Skip to Content

04. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XX. Death, Desire, and Incapacity
20. மரணம், ஆசை, இயலாமை
Life is Power.
Page No.191
Para No.5
வாழ்வு பவர்.
The individual life grows.
தனி நபர் வாழ்வு வளர்கிறது.
It means growth of individual life.
அதன் மூலம் தனி நபர் வாழ்வு வளர்கிறது.
It is a divided individual life.
தனி நபர் வாழ்வு முழுமையானதன்று.
It wants to master its world.
தன் உலகையாள அது முயல்கிறது.
The force really prevents it.
பிரிந்த சக்தி அதற்குத் தடையாகிறது.
It means something.
அதற்கு அர்த்தமுண்டு.
It is to be master of the All-Force.
எல்லா சக்திகட்கும் தலைவனாவதாகும்.
This consciousness is individual and divided.
இந்த ஜீவியம் தனி நபர் ஜீவியம், பிரிவினைக்குட்பட்டது.
Its power is divided, individual.
அதன் சக்தி தனி நபருடையது, முழுமையற்றது.
Therefore it is limited.
பிரிந்ததால், சக்தி அளவுக்குட்பட்டது.
Its will to be master of the All-Force too is limited; only the
All-Will can be that.
அனைத்து சக்திகளையும் ஆள்வதும் அளவுக்குட்பட்டது. அனைத்தின்
உறுதியே அதைச் செய்ய முடியும்.
The individual will can do so by becoming one again with the
All-Force and All-Will.
தனி நபர் உறுதி அனைத்துடன் சேர்ந்தால் அதைச் செய்யலாம்.
The individual life is in the individual form.
தனி நபர் வாழ்வு தனி நபர் ரூபத்திலுள்ளது.
It is always subject to the three badges.
அதற்கு எப்பொழுதும் மூன்று விலாசம் உண்டு.
They are Death, Desire, Incapacity.
அவை மரணம், ஆசை, இயலாமை.
Death is imposed on the individual life.
Page No.192
Para No.6
மனித வாழ்வை மரணத்திற்கு உட்படுத்துகிறார்கள்.
Its own condition of existence permits it.
அதன் நிலையே அதை அனுமதிக்கிறது.
It has a relation to the All-Force.
அனைத்து சக்தியுடன் அதற்குத் தொடர்புண்டு.
It manifests in the universe.
அது பிரபஞ்சத்தில் வெளிப்படுகிறது.
Its relation with the All-Force imposes it.
அனைத்து சக்தியுடன் உள்ள தொடர்பும் அதற்காதரவு.
The individual life is a particular play of energy.
தனிநபர் வாழ்வு சக்தியின் குறிப்பிட்ட செயல்.
It is specialised.
அதன் செயல் குறிப்பானது.
It is to constitute, maintain and energise.
உருவாக்கி, காப்பாற்றி, சக்தியால் நிரப்புவது அதன் வேலை.
Finally it is to dissolve.
முடிவாக அது கரைய வேண்டும்.
It does so when its utility is over.
அதன் வேலை முடிந்தவுடன் அது கரைகிறது.
It is one of the myriad forms.
கோடிக்கணக்கான ரூபங்களில் அது ஒன்று.
All of which serve.
அனைத்தும் சேவை செய்கின்றன.
Each is in its own place.
ஒவ்வொரு ரூபமும் அதற்குரிய வேலையைச் செய்கின்றன.
Each in its time and scope.
ஒவ்வொன்றிற்கும் உரிய காலம், அளவுண்டு.
All serve the whole play of the universe.
அனைத்தும் பிரபஞ்ச லீலையை சேவைக்காக ஏற்கின்றன.
There is energy of life in the body.
உடலின் உயிரில் சக்தியுள்ளது.
There is energy in the external.
புறத்தில் சக்தியுள்ளது.
It attacks the former.
உடலின் சக்தியை புறத்தின் சக்தி தாக்குகிறது.
It comes from the universe.
தாக்குதல் பிரபஞ்சத்தினின்று எழுகிறது.
It has to draw them in and feed upon them.
அது அவற்றை ஏற்று அதன் வழி வளர வேண்டும்.
It is itself being constantly devoured by them.
புறத்தால் அகம் முழுமையாக விழுங்கப்படுகிறது.
All Matter according to the Upanishad is food.
ஜடம் அன்னம் என உபநிஷதம் கூறுகிறது.
"The eater eating is himself eaten."
"விழுங்குபவன் விழுங்குவதால் விழுங்கப்படுகிறான்.''
The life is organised in the body.
உடலில் வாழ்வு அமைந்து செயல்படுகிறது.
It is constantly exposed.
அது எப்பொழுதும் தாக்கப்படலாம்.
It is to the possibility of being broken up.
எந்த நேரமும் அது உடைக்கப்படலாம்.
It is by the attack of the external forces.
தாக்குதல் புறத்தினின்று எழும்.
Its devouring capacity is insufficient.
அதன் விழுங்கும் திறன் போதாது.
Or, it is not properly served.
அல்லது அதன் திறமைக்குப் போதுமான ஆதரவில்லை.
Or, it does not have a balance it needs.
அல்லது, தேவையான சமநிலையில்லாமலிருக்கலாம்.
The balance is between a capacity as well as necessity.
ஒரு திறமையும், அவசியமும் சமமாக இருக்க வேண்டும்.
The capacity is one of devouring.
திறமையென்பது விழுங்கும் திறமை.
The necessity is one of providing food.
உணவு சப்ளை செய்வது தேவை.
The food is for the life outside.
புற வாழ்விற்கு உணவு தேவை.
It is unable to protect itself.
அது தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.
It is devoured.
அதை விழுங்கிவிடுகிறார்கள்.
It is unable to renew itself.
தன்னை அதனால் புதுப்பிக்க முடியவில்லை.
Therefore it is wasted away and broken.
அதனால் அது அமிழ்ந்து உடைகிறது.
There must be a renewal.
அது புதுப்பிக்கப்பட வேண்டும்.
It must be newly constructed.
அல்லது புதியதாய் சிருஷ்டிக்கப்பட வேண்டும்.
For that it must pass through the process of death.
அதற்கு அது மரணத்தின் வழி செல்ல வேண்டும்.
Not only so.
Page No.192
Para No.7
இது மட்டுமன்று.
Let us see the language of the Upanishad.
உபநிஷதம் கூறுவதைக் கருதுவோம்.
The life-force is the food of the body.
வாழ்வின் சக்தி உடலின் உணவு.
The body is the food of the life-force.
உடல் வாழ்வின் சக்திக்கு உணவு.
In other words.
வேறு வகையாகக் கூறலாம்.
The life-energy in us does two functions.
வாழ்வின் சக்திக்கு இரு கடமைகளுண்டு.
It supplies the material.
தேவைப்படும் சரக்கை சப்ளை செய்கிறது.
The body is built by this material.
ரூபம் உருவாகும் சரக்கு இது.
It constantly maintains and renews it.
தொடர்ந்து அதை நிர்வாகம் செய்து புதுப்பிக்கிறது.
At the same time it is constantly using up the substantial form.
அதே சமயம் அதன் வலுவான ரூபத்தால் அதைப் பயன்படுத்துகிறது.
It is a form of itself.
அந்த ரூபம் அதனுடையதே.
It thus creates.
அப்படி அதைச் சிருஷ்டிக்கிறது.
It keeps it in existence.
அதை உயிருடன் வைக்கிறது.
The balance between the two operations may become imperfect.
இந்த இரு செயலிடையேயுள்ள சமநிலை சரியில்லாமலிருக்கலாம்.
Or disturbed or the ordered play of the different currents of life-force is thrown out of gear.
அல்லது இவ்விரு நீரோட்டங்களில் ஒழுங்கு தடைப்படலாம்.
Then disease and decay can intervene.
அப்பொழுது நோயும் அழிவும் எழும்.
It commences the process of disintegration.
மரணம் அப்படி ஆரம்பிக்கிறது.
There is a struggle for conscious mastery.
ஆள முயலும் போராட்டம் தெளிவாக நடக்கிறது.
Mind is growing.
மனம் வளர்கிறது.
They together make the maintenance of the life more difficult.
இவையிரண்டும் சேர்ந்து வாழ்வை நிர்வாகம் செய்வதை சிரமமாக்குகின்றன.
Form is a reality.
ரூபம் அவசியம்.
It has an increasing demand on energy.
ரூபம் நிலைக்க மேலும் மேலும் சக்தி தேவைப்படுகிறது.
It is in excess of the original system of supply.
தேவை முதலில் செய்த ஏற்பாட்டைவிட அதிகமாக இருக்கிறது.
It disturbs the original balance of supply and demand.
தேவைக்குரிய சப்ளைஎன்ற சமநிலை இதனால் பாதிக்கப்படுகிறது.
A new balance can be established.
புதிய சமநிலையை ஏற்படுத்தலாம்.
Before that many disorders are introduced.
அதைச் செய்யும்முன் பல தொந்தரவுகள் எழுகின்றன.
They are inimical to harmony.
அவை சுமுகத்திற்கு எதிரானவை.
It is so to the length of maintenance of life.
ஆயுளுக்கும் அவை எதிரானவை.
There is something in addition.
இத்துடன் வேறொன்றும் உண்டு.
It is the attempt at mastery.
வாழ்வை ஆள முயல்வது அது.
It always creates a corresponding reaction.
அதற்குரிய எதிர்ப்பு எழுகிறது.
It is full of forces.
அதனுள் ஏராளமான சக்திகள் உண்டு.
They also desire fulfillment.
அவையும் பூரணத்தை நாடுகின்றன.
Therefore they are intolerant.
அதனால் அவற்றிற்கு பொறுக்க முடியவில்லை.
Existence seeks to master them.
பிரபஞ்ச வாழ்வு அதனை ஆள முயல்கிறது.
They revolt against existence and attack it.
அதனால் அவை எதிர்த்துப் போர்க்கோலம் பூண்டு தாக்குகின்றன.
There too a balance is disturbed.
இதுவும் சமநிலையை தொந்திரவு செய்யும்.
A more intense struggle is generated.
அதிதீவிரமான போராட்டம் எழுகிறது.
The mastering life is strong.
ஆள முயலும் வாழ்வு வலுவானது.
It cannot always resist and triumph.
அதனால் எதிர்த்து எப்பொழுதும் வெற்றிகாண முடியாது.
For that it must be unlimited.
வெற்றிபெற சக்தி அளவு கடந்திருக்க வேண்டும்.
Or it should succeed in establishing a new harmony.
அல்லது உயர்ந்த புதிய சுமுகத்தை அது ஏற்படுத்த வேண்டும்.
This harmony must be with its environment.
சூழலுடன் இந்த சுமுகம் ஏற்பட வேண்டும்.
Contd....
தொடரும்....

******



book | by Dr. Radut