Skip to Content

02. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

 • இலட்சியவாதியின் அல்ப குணம்
  இனிமையாகப் பழகுபவரின் மட்டமான சுயநலம்
  • இலட்சியவாதியான பேராசிரியர் பல்கலைக்கழகத்தில் பெரிய சர்வீஸ் செய்து, தமிழ்நாட்டில் பெரும் புகழ் பெற்று, வேலையை இழந்து, கல்லூரிப் பேராசிரியராக ஓய்வு பெற்று, குடும்பத்தில் மனம் உடைந்தார்.
  • இனிமையாகப் பழகும் பொல்லாத மனிதன் நாடெங்கும் புகழ்பெற்று, உலகப் புகழ் பெற்று, செல்வாக்கோடு சிறப்பாக இருக்கிறார்.

  எப்படிப் புரிந்து கொள்வது?

  • நல்லதும் கெட்டதும் கலந்து வரும்பொழுது பெரிய இடங்களில் நல்லது அதிகமாகவும், சிறியவரிடம் அல்பம் அதிகமாகவும் வெளிப்படும்படி நடப்பது சுபாவம். அதன் பலன் இது.
  • அன்பர்கள் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்- கின்றனர்.
  • அடி மட்டத்திலுள்ள சிறப்பு நம்மை நிர்ணயிக்கும். உயர்மட்டத்திலுள்ள குறை நம்மைக் கைவிடும்.
  • இது முக்கியமான விஷயம். அல்பம் உலகப் பிரசித்தி பெறுகிறது. இலட்சியம் காலேஜ் பேராசிரியராக ஓய்வு பெறுகிறது.
  • நம் சொந்த அனுபவத்தை ஆழ்ந்து, கூர்ந்து கவனித்தால் சட்டம் பளிச்செனப் புரியும்.
  • பெரியதும் சிறியதும் எப்படிக் கலந்து முடிவை நிர்ணயிக்கின்றன என்பது பெரிய விஷயம்.
  • பர்சனாலிட்டிக்கு நேரம் உண்டு. அந்த நேரம் எது - எந்தப் பக்கம் முனைப்பாக இருக்கிறதோ அதுவே முடிவு செய்யும்.
  • பிறந்த நாளன்று Blessing packetக்கு காத்திராமல் ஒருவர் போகிறார். அதுவும் தொழிலில் பெரிய ஆர்டர் வரும்பொழுது போகிறார் எனில் அந்த ஆர்டர் வாராது எனப் பொருள் (2 ஆண்டுக்குப் பின் அது இல்லை எனத் தெரிந்தது).

   Attitude நோக்கம் நம்மை நமக்கு உணர்த்தும்.

 • சோதனை - நல்லெண்ணம்
  வெறுப்புள்ள மனிதரிடம் செய்யும் சோதனை

  நல்லெண்ணம் ஒருவருக்கு இருப்பதும், நமக்கு அவர் மீது வெறுப்புள்ளதும் வேறு.

  எதுவும் - வெறுப்பும் - முழுசாக இருக்காது.

  இமாலயப் பலனை 3 முறை பெற்று கற்பனைக்கெட்டாத பட்டத்தை என் முழு உதவியால் பெற்றதை என்னிடம் சொல்லாமல் என்னை அவமானப்படுத்திய தமிழ்ப் பண்டிதர் எனக்கு மீண்டும் வேலை வாங்கியது போல.

  பண்டிதர் மறக்கலாம், துரோகம் செய்யலாம், அவர் பெற்ற பலன் மறக்காதல்லவா?

  "நீ வராவிட்டால் உன்னைப் பிடித்த பிசாசு வரச் சொல்லும்'.

  தூரத்து உறவு பாட்டிக்குச் சிறு பெண் மீது ஆசை. பாட்டியிடம் பெண் இப்படிப் பேசுகிறாள்.

  பிசாசும் வரச் சொல்லும், ஒரு காலத்தில் நினைத்த நல்லெண்ணமும் செயல்படும்.

  நல்லெண்ணம், கெட்ட எண்ணம், பாராட்டு, திறமை எதுவானாலும் ஒரு முறை உள்ளே வந்துவிட்டால் போகாது.

  ஏதாவது ஓரளவு பலன் இருக்கும்.

  அதனால் செய்வது சரியாக இருக்க வேண்டும்.

  ஏராளமானவை சேர்ந்திருக்கலாம் - எதுவும் போகாது.

  சமர்ப்பணத்திற்கு அந்தப் பவர் உண்டு.

  அந்தச் சுத்தம் இந்த நேரமிருக்குமா?

  நல்லெண்ண சோதனை பலிக்கும், வெறுப்பை மீறியும் பலிக்கும்.

  நல்லெண்ணம் கொடுப்பது பெரியது, பெறுவது அதைவிடப் பெரியது.

  நல்லெண்ணம் வரும்பொழுது நம் தகுதிக்கு வருகிறது என நினைப்பது பெறுவதாகாது.

  நல்லெண்ணத்தை நல்லெண்ணமாக ஏற்க வேண்டும்.

  ஒரு நல்ல எண்ணம் எல்லாவற்றையும் மீறிப் பலிக்கும்.

  தற்சமயம் ஒரு கெட்ட எண்ணம் எல்லாவற்றையும் மீறிக் கெடுக்கும்.

  நேரம் வந்துவிட்டால் நேர்மை புரியும்.

  அன்னையிடம் நேர்மையாக நடக்க முடியுமா?

  நேர்மை பெரியது, அன்னையிடம் நேர்மை அதைவிடப் பெரியது.

 • மனிதன் அதிர்ஷ்டத்தை விட்டு விலகுவான், தரித்திரத்தின் மீதுள்ள பிடியை விடமாட்டான். (Taste of Ignorance) அஞ்ஞான ருசி என்கிறார் பகவான்.
  • தரித்திரம், குதர்க்கம், மட்டம், குத்தல், இருப்பது, பொறாமை ஆகியவற்றை நாம் உணர்கிறோம், அறிவதில்லை, ஆராய்ச்சி செய்வதில்லை. பண்பு வளர்ந்தால்தான் அவை வளரும். Rival என்பதற்கும் enemy என்பதற்கும் எதிரி என்றே தமிழில் கூறுகிறோம். போட்டியிடுபவன் ஒருவன், அழிக்க முயல்பவன் அடுத்தவன்.
  • மனம் வளர்ந்தால்தான் சொல் வளரும். சொல் நயமாக நளினமாக வளர்ந்திருப்பது பண்பு வளர்ந்திருப்பதைக் காட்டும். நமக்குப் பொறாமை, போட்டி தெரியும். அவை மேற்கொண்டு விவரமாக வெளிப்படவில்லை. பொறாமை என்பது எத்தனை வகை? இலாபம், வெற்றி, காதல், அன்பு, பிரபலம், செல்வாக்கு என்பவற்றுள் ஏற்படும் எல்லாவற்றையும் நாம் பொறாமை என்ற ஒரே சொல்லால் குறிக்கிறோம். அவர்கட்குப் பொறாமைப்படுவது மட்டம். எனக்குப் பொறாமையில்லை என அதிகம் பேர் சொல்லமாட்டார்கள். ஏனெனில், பாராட்டுதல், உயிரை விடுவது, பெண்மையின் இனிமை, ஆண்மையின் உயர்வு, போற்றுதல் என்பவற்றைப் பொறாமையிலிருந்து நடைமுறையில் பிரித்து உணரும் பக்குவம் அவர்கட்குண்டு, பற்று, பிரியம், பாசம், வேகம், கவர்ச்சி, ஆழ்ந்த பற்று, நாட்பட வாராது என ஏராளமான பொருள் மாறும் சொற்கள் உண்டு. அதனால் காதலில் பொறாமை என்பதை preciseஆக உணர்வில் பிரித்து, சொல்லால் குறிப்பிட ஆங்கிலத்தில் முடியும். தமிழிலும் பல இடங்களில் சூட்சுமம், நுணுக்கம் என்பன போன்ற சொற்கள் பயன்படுகின்றன. இரண்டும் கலந்து எழுவது சிறப்பாக இருக்கும்.
  • அஞ்ஞான ருசி அது போன்ற சொல். அதை விளக்க ஒரு முழு கட்டுரை எழுத வேண்டும். அதன் சூட்சும இரகஸ்யம்: பற்று, பாசமாகி, இலட்சியமாக தரித்திரத்தை அனுபவிக்கும் வினோதம் அருள் கண்ணில் படாமல் விலக்குகிறது.
 • அஞ்ஞானம் ருசிக்கும்
  • உள்ளதை ஆழ்ந்து உணர்ந்து ரசிப்பவன் அதையே உலகம் என அறிவான்.
  • அனுபவித்து அறிவது அறிவுடைமை என்றால், அறியாமையை அனுபவிப்பவன் அதையே அறிவு எனக் கொள்கிறான்.
  • கட்டுப்பெட்டி, மடிசஞ்சி, 1900 முதல் ஆரம்பித்த பொழுது மாறியவரைக் கண்டு மாறாதவர் மனம் புழுங்கினர். நல்லதை விட்டு கெட்டதை நாடுவதாக நினைத்தனர்.
  • வெளியூர் சம்பந்தம், புதிய பயிர், ஆங்கிலப் படிப்பு (நீச பாஷை), ஷர்ட் போடுவது, கிராப் வெட்டிக் கொள்வது, வெளியூர்ப் பயணம் பாவமாக கருதி மக்கள் மனம் புண்பட்டனர்.
  • இன்று,
   • செலவு செய்தால் பணம் பெருகும் என்பது கசக்கிறது.
   • சுப முகூர்த்தம், நல்ல நேரம், நல்ல சகுனம், "துடைக்காதே' போன்ற பரம்பரை பழக்கங்கள் நம்மை அதிர்ஷ்டத்திலிருந்து விலக்கும் என அறிய முடிவதில்லை.
   • சம்பளத்திற்கு வேலைக்குப் போனால் பரம்பரை தரித்திரத்தை உறுதி செய்வதாக எவரும் நினைப்பதில்லை. அதை அதிர்ஷ்டம் எனக் கருதுகிறார்கள்.
   • டாக்டர் வியாதியை உற்பத்தி செய்து பிறகு குணப்படுத்துகிறார் என்பது பகவான் கூறுவதை காதால் கேட்டுக் கொள்ளவும் முடிவதில்லை.
   • வலிய பிறருக்கு உதவி செய்வதைப் போன்ற பரந்த மனப்பான்மையில்லை என்பது சமூகம் முடிவாக அறிந்தது.

    அது பெறுபவருக்கோ, செய்பவருக்கோ பலன் தாராது. ஊறு செய்யும் என்பதை நம்ப முடியாமல் கேட்டுக் கொள்கிறோம்.

   • பட்டம் பெற்றால் அதன் பிறகு அறிவு வரும் வாயில் நிரந்தரமாகத் தடையாகும் என்பதை எடுத்துச் சொல்ல உலகில் ஒரு இடமும் இருப்பதாகத் தெரியவில்லை.
   • பாசம் அன்பிற்குத் தடை என்பதை யாராவது ஏற்பாரா?

    பாசம் விலங்கு போன்ற உடல் உணர்ச்சி.

    அன்பு அறிவுபூர்வமான உயர்ந்த உணர்ச்சி.

    பாசம் உள்ளவரை அன்பு பிறக்காது என்பதை உயர்ந்தோர் அறிவர்.

    உலகம் ஏற்குமா?

    பாசம் என்ற அஞ்ஞானம் ருசிக்கிறது.

    பட்டம் என்ற அறியாமை பலிக்கிறது.

    உத்தியோகம் மனிதனை உயர்த்துகிறது என்பது உலகம் ஏற்பது.

    இது பரிதாபத்திற்குரிய மனப்பான்மை என்பதை மறந்து உத்தியோகம் உணர்வின் ஆழத்தில் இனிக்கிறது.

   • மனிதன் ஆதி நாளிலிருந்து மூட நம்பிக்கைகளால் இதுவரை முன்னேறினான்.

    அதை உலகம் ஏற்கும்.

    இன்று அதிகபட்ச மூட நம்பிக்கைக்கு ஆளானவர்கள் விஞ்ஞானிகள்.

    அவர்களே உலகை நடத்துபவர்கள்.

    அவர்கள் வெற்றி டெக்னாலஜியால் வந்தது.

    விஞ்ஞானத்தால் வரவில்லை.

    பகவான் அவர்களை நோக்கி, "உங்கள் கூற்றுப்படி ஷேக்ஸ்பியரை விட விருந்து உயர்ந்தது என்றாகிறது.

    ஏற்கலாமா?'' எனக் கேட்கிறார்.

    பேரிலக்கியங்களை எழுதியவர்களை விஞ்ஞானம் இன்று ஏற்கவில்லை.

    அவற்றை எழுதியது மனமில்லை, அறிவு, மூளையெழுதியது, மூளையில் செயல்படும் இராசயனப் பொருள்களின் பலன் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    அறிவை அவர்கள் மறுக்கிறார்கள்.
    ஆத்மா இல்லை என்கின்றனர்.
    நமக்கு அவர்களே இன்று தலைவர்கள்.

    விஞ்ஞானியின் அறியாமை இன்று உலகுக்கு ருசிக்கிறது.

    இது பரிதாபமான நிலை என்கிறார் பகவான்.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தமிழ் என்பது வெறும் மொழியில்லை. அது இனிமை என்பது மொழியின் வாயிலாக மொழியும் பண்பு. அப்பண்பு இனிமையாக வெளிப்படும் மொழியே தமிழ் எனப்படும்.
 
 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நாம் இயற்கை; உள்ளே இருளாக இருக்கிறோம். அன்னையை அழைத்தால் உள்ளே ஒளி தெரிகிறது; அது ஜீவன். சமர்ப்பணம் உச்சமாக இருக்கும்பொழுது ஒரு கரணத்துள்ளிருந்து - மனம் முதலியவை - ஒளி எழுவது பிரகிருதியின் ஜீவன்; வளரும் ஆன்மா; சைத்தியப்புருஷன்.
 
 
 
******book | by Dr. Radut