Skip to Content

1. நிலை தரும் நித்திய தரிசனம்

நிலை தரும் நித்திய தரிசனம்

மனித நிலை
-->
எண்ணம் அலை பாய்கிறது, நெஞ்சு நிலையிலில்லை.
அன்பன் நிலை
-->
அலை ஓய்ந்து நிலையை எய்துவது.
இலட்சியம்
-->
ஆத்மா மனத்தில் ஆர்வமாக பிரதிஷ்டையாவது.
பிரம்மம்
-->
ஆத்ம சத்தியம் அனைத்துமான நிலை.
சிருஷ்டி
-->
பிரம்மம் புரண்டு பிரம்மாண்டமாவது.
பரிணாமம்
-->
உள்ள ஆனந்தம் உணரும் ஆனந்தமாவது.
யோகம்
-->
இருள் ஒளியாகும் இன்பம்.
பாதாளம் பரமாத்மாவின் பாதையை நாடுவது
தோற்றமான நரகம் உண்மையான சுவர்க்கமாவது.
ஆண் ஆண்டவனில் பெண்ணாகப் பூர்த்தியாவது.

எதுவுமற்ற பிரம்மம் எல்லாமுமாக மாறி மணப்பது.

அடுத்த மனிதன் ஆண்டவனாக வந்து, அன்பு செலுத்தி, இன்பம் துய்ப்பது.

இறைவன் வரும் தருணம் இகம் பரமாகும் இதமான இயற்கையாவது.

உள்ளம் சிந்தனையால் செயல்பட்டுப் பூரணம் தேடுவது.

உடல் உணர்வால் பூரித்துப் புல்லரித்துப் புளகாங்கிதமடைவது.

எண்ணம் உணர்வால் நிறைந்து செயலில் சிலிர்த்து மகிழ்வது.

தேச பக்தி மாநிலத்தை மகத்தானப் பெருநிறைவாக்கும் பேறாவது.

அறியாமை அனந்தனின் அன்பு மழையை அனைவருக்கும் தருவது.

உள்ளம் உடலின் செளந்தர்யத்தை லாவண்யமாக்கும் உபாயம்.

உணவு உணர்ந்து மகிழ்ந்து உள்ளம் நிறையும் உத்தம வாய்ப்பு.

கண்டறியாதன காணும் கண்கள் காட்சியைத் திருஷ்டியாக்கும்.

மக்கள் தொகை மனத்தை மலர்போல் மாற்றும் மகிமை.

இந்திய நாடு இதமான இறைவனை இஷ்ட தெய்வமாக்கும் பூமி.

 

********



book | by Dr. Radut