Skip to Content

11. Infinityயினுடைய ஆற்றல் (பாகம் 1)

Infinityயினுடைய ஆற்றல் (பாகம் 1)

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

இப்படி Overmindஉடன் ஒப்பிடும்பொழுது மானிட அறிவின் capacity for Infinity குறைவு. ஆனால் அதே சமயத்தில் நம்முடைய அறிவிற்கும் கீழேயுள்ள உணர்வு நிலை அதாவது vital planeஉடன் ஒப்பிடும்பொழுது Human mindஉடைய capacity for Infinity அதிகம். அறிவு வளர்ச்சியில்லாமல் வெறும் உடம்பையும் உணர்வுகளையும் வைத்துக் கொண்டு விவசாயம் மற்றும் வியாபாரம் மற்றும் போரிடுதல் என்று இவற்றை மட்டும் செய்து கொண்டு வாழ்ந்த மனிதன் சாதித்ததை விட, விஞ்ஞானம் மற்றும் technology வளர்ந்தபின்பு நாகரிக வளர்ச்சியடைந்த மானிட இனம் சாதித்தது மிகவும் அதிகம். இம்மாதிரியே நம் அறிவுக்குக் கீழ் உள்ள உணர்வு நிலையை எடுத்துக் கொண்டால் நம் அறிவினுடைய capacity for Infinityஐ விட இதனுடைய capacity for Infinity குறைவு. அதே சமயத்தில் நம்முடைய உடம்போடு ஒப்பிடும்பொழுது இதனுடைய capacity for Infinity அதிகம். தன்னுடைய உடம்பையும் மற்றும் தன்னுடைய இரு கைகளை மட்டுமே கருவிகளாகக் கொண்டு மிருகங்களை வேட்டையாடியும், தானியங்கள் மற்றும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைச் சேகரித்தும் சாப்பிட்டு வாழ்ந்த காட்டு மனிதனை விட உணர்வு மையத்தை வளர்த்துக் கொண்ட, பெரிய அறிவு வளர்ச்சி இல்லையென்றாலும் விவசாயம் மற்றும் வியாபாரத்தைச் செய்து உணர்வு நிலையில் வாழ்ந்த மனிதன் சாதித்தது அதிகம். உடம்போடு ஒப்பிடும்பொழுது உணர்வின் ஆற்றல் அதிகமாகத் தெரிகிறது. ஆனால் அறிவோடு ஒப்பிடும்பொழுது உணர்வின் ஆற்றல் குறைவு. ஏனென்றால் அறிவின் பார்வை அகன்றது. உணர்வின் பார்வை குறுகியது. ஆத்திரக்காரனுக்கும், ஆசை கொண்டவனுக்கும் அறிவு மட்டு என்பார்கள். அவனுக்கு அவனுடைய ஆத்திரமும், ஆசையும் தான் தெரியுமே ஒழிய அந்த நேரம் அறிவு வேலை செய்யாது. ஆகையால் ஆசையாலும், ஆத்திரத்தாலும் உந்தப்பட்டு செயல்படுபவன் அறிவால் செயல்படுபவனிடம் என்றுமே தோற்றுப் போவான். உதாரணமாக இரண்டாம் உலகப்போரை பெரிய சாம்ராஜ்யம் நிறுவ வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு ஹிட்லரும், முசோலினியும் பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மேல் போர் தொடுக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் வெற்றி கிட்டினாலும் அமெரிக்காவினுடைய பணபலம் மற்றும் படைபலம் இவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது. இந்தப் பணபலத்தையும் படைபலத்தையும் அமெரிக்காவும் மற்றும் நேச நாடுகளும் ஜெர்மனி மற்றும் இத்தாலி மற்றும் ஜப்பானுக்கு எதிராகப் பயன்படுத்தியபொழுது மூன்று நாடுகளும் படுதோல்வியடைந்தன. ஜெர்மனி இரண்டு துண்டாகியது. ஜப்பானில் அணுகுண்டு வெடித்தது. ஏன் இந்தப் போரில் இறங்கினோம் என்று ஜெர்மானியர்களும் இத்தாலியர்களும் மற்றும் ஜப்பானியர்களும் பல வருடங்களாக வருத்தப்பட்டார்கள். அறிவின் வரம்பற்ற ஆற்றலோடு உணர்வு மற்றும் உடம்பு நிலையில் செயல்படுகின்றவர்களுடைய வரம்பிற்குட்பட்ட ஆற்றல் மோதும்பொழுது இப்படிப் படுமோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

இறுதியாக நாம் physical planeக்கு வருகிறோம். இருப்பதிலேயே மிகவும் ஆற்றல் குறைந்த plane என்பதால் இதனுடைய capacity for Infinityயும் அந்தளவு குறைவாகத் தான் இருக்கிறது. குறைவாக இருந்தாலும் physical Infinity கூட நமக்குப் பிரம்மாண்டமாகத் தான் தெரிகிறது. உதாரணமாக எந்த telescopeஆலும் பிரபஞ்சத்தின் எல்லையைப் பார்க்க முடியாத அளவிற்குப் பிரபஞ்சம் பிரம்மாண்டமாக இருக்கிறது. பகவான் பிரபஞ்சத்தை முடிவில்லாத finite என்கிறார். பிரபஞ்சத்தின் அளவிற்கு வரம்பு கிடையாது என்பதைப் போல physical planeல் காலத்தின் வெளிப்பாட்டிற்கும் அளவு கிடையாது. காலத்தையும் பகவான் Time Eternity என்றும் Timeless Eternity என்றும் இரண்டாகப் பிரிக்கிறார்.

இம்மாதிரியே பிரபஞ்சத்தின் அளவு மற்றும் வயது என்று இவற்றை தவிர physical planeல் வேறு எதை எடுத்துக் கொண்டாலும் எல்லாமே வரம்பிற்குட்பட்டவையாகவே இருக்கும். பூமியின் இயற்கை வளத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு ஒரு லிமிட் உண்டு. பூமிக்கு அடியில் இருந்து நாம் நிலக்கரி மற்றும் எண்ணெயை எடுத்துச் செலவு செய்து கொண்டிருக்கிறோம். இவை தீராமல் எப்போதுமே கிடைத்துக் கொண்டிருக்குமென்று சொல்ல முடியாது. இப்பொழுது நாம் இவற்றைப் பயன்படுத்தும் அளவிற்குத் தொடர்ந்து பயன்படுத்தினோம் என்றால் இவை இன்னும் 100 வருடம் தான் நீடிக்கும், அதற்கு மேல் நீடிக்காது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். மனிதனுடைய சம்பாத்தியம் மற்றும் சொத்து ஆகியவற்றிற்கும் அளவுண்டு. Bill Gates போன்ற கோடீஸ்வரர்களுடைய Asset figureஐ எடுத்துக் கொண்டால் கூட அதிகபட்சமாக 50 billion dollars என்று சொல்கிறார்கள். ஒரு பில்லியன் என்றால் 4500 கோடியாகும். 50 பில்லியன் என்றால் 2,25,000 கோடி ரூபாயாகும். உலகத்தினுடைய மொத்த financial assetsஐ எடுத்துக் கொண்டால்கூட, 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாத கணக்கெடுப்பின்படி பார்த்தால் சுமார் 195 Trillion dollars என்று பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். ஒரு Trillion என்றால் 1000 billion ஆகும். ஆகவே 195 trillion என்றால் 1,95,000 பில்லியன் என்றாகும். இந்த எண்ணிக்கை நமக்குப் பிரமிப்பாக இருந்தாலும் இது ஒரு அளவிற்குள் தான் வருகிறது. மனிதனுடைய ஆயுளை எடுத்துக் கொண்டால் கூட 100 வயதிற்கு மேல் பொதுவாக இருப்பதில்லை. ஓய்வெடுக்காமல் எந்த மனிதனாலும் நாள்கணக்காக வேலை செய்ய முடியாது. பெரும்பாலானவர்கள் 8 மணி நேர வேலைக்குப் பிறகு களைத்துப் போய் ஓய்வெடுக்க வேண்டும் என்ற நிலையில் தான் இருக்கிறார்கள். உடம்பினுடைய capacity for Infinity எவ்வளவு குறைவு என்பது அறிவினுடைய capacityஐ ஒப்பிட்டுப் பார்த்தால் தான் நமக்குத் தெளிவாகத் தெரியும். உதாரணமாகப் படிப்பில்லாமல் unskilled வேலை செய்கின்ற தொழிலாளர்களை எடுத்துக் கொண்டோம் என்றால் அவர்கள் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 250-300 ரூபாய் தான் சம்பாதிக்கிறார்கள். ஒரு நாள் வருமானத்தை 250 ரூபாயாக வைத்தால், நான்கு ஞாயிறு போக ஒரு மாதத்தில் 26 நாட்கள் வேலை செய்தால் ஒரு மாத வருமானம் 6500 ரூபாய் அல்லது 7800 தான் வருகின்றது. ஆனால் அறிவை நம்பி உழைக்கின்றவர்களைப் பார்த்தால் அது மிக உயர்ந்த அளவில் இருக்கும். அமெரிக்காவில் இருக்கின்ற Tom Peters மற்றும் Peter Drucker போன்ற management நிபுணர்களுடைய ஒரு நாள் சம்பளத்தை எடுத்துக் கொண்டோம் என்றாலும் அது 80,000 டாலர்கள் மற்றும் 1 இலட்சம் டாலர்கள் அளவில் இருக்கிறது. இந்திய ரூபாயில் பார்த்தால் ஒரு நாள் வருமானம் ரூ.36,00,000 முதல் ரூபாய் 45,00,000 வரை என்றாகிறது. அறிவில்லாத தினக்கூலிக்கு அவனுடைய உடல் உழைப்புத் தருவது வெறும் 250 ரூபாய் தான். Management துறையில் தம்முடைய அறிவு பலத்தால் முதன்மை இடத்தில் நிற்பவருக்கு அவருடைய அறிவு வழங்கும் தினசரி வருமானம் ரூ.36,00,000 முதல் ரூ.45,00,000. இந்த வருமானம் சம்பந்தப்பட்ட figureஐ வைத்துக் கொண்டே உடம்பின் ஆற்றல் என்ன, அறிவின் ஆற்றல் என்ன என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

தொடரும்....

******



book | by Dr. Radut