Skip to Content

08. அஜெண்டா

அஜெண்டா

 

Consent of your soul and that of the Lord is necessary for death
(Volume IV, 1963, Page 87)

பிரம்மமும், ஆத்மாவும் சம்மதப்படாமல் உயிர் பிரியாது

  • வாழ்வு விரிவடைந்து பிரபஞ்சத்தில் பரவி, பிரம்மத்தில் முழுமையடைகிறது.

    மனித வாழ்வு உலக வாழ்வாவதில் அந்நிலையில் பூரணம் பெறுகிறது.

    உலகத்தைக் கடந்த நிலையிலுள்ளது பிரபஞ்சம், பல ஆயிரம் உலகங்களை உட்கொண்டது.

    தனி மனிதன் தனக்காக வாழாமல் - அகந்தைக்காக வாழாமல் - பிறருக்காக வாழ ஆரம்பித்தால் மனித வாழ்வு உலக வாழ்வினின்று விரிந்து பிரபஞ்ச வாழ்வாகிறது.

    பிரபஞ்ச வாழ்வு இயற்கைக்குட்பட்டது.

    இயற்கையினின்று விடுபட்டால், பிரபஞ்ச வாழ்வு, பிரம்ம வாழ்வாகிப் பூரணம் பெறுகிறது.

  • நாமும், பிரம்மமும் சம்மதித்தாலன்றி மரணமில்லை என்பது மேற்கூறியது.
  • இது மரணத்திற்கு மட்டும் உரிய சட்டமல்ல, எல்லா பெரிய காரியங்கட்கும், சிறிய காரியங்கட்கும் பொருந்தும் அத்தியாவசியமான சட்டம்.
  • பசுமைப் புரட்சி 1966இல் ஆரம்பித்தது. சுதந்திரம் வந்து 20 ஆண்டுகளாக உணவு உற்பத்தியைப் பெருக்க மத்திய சர்க்கார் செய்த முயற்சி பெரியது. அதைச் செய்த உணவு மந்திரிகள் ஜகஜ்ஜீவன் ராம், கித்வாய், ராஜேந்திரப் பிரசாத், ராஜாஜி போன்ற பெரும் தலைவர்கள். பலனில்லை. அவர்கள் கூறியவை அனைத்தும் நாட்டுக்குப் பலன் தருபவை. எதிர்முனையில் விவசாயியுள்ளான். அவனுக்குச் சேவையுண்டு. பலனில்லை. பசுமைப் புரட்சி தான்யத்திற்கு அதிக விலை கொடுக்க முன் வந்து விவசாயிக்கும் பலன் தந்தது. பசுமைப் புரட்சி நாட்டுக்கும், நடுபவனுக்கும் பலனளிக்க முன்வந்ததால் முழு வெற்றி பெற்றது.
  • சாமி வரமும், பூசாரி வரமுமிருந்தால்தான் பலன் நம்மை வந்து அடையும்.
  • மகாத்மா காந்தி இராஜாஜியைத் தன் வாரிசு என்றார். வயதாலும், சேவையாலும், அனுபவத்தாலும், அறிவாலும் இராஜாஜி தன் ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்க வேண்டியவர். நேரு அதற்காகப் பெருமுயற்சி எடுத்தார். வடநாட்டு தலைவர்கள் நேருவைக் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. 1½ ஆண்டு கவர்னர் ஜெனரலாக இருந்தார். இராதாகிருஷ்ணன் 5 ஆண்டு ஜனாதிபதியாகவும் 10 ஆண்டு உப ஜனாதிபதியாகவுமிருந்தார். மகாத்மாவும், நேருவும் இராஜாஜிக்குக் கொடுக்க முயன்றும் அவரது சுபாவம் இடம் தரவில்லை. இராதாகிருஷ்ணன் வேதம், உபநிஷதம், கீதையை விவரமாக எழுதியவர். இனிய சுபாவமுள்ளவர். நாட்டின் ஜீவன் அவர் ஆன்மீக சேவையை ஏற்றது. கட்சித் தலைவர்கள் அவர் சுபாவத்தை ஏற்றனர். இரு முனைகளிலும் (பிரம்மமும், ஆத்மாவும்) உத்தரவிருந்ததால் இராஜாஜிக்குப் பலிக்காதது இராதாகிருஷ்ணனுக்குப் பலித்தது.
  • ஸ்தாபனத்திற்குச் சேவை செய்ய முன்வரும் உறுப்பினர் குறைவு. இல்லையென்றும் கூறலாம். குடும்பத்திற்குச் சேவை செய்யப் பலரும் முன்வருவார்கள். அதைக் குடும்பம் ஏற்றால் சேவை பலிக்கும். சேவையைப் பெறும் தகுதியுள்ள ஸ்தாபனங்கள் குறைவு. குடும்பத்தை எக்காரணத்தை முன்னிட்டும் ஆதரிக்கும் குணமுடையவர் பலர். அமெரிக்காவில் தங்கியுள்ள ஒருவர் புதுவை வந்து தன் குடும்பத்தைச் சார்ந்த அனைவரையும் சந்தித்து அவர்கள் பெற்ற கடன்கள் அனைத்தையும் அடைத்தார்.
    • எல்லா ஸ்தாபனங்களும் சேவையை ஏற்க முடிவதில்லை.
    • எல்லா ஸ்தாபனங்களிலும் சேவைக்கு முன்வருபவர்களிலர்.
    • எல்லாக் குடும்பத்திற்கும் அத்தகுதியிருப்பதில்லை.
    • எல்லோருக்கும் அம்மனநிலையிராது.
    ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதிலிருந்து நாட்டுக்குப் பிரதமராவது வரை பிரம்மமும் ஆத்மாவும் உத்தரவு தர வேண்டும்.

*******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மௌன ஜபம் மனத்தின் ஆர்வம்.
அது சமர்ப்பணத்தைப் பூர்த்தி செய்யும்.

 
 
******
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 

ஜபமான சொல்லை சக்தியான உணர்வாக மாற்றுவது சமர்ப்பணத்தின் பாதை.

 
 
******

 

 



book | by Dr. Radut