Skip to Content

11. அஜெண்டா

அஜெண்டா

சத்தியஜீவிய சக்தி உடலில் உள்ள மனத்தில் (material mind) செயல்பட்டதால் குணமான வியாதியைப் பற்றிய செய்தி இது.

–Volume IV, Page 73

இவர் பாரிஸில் உள்ள அன்பர். 3 முறை எச்சரிக்கை வந்ததை இவர் பாராட்டவில்லை. ஒரு நாள் உடல் பாதி பாரிச வாயுவில் பாதிக்கப்பட்டது. அடுத்த பகுதிக்கும் பரவ ஆரம்பித்தது. (இடப் பக்கம்). அந்த நேரம் அன்பர் அழைத்தார். ஒரு பாதி அசைவிழந்தும், அடுத்த பகுதிக்கு அது தொடர்வதையும் கண்டார். ஒரு சில நிமிஷத்தில் ஒரு பிரம்மாண்டமான சக்தி தன்னுள் நுழைவதைப் பார்த்தார். வியாதி பரவுவது உடனே நின்றது. இடப் பக்கம் பாதிக்கப்படவில்லை. வலப் பக்கம் குணமடைய ஆரம்பித்தது. அன்னைக்கு தந்தி வந்தது. அன்பர் இதயம் பாதிக்கப்பட்டதுஎன தந்தி கூறியது. உண்மையில் பாதிக்கப்பட்டது இதயமில்லை. மூளை பாதிக்கப்பட்டது. "என் கையில் தந்தியிருந்தது. அதன் மீது ஒன்றுமில்லை, கவலைப்பட வேண்டாம் என எழுதியிருந்தது'' என்று அன்னை கூறினார். பிறகு விபரமான கடிதம் வந்தது. கடிதம் வந்தவுடன் அன்னை சிரித்து, "ஒன்றுமில்லை, கவலைப்பட வேண்டாம்'' என்று கூறினார். அன்பர் அருகே ஒரு சக்தியைக் கண்டார். அது வாழ்விலில்லாத சக்தி. அது அதிசயமாகச் செயல்பட்டது.

-----------------------------------------------------------------------------------------------------

மேலே கூறியது அஜெண்டா செய்தி. இது எப்படிச் செயல்படுகிறதுஎன ஓரளவு உதாரணம் மூலம் கூறலாம். நரம்பு, மூளை வேலை செய்யும் உதாரணத்தாலும், கம்ப்யூட்டர் மூலமாகவும், இன்டர்நெட் மூலமாகவும் கூறலாம். ஊர் நடைமுறை மூலம் விளக்கலாம். பேர் அளவுக்கு விஷயங்கள் விளங்கும்.

  • முடிவான கட்டத்தில் முழுமையாக விளங்க அன்னையை உள்ளுணர்வில் அறிய வேண்டும். 

சில உதாரணங்கள்:

  1. காலில் கட்டி வந்திருக்கும். ஜுரம்எனில் மருந்து போடுகிறோம், சில நாட்களில் குணமாகிறது. சில சமயங்களில் குணமாக நாளாகிறது. உடல் தெம்பு இழந்து போகிறது. என் ஆசிரியர் அதிக அனுபவமுள்ளவர். அவர் கட்டியைப் பார்த்து சிரிக்கிறார். அடுத்த வாரம் பரிட்சை வருகிறது. அதற்குப் போக விருப்பமில்லாததால் கட்டி வருகிறது என்கிறார். நான் அவர் கூறுவதை அப்படியே நம்பினேன். என் மனத்தை சோதனை செய்ததில் உண்மையறிந்து வெட்கப்பட்டேன். இரவு தூங்கி எழுந்தேன். தூக்கம் ஆழ்ந்து அமைதியாக இருந்தது. கட்டி நினைவில்லை. குளிக்கப் போனபொழுது கட்டியிருந்த இடத்தில் கை பட்டது. கட்டி வாடி சுருங்கி மறைந்துவிட்டது.
    • மனம் உடலைக் கட்டுப்படுத்துவதால் மனத்தெளிவு கட்டியைக் குணப்படுத்தும்.
  2. திடீரென கொல்லையில் திருடு போகிறது. கட்டுப்படவில்லை. அதிகமாக முயன்றால் அதிகமாகத் தொந்திரவு வருகிறது. பிறகு விவரம் தெரிந்தவர் ஒருவரை விசாரித்தேன். "உங்கள் பக்கத்துக் கொல்லையை வாங்க நினைப்பது நாட்டாமைக்கு ஒத்து வரவில்லை. அதனால் இது நாட்டாமைக்காரன் கொடுக்கும் தொந்திரவு'' என்று சொன்னார். கொல்லை சொந்தக்காரர் மைத்துனர் இன்ஸ்பெக்டராக இருப்பது நாட்டாமைக்குத் தெரியாது. இன்ஸ்பெக்டர் நாட்டாமைக்- காரரை அழைத்து திருட்டு விவரம் கேட்டார். திருடு நின்றுவிட்டது.
  3. நரம்பு உடலைக் கட்டுப்படுத்துகிறது. மனம் நரம்பைக் கட்டுப்படுத்துகிறது. நரம்பில் உள்ள மனம் அதிக பலம் வாய்ந்தது. செல்லில் மனம் உண்டு (cellular mind). இதைவிட அதற்கு பலம் அதிகம். அதையும் கடந்து உடல் ஜடமாக இருப்பதில் ஜட மனம் material mind உள்ளது. அது க்ஷணத்தில் குணப்படுத்தும்.
  4. சத்தியஜீவிய சக்தியை நாம் எந்த ஆழத்தில் பெறுகிறோமோ, பலன் அது போலிருக்கும். மேற்சொன்ன நிகழ்ச்சியில் material mind சக்தியைப் பெற்றதாக அன்னை கூறுகிறார். அதனால் குணம் அதிசயமாக வருகிறது.
  5. 25, 30 வருஷத்திற்குமுன் கையால் எழுதி டைப் செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் வந்தபின் நேரடியாக டைப் செய்யலாம். எழுதியதை ஸ்பெல்லிங் திருத்த நாம் ஒரு முறை படிக்க வேண்டும். கம்ப்யூட்டரே தவறு இருந்தால் திருத்தச் சொல்கிறது. ஸ்பெல்லிங் திருத்துவது போல் வேறு பிழைகளையும் கம்ப்யூட்டர் திருத்துகிறது. ஒரு புத்தகத்திற்கு index எழுத பக்கம் பக்கமாகப் படித்து சொற்களை வரிசைப்படுத்தி எழுத புத்தகம் எழுதியதைவிட அதிக நாள் வேலை. கம்ப்யூட்டரில் புத்தகமிருந்தால் எந்த எந்த சொல் indexஇல் இருக்க வேண்டும் என டைப் செய்தால் கம்ப்யூட்டர்
    1. அச்சொற்களை அகர வரிசைப்படுத்தும்.
    2. அச்சொற்கள் வரும் பக்கங்களை தானே டைப் செய்யும். 
    பல நாள் வேலை சில மணியில் தவறின்றி முடியும்.
    நாம் எந்த software பயன்படுத்துகிறோம்,
    எந்த அளவுக்கு நமக்குக் கம்ப்யூட்டரில் பழக்கமிருக்கிறது என்பதைப் பொறுத்துப் பலன் உண்டு.

அன்னையை நாம் எந்த அளவில் ஏற்றுக் கொள்கிறோமோ அந்த ஆழத்தில் அவர் சக்தி செயல்படும். கம்ப்யூட்டரில் உள்ள இவ்வளவு வேலையும் கம்ப்யூட்டர் தெரியாத அன்பர் பெற அவர் ஆழ்ந்து அன்னையை அழைத்தால் பாரிச வாயு அதிசயமாகக் குணமானதுபோல் இத்தனையும் செய்யும் வசதி உடனே அன்பருக்கு எழும்.

********



book | by Dr. Radut