Skip to Content

1. உறவு - தொடர்பு

உறவு - தொடர்பு

உறவுகள் ஏற்கனவே ஏற்பட்டது. நண்பர்கள் நாமே ஏற்படுத்திக் கொள்வது. நாமே ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பில், நம்மையறியாமல் ஏற்கனவே ஓர் உறவிருக்கும் என நாம் எதிர்பார்ப்பதில்லை. பல்வேறு உறவுகளுண்டு. நாள் கழித்து ஒரு சில வெளிப்படும். பெரும்பாலும் பழைய உறவுகள் வெளிவருவதில்லை.

வேலூரில் படித்த பெண் பெற்றோர் புதுவை வந்தனர். அன்பர்களாயினர். ராணிப்பேட்டையிலிருந்தவர் அன்பரான பின் புதுவையில் தங்க முடிவு செய்தார். பெண் திருமண வயதான பின் ராணிப்பேட்டை அன்பரின் தம்பி மகனைத் திருமணம் முடித்தனர்.

ராணிப்பேட்டை அன்பர் சிறிது காலம் வேலூரிலி -ருந்ததால் பெண்ணும், அவரும் வேலூரைப் பற்றிப் பேசினர். பெண் தான் குடியிருந்த வீட்டை அடையாளம் கூறிய பொழுது, ராணிப்பேட்டை அன்பர் கவனமாகக் கேட்டு விசாரித்து,

"அதே வீட்டில் நான் குடியிருந்தேன்'' என்றார்.

பிற்காலத்தில் சம்பந்தம் ஏற்படப் போவதை வீடு அறிந்து அவர்களை ஒரே வீட்டில் குடியிருக்கச் செய்தது வாழ்வின் இயல்புகளில் ஒன்று.

நம்மை மறப்பது நம் கர்மம் அழிவது.

******



book | by Dr. Radut