Skip to Content

06. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

P.39 It is so free that it is not even bound by its liberty

பிரம்மத்தின் சுதந்திரம் பூரணமானது. அதன் சுதந்திரத்திற்கும் கட்டுப்பட்டதல்ல

  • மனிதன் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவன்.
  • வக்கீல் கட்சிக்காரனை விட சட்டத்திற்கு அதிகமாகக் கட்டுப்பட்டவன்.
  • ஜட்ஜ் தான் அமல்படுத்தும் சட்டத்திற்குக் கட்சிக்காரனை விட, வக்கீலை விட அதிகமாகக் கட்டுப்பட்டவர். முழுமையாகவும் கட்டுப்பட்டவர். அது மனித நிலை.
  • சீனுவாச ராமானுஜம் மேதை.
  • மேதாவிலாசம் தெய்வாம்சமுடையது.
  • தெய்வாம்சம் மனித நிலைக்கு, மனித சட்டத்திற்குட்படாது.
  • ராமானுஜம் இன்டர்மீடியட் பாஸ் செய்யவில்லை, பட்டம் பெறவில்லை.
  • மேதையைப் பட்டம் கட்டுப்படுத்தாது.
  • அவரைக் கேம்பிரிட்ஜுக்கு அழைத்தனர்.
  • பி.ஏ. பட்டம் கொடுத்தனர்.
  • சென்னை சர்வ கலாசாலை இன்டர்மீடியட் பட்டம் தர மறுத்தபின் கேம்பிரிட்ஜில் பி.ஏ. வழங்கினர்.
  • பிறகு எம்.ஏ.யும் வழங்கினர்.
  • இன்று வரை அவர் எழுதியதைப் புரிந்து கொள்ள எவராலும் முடியவில்லை.
  • அவர் மேதாவிலாசம் உலக ஞானத்தைக் கடந்தது.
  • அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கவில்லை.
  • அவர் பெற்ற எம்.ஏ. பட்டம் அவர் ஞானத்தைக் கட்டுப்படுத்தாது.
  • பெற்ற எம்.ஏ. பட்டத்தாலோ, பெறாத டாக்டர் பட்டத்தாலோ அவர் மேதாவிலாசம் கட்டுப்படாது.
  • டாக்டர் பட்டம் பெற்றால்தான் அவர் ஞானத்தை உலகம் ஏற்கும் என்பதில்லை.
  • அவர் ஞானம் எல்லாப் பட்டங்களையும் கடந்தது.
  • யாருக்குமில்லாத சுதந்திரம் பிரம்மத்திற்கு உண்டு.
  • அந்தச் சுதந்திரத்தையும் இழக்கும் சுதந்திரமும் பிரம்மத்திற்குண்டு.
  • அந்தச் சுதந்திரத்தாலும் பிரம்மம் கட்டுப்படாது.
  • இதுவரை எவரும் பிரம்மத்தை இதுபோல் வர்ணித்ததில்லை.
  • இந்த விளக்கத்தால் பகவான் சத்திய ஜீவியம் உலகை சிருஷ்டித்தது எனக் கூற முடிந்தது.
  • அனந்தம் என்றால் முடிவற்றது என்று பொருள். முடிவற்றது தன்னை ஒரு முடிவுக்குள் கட்டுப்படுத்த முடிவு செய்தால் அதுவும் அதற்கு முடிவு.
  • முடிவற்றது என்பதால் எந்த முடிவுக்குள்ளும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் முடிவும் அதற்குண்டு என்று பகவான் கூறுகிறார்.

*******



book | by Dr. Radut