Skip to Content

04. சாவித்ரி

சாவித்ரி

P.128 Smiling like a new-born child at love and hope

பிறந்த குழந்தையின் பிழையற்ற புன்னகையின் அன்பும் ஆதரவும்

  • இறைவனின் எண்ணிறந்த சக்தியைத் தன் சுபாவத்தில் ஏற்றாள்,
  • அவளுடைய மனித இதயத்தில் திருவுள்ளத்தை அமர்த்தினாள்,
  • ஒளிமயமான அவளிதயம் வழிகாட்டியாக எவரையும் தேடவில்லை:
  • இறைவனின் சுவடான அவள் நடை தளர்ச்சியால் கறைபடவில்லை,
  • இரவின் இருள் வந்து கண்ணைக் குருடாக்கவில்லை.
  • எதிர்க்கும் வேலிக்கு வேலை தரப்படவில்லை;
  • செயல் தானே சிறந்து மிளிரும் மகிழ்ச்சி.
  • குணம் விசேஷமாகி மறந்த அவள் நிலை
  • மனத்தின் ஆர்ப்பாட்டம் எழுப்பும் வண்ணச்சிறப்பு,
  • இறைவன் எழும் வாழ்வும் மகிமை நிறைந்த கனவுகளும்,
  • எண்ணற்ற ரூபமெழுப்பும் மந்திர மாயம்
  • சிருஷ்டியின் இனிய அலைகள் தேடும் புது ரூபங்கள்,
  • அற்புத நடனத்தின் ஆச்சரியத்தைக் கூட்டிய சுருதி,
  • உடலை உணர்ந்து ஊடாடி அனுபவிக்கும் தேவதையின் ஆனந்தம்,
  • மது எழுப்பும் சிருஷ்டியின் பூரிப்பு.
  • ஆனந்த லோகத்தின் அழைப்பைக் கேட்டுணர்ந்தான்,
  • அதில் கலந்து அனுபவிக்கும் கதவைக் காணவில்லை;
  • எழுந்த பிளவை இணைக்கும் பாலமில்லை.
  • ஆத்மாவைச் சூழ்ந்த இருளான வாயு மண்டலம்
  • அமைதியற்ற வாழ்வின் பிம்பம் பிடிபடும் முடிச்சு.
  • ஏங்கும் மனமும், தவிக்கும் உணர்வும் ஏதும் பயனில்லை,
  • வருத்தமான எண்ணம் தரும் வாடிய அனுபவம்
  • கவலையும், வருத்தமும், உறக்கமும் திரையிடும் திருஷ்டி
  • அனைத்தும் ஆர்வமான கனவாகப் பிரகாசிக்கும்
  • உழலும் உலகிடை உறையும் அவன் சுபாவம்
  • எட்டியுள்ள இதயம் ஏற்கும் கருத்து.
  • லோக வேதனையின் சாயலில் நடை பயிலும் நளினம்,
  • இறைவனின் அரவணைப்பை அவன் பெற்றிருந்தபோதிலும்,
  • நின்ற இடமெல்லாம் இரவின் நிலையெனக் கண்டு.
  • உலகத்தின் கவலை உணர்த்துவதை அறியும் நிலை
  • கனத்த அச்சில் வார்க்கப்பட்ட உடலும் உயிரும்,
  • மகிழ்வால் மலரும் மகிழ்ச்சி, ஒளியால் மிளிரும் ஜோதி.
  • நினைவும் உணர்வும் நித்திய சோதனை
  • இன்பமும் துன்பமும் இணைந்து எழும் முதலசைவு

******



book | by Dr. Radut