Skip to Content

03. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

N. அசோகன்

31.
அறியாமை:
படைப்பில் இருக்கின்ற அடிப்படை ஒற்றுமையை உணராத நிலையை அறியாமை என்கிறோம்.
32.
அகம்பாவம்:
தான் தனித்து இருப்பதாக நம்முடைய அறிவு தவறாக நினைப்பதை அகம்பாவம் என்கிறோம்.
33.
இறப்பு:
ஆன்மாவின் தேவைகளுக்கு ஏற்றபடி உடம்பு செயல்படாத பொழுது உயிர் உடம்பை விட்டு அகல்வதை இறப்பு என்கிறோம்.
34.
வளைந்து கொடுக்கும் தன்மை:
இறைவனின் திருவுள்ளத்திற்கு ஏற்றபடி நம்பர்ஸனாலிட்டியின் மாற்றிக் கொள்ளும் திறனை வளைந்து கொடுத்தல் என்கிறோம்.
35.
பரிசுத்தம்:
வெளியே தெரிகின்ற சுத்தத்திற்கு நிகரான சுத்தம் மனநிலையில் இருந்தால் அதை பரிசுத்தம் என்கிறோம்.
36.
வாழ்வின் எதிரொலி:
ஒருவருடைய உள்மனநிலையின் பிரதிபலிப்பாகவெளிவாழ்க்கை வழங்கும் Responseஐ வாழ்வின் எதிரொலி என்கிறோம்.
37.
ஆழ்மனது:
நம்முடைய பர்ஸனாலிட்டியின் ஆழத்தில் நம் விழிப்புணர்வை தாண்டிய நிலைகளும் நம் விழிப்புணர்வுக்கு கீழ் இருக்கும் நிலைகளும் இணைகின்ற இடத்தை ஆழ்மனது என்கிறோம். இந்த ஆழ்மனதில்தான் நம்முடைய சைத்திய ஜீவன் ஆழ்மனக் குகையில் இருப்பதாக பகவான் சொல்கிறார்.
38.
சைத்தியப் புருஷன்:
பரிணாம வளர்ச்சியில் பங்கேற்கும் நம் ஜீவாத்மாவினுடைய பிரதிநிதிதான் சைத்தியப் புருஷன்.
39.
பெரும் கடவுள்கள்:
Overmind என்ற நிலையில் உறைகின்ற பரிணாமவளர்ச்சி இல்லாத கடவுள்களை நாம் பெருங்கடவுள்கள் என்று வர்ணிக்கின்றோம்.
40.
அசுரர்கள்:
இறைவனுக்கு உதவியாக படைப்பில் ஒத்துழைக்க உண்டான தெய்வீகப் பிறவிகள் குணம் கெட்டு இறைவனை எதிர்க்க முனைந்த பொழுது அவர்கள் அசுரப் பிறவிகளாக மாறினார்கள்.
 
 
தொடரும்.....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சத்தியஜீவியம் என்பது சத்தியத்தின் ஜீவியம்.
சத்தியஜீவியம் சித்-சக்தி.
சத்தியஜீவியம் சச்சிதானந்தத்தின் சுபாவம்.
சத்தியம், ரிதம், பிருஹத் என்பது சத்தியஜீவியம்.
சத்தியஜீவியம் என்பது சத்திய சக்தி.
சத்தியஜீவியம் காலத்தைக் கடந்தது.
சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிந்து மனம் ஏற்படுகிறது.
சத்தியஜீவியம் காரண தேகம், பிரபஞ்சம்.
 

*******



book | by Dr. Radut