Skip to Content

10.Sri Aurobindo and the Tradition - ஸ்ரீ அரவிந்தரும், மரபும்

Sri Aurobindo and the Traditi on

ஸ்ரீ அரவிந்தரும், மரபும்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

  1. Western Psychology is recently acquainted with Cosmic Consciousness.
    In the East, it has always been a reality of our subjective progress.

    மேலை நாட்டு உளவியல், பிரபஞ்ச ஜீவியத்தைப் பற்றி சமீபத்தில்தான் அறிந்து கொண்டது.
    கீழை நாடுகளில் பிரபஞ்ச ஜீவியம் எப்போதுமே நம் அகவய முன்னேற்றத்தில் ஒரு மெய்ப்பொருளாகவே இருந்து வந்திருக்கிறது.

  2. Man lives in the ego & sense, separate from the world, all to himself.
    In the cosmic consciousness, Man is unified more and more with other minds, producing effects on the subjective being of others.

    உலகிலிருந்து பிரிந்து எல்லாம் தனக்கே என்னும் அகந்தை உணர்வோடு மனிதன் வாழ்கிறான்.
    பிரபஞ்ச ஜீவியத்தில் மனிதன் பிற மனங்களோடு மேன்மேலும் ஐக்கியமாவதன் மூலம் பிறரது அகஜீவனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறான்.

  3. The consciousness of the earth is real to the egoistic Man.
    For one who has had contact with Cosmic Consciousness, it is real in itself, in its works.

    அகந்தையாலான மனிதனுக்கு பூலோக ஜீவியம் மெய்யாக இருக்கிறது.
    பிரபஞ்ச ஜீவியத்தோடு தொடர்பு கொண்டவருக்கு அதுவும், அதன் செயல்பாடுகளும் மெய்யானவை.

  4. Ego is the truth of earthly material existence.
    The conscious Being is the truth of the infinite Supermind, is more than the universe, lives in Its own inexpressible infinity.

    பூலோக ஜட இருத்தலில் அகந்தையே சத்தியமாகக் கொள்ளப்படுகிறது.
    அனந்தமான சத்திய ஜீவியத்தின் சத்தியம் தன்னையறிந்த ஜீவனாகும். பிரபஞ்சத்தை விடப் பெரியதான அந்த ஜீவன் விவரிக்கவொண்ணா தன் சுயஅனந்தத்தில் வாழ்கிறது.

  5. The ascetic has seen the Spirit, the pure Self, the transcendent Silence. It is luminous, pure, without sinews of energy, fl aw of duality, scar of division.
    Still, it is a part of the Omnipresent Reality which is the whole.

    ஆத்மாவை, தூய ஆன்மாவை, வரைகடந்த மௌனத்தை துறவி கண்டார். அது ஒளிமயமானது; தூயது; சக்தி சலனமற்று இருப்பது; இருமை எனும் குறையற்றது; பிரிவெனும் தழும்பற்றது.
    எனினும் அது எங்குமிருக்கும் சத்தியமான முழுமையின் ஒரு பகுதிதான்.

    ******



book | by Dr. Radut