சுமமான, விலகாத பிரிவினை.
It is a demarcation and determination within the indivisible.
அது பிரிக்க முடியாத ஒன்றதனுள் உண்டான வரையறையும் தீர்மானமும் ஆகும்.
Supermind is the divine Gnosis.
சத்திய ஜீவியம் என்பது தெய்வீக மறையியல் ஞானமாகும்
It creates, governs, upholds the world.
அது உலகைச் சிருஷ்டிக்கிறது, ஆள்கிறது மற்றும் ஆதரவளிக்கிறது.
It is the secret Wisdom.
இது ஒரு மறைபொருளான பேரறிவாகும்
This Wisdom upholds our Knowledge and our Ignorance.
இந்த ஞானம் நம் அறிவுக்கும், அறியாமைக்கும் ஆதாரமாக உள்ளது.
 
***********
 
ஜீவிய மணி
ஜீவிய மணி
 
சவாலும் வாதமும் அகங்காரத்தின் அகழிகள்.
அகந்தையழிந்தால் வாதம் எழாது.
வாதமுள்ளவரை அகந்தைக்கு வாழ்வுண்டு.
 
எதிர்ப்பை மீறுவது வலிமை.
எதிர்ப்பு எழ முடியாதது ஆன்மிக வலிமை.
எழும் எதிர்ப்பு மனம் மாறி, பணிந்து பாராட்டுவது.
தூய்மையான ஆன்மிக வலிமை.



book | by Dr. Radut