Skip to Content

2. பஸ்-கட்டணம்

பஸ்-கட்டணம்

குழந்தைகள் சிறுவர்களாக இருக்கும் பொழுது அவர்களைப் பள்ளிக்குத் தயார் செய்வது தாயாருக்குச் சாதனை. கணவன் ஆபீசுக்குப் போக வேண்டும். குழந்தைகள் பள்ளிக்குப் போக வேண்டும். சிறு குழந்தைகளானால், குளிப்பது, டிரஸ் செய்வது, புத்தகம் எடுப்பது முதல் தாயார் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். கணவனுக்குச் சாப்பாடு கட்ட வேண்டும். குழந்தைகட்குச் சாப்பாடு கட்ட வேண்டும். தாயாரும் வேலைக்குப் போவதென்றால் மேலும் சிறப்பு.

ஒரு தாயாருக்கு இப்பொறுப்புகளுக்கு மேலும் ஒரு சிரமம். தான் வேலைக்குப் போகவில்லை என்பது வசதி. பள்ளிக்கூட பஸ் ஒரு நேரமாக வராது. முன்கூட்டிப் போய் காத்திருப்பது மேலும் தினசரி ஒரு சங்கடமாக இருந்தது. இதற்கு அன்னை ஒரு வழி காட்டக்கூடாதா என நினைத்தார். பலரையும் கலந்து ஆலோசித்தார். "பள்ளி சம்பந்தமான அத்தனை விஷயங்களையும் ஒன்று தவறாமல் கூறுங்கள்" என்றார் ஒருவர். அதைக் கூறிவரும் பொழுது பஸ்-கட்டணம் எப்பொழுதும் தாமதமாகக் கட்டுவதைக் குறிப்பிட்டார். அதைத் தாமதமில்லாமல் கட்டிப் பார்க்கலாம் என அன்பர் கூறினார். கட்டினார். பஸ் மறு நாளிலிருந்து குறித்த நேரத்திற்கு வருகிறது.

பஸ் கட்டணத்திற்கும், அது வரும் நேரத்திற்கும் சம்பந்தமிருப்பதாக நம்மால் நினைத்தும் பார்க்க முடியாது. தொடர்பற்ற எந்த இரண்டு செயல்களையும் நாம் காண முடியாது. நாம் அத்தொடர்பை அறிவதில்லை.

முடியாதது பிறருக்கு முடிய விரும்புபவனுக்கு முடியாததில்லை.

******



book | by Dr. Radut