Skip to Content

2. மனிதனுடைய மகிமை

மனிதனுடைய மகிமை

ஒரு பட்டதாரி. எந்தத் திறமையுமில்லாதவர். எந்த இலட்சியமுமில்லாதவர். காலையில் சாப்பிட்டுவிட்டுக் கையலம்புவதிலிருந்து மத்தியான சாப்பாட்டை இடைவிடாது நினைப்பவர். இவருக்கு நண்பரில்லை. வீட்டில் எவருக்கும் இவரைப் பிடிக்காது. இவர் 1960இல் பட்டம் பெற்றார். தினமும் சினிமா பார்ப்பார். பணமில்லாததால் பெரிய கெட்ட பழக்கம் ஏற்பட வழியில்லை. இவரையறிபவர்கள் “மனிதன் என்றால் இவர் போல இருக்கக் கூடாது” என நினைப்பார்கள். கல்லூரியில் NCC யில் shooting ஆரம்பித்தபொழுது முதல் நாள் முதல் முறையாக 5 முறை தொடர்ந்து bullல் சுட்டார். இது உலகத்திலேயே இதுவரை ஏற்படாத ரிக்கார்ட். 20 இளைஞர்கள் இவரை சுர்ந்து அடிக்க வந்தபொழுது இவருக்கு வந்த ஆவேசம் அனைவரையும் நடுங்க வைத்தது. ஒருவனை சக்கையாக அடித்தார். அனைவரும் ஓடி விட்டனர். போர்க்களத்தில் முன்னணியில் நின்றால் நான் நானாக இருப்பேன் என்றார். இவர் வீராதி வீரன். அவருடைய திறமைக்குப் பலனில்லாத இடத்தில் இவர் பயனற்றவராகத் தோன்றுகிறார். அன்னைக்கு சுவையை ஏற்று ஏராளமான கிராமங்களுக்கு சுபீட்சம் எழும் வகையில் இவர் மாறிய சுபாவம் பயன்பட்டது. மனிதனுக்கு இவ்வகைத் திறமையில்லை. ஒருவனுடைய திறமை உச்சக் கட்டத்தில் வெளிப்படும் வாய்ப்பு ஏற்படும். சமூகம் உருவானால் ஒரு மனிதனால் உலகமே வாழும். அந்நிலை இன்றில்லை என்பது பரிதாபமான நிலையில்லை. Nature இயற்கை பெரும் சாதனைக்குத் தன்னைப் பொறுமையாகத் தயார் செய்வதை அறியும் ஞானமோ பொறுமையோ நமக்கில்லை.

********

 



book | by Dr. Radut