Skip to Content

12. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

The direct transformation of the triple vibration into Ananda is possible, but less easy to the human being.

(Page 109, The Life Divine)

துன்பம், வலி, வேதனையாகியவற்றை நேரடியாக ஆனந்தமாக மாற்றுவது முடியும், ஆனால் அது மனிதனுக்கு எளிதல்ல.

  • வேத ரிஷிகள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததால் மனிதனை இறைவனிடமிருந்து பிரிக்கவில்லை, பிரிவினை துன்பத்திற்கு வித்து. அகந்தையைச் சரணடைவது மூலம் அவர்கள் சச்சிதானந்தப் பேறு பெற தெய்வங்களை நாடினர்.
  • வேதாந்தம் சர்வம் பிரம்மம் என்று கண்டது. இருளுக்கு ஜீவனில்லை என அறிந்தனர். ஆனால் மோட்சத்தை அவர்கள் நாடியதால், இருள் இருளாகவே நிலைத்து நின்றது.
  • புத்தர் அனைத்து துன்பங்கட்கும் அகந்தையே அடிப்படை என்று கண்டார். அகந்தையை அழித்து பெரும் சக்தியை வெளியிட்டார். 50 மைல் தூரத்தில் புத்தர் வருவது தெரியும்.
  • கீதை மோட்சம் பெறும் எளிய வழியாக சரணாகதியைக் கூறுகிறது.
  • மனிதன் இருளிலிருந்து தப்புவது பெரியது. இருள் உலகில் அழிவது முடிவானது.

    தபஸ்வி துன்பம், வலியை வெல்லும் மார்க்கத்தைக் கண்டவன்.

    துன்பமும், வலியும் இன்பத்துடனும் சந்தோஷத்துடனும் தொடர்பு கொண்டவை.

    அவை ஒரே நாணயத்தில் இரு புறம்.

    ஒன்றை நாடினால், அடுத்ததை - எதிரானதை - விலக்க முடியாது.

    அதனால் துன்பத்தின் மறுபுறமான இன்பத்தைத் துறவி நாடவில்லை.

    துறவிக்கு விடுதலை கிடைத்தது.

    ஸ்ரீ அரவிந்தம் துன்பத்தை ஏற்று திருவுருமாற்ற வேண்டும் எனக் கூறுகிறது.

    துன்பத்தைத் துன்பமாக ஏற்றால் துன்பம் நாம் ஏற்பதால் வலிமை பெறும்.

    துன்பத்தை இன்பத்தின் மறுபுறமாகப் புரிந்து ஏற்றால், துன்பம் வலிமை பெறாது.

    புறம் நமக்குத் துன்பம் தருவது அகம் துன்பத்திலிருப்பதால் என ஸ்ரீ அரவிந்தம் கூறுகிறது.

    நம் முன்னே உள்ள துன்பத்தைத், துன்பத்தை ஏற்கும் பாங்கை, நாம் கைவிட்டால், துன்பம் கரையும், திருவுருமாறும்.

  • அறிவில்லாமல் பேசுபவனுக்குப் பதில் கூறினால் அவன் அறிவின்மை வலுப் பெறும் என்பதை அறிவு ஏற்காது.

    எதிரி வம்பு வளர்க்கும் பொழுது, அவன் தெரிந்தே செய்கிறான் என்பதால், நாம் எந்தப் பதில் கூறினாலும் அதற்குப் பதில் வரத் தயங்காது.

    அவனுடைய தவற்றிற்கு நாம் கூறும் பதிலால் நாமும் அத்தவற்றில் பங்கு கொள்கிறோம்.

    நம்மையறியாமல் நாம் தவற்றுக்கு உடந்தையாகிறோம்.

    பதில் கூற மறுத்தால் எதிரி வலுவிழப்பதைக் காணலாம்.

    Non-Reaction எரிச்சல்படாமலிருப்பது பெரிய விஷயம்.

    அதைவிடப் பெரியது திருவுருமாற்றம்.

    எதிரி எரிச்சலைக் கிளப்பினால் "என்னிடம்” எரிச்சல் இருப்பதால் எதிரி கிளப்புகிறான் எனப் புரிவது ஞானம். "அந்த எரிச்சலுக்கு உயிர் வரும்படி நான் பதில் கூறக்கூடாது” என்பது அறிவு.

    அந்த எரிச்சலைச் சந்தோஷமாக மாற்றுவது திருவுருமாற்றம். "என் எரிச்சலுக்கு முடிவு நேரம் வந்துவிட்டது' என்ற உணர்வு சந்தோஷம் தரும்.

    • அது திருவுருமாற்றம்.
    • திருவுருமாற்றம் எரிச்சல்படாமலிருப்பதைவிட உயர்ந்தது.

     

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வீசும் காற்றை உடல் அறிவதுபோல் அசையும் அருளை ஆத்மா அறியும்.
 
 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
எச்செயல் அன்னையை நெருங்கப் பயன்படுகிறதோ அதுவே அன்னைக்குரிய பழக்கம்.
பக்குவம் தரும் பழக்கம் பவித்திரமானது.
மனம் நெஞ்சமாவது பக்தி.
 
******



book | by Dr. Radut