Skip to Content

03. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி  

  • (Intra-conscient) - அகச்சூழல், நம் கரணங்களிடையே உள்ள சூழல்.
    • ஆன்தொனி டிராலப் கதையொன்றில் Mr.டேல் என்பவர் தம் அண்ணி, அவர் பெண்களிடம் மிகப் பொறுப்பாகவும் பிரியமாகவுமிருக்கிறார். அவர் அண்ணன் இறந்துவிட்டார். இவர்கள் அவர் ஆதரவில் வாழ்கிறார்கள். ஆனால் அவர் குரலில் மென்மையில்லை.

      மனம், உடல்போன்ற இரண்டு பகுதிகளை இணைக்குமிடம் அகச்சூழல் (intra-conscient). இது பிரம்மாண்டமானது. நமக்குக் கட்டுப்படாதது. நாமறியாதது. ஏன் அப்படிப் பேசினேன்என எனக்குத் தெரியவில்லைஎன்பது இங்கிருந்து எழுவது. மனம் - உணர்ச்சி; உணர்ச்சி - உடல்; ஆத்மா - மனம் ஆகிய இடங்கள் இதற்குரியது.

      யூனிவர்சிட்டியில் ஒரு பையன் பெண்கள் பெஞ்சிற்குப் பின்னால் உட்கார்ந்திருந்தவன் எட்டி இடுப்பைத் தொட்டுவிட்டான். அவள் வீல்எனக் கதறினாள். வகுப்பு பீதியுற்றுக் கலைந்தது.

      தூக்கலான ரவிக்கை வந்த புதிது.
      "ஏன் தொட்டேன்என நானறியேன்'' என்றான்.
      இது intra-conscient செயல்.
      மனிதன் இதுபோன்ற விலங்காக இருக்கும்பொழுது நாம் காணும் பண்பு (culture) நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

      ஆபத்தில்லை, கேட்கமாட்டார்கள் என்றால் கஜானாவைத் திறந்து கொள்ளையடிக்கத் தயங்குவதில்லை.

      அன்று பெரிய தலைவர்களாக இருந்தவர் பேரன்கள் இன்று அடிக்கும் கொள்ளை நம்ப முடியவில்லை.
      தமிழ்நாட்டில் பெரிய தியாகியின் பேரன் நாத்திகப் பிரசாரகராக இருக்கிறான்.
      தரிசனத்தில் என்னைப் பார்த்து, "என்ன விசேஷம் இங்கு?'' எனக் கேட்டான்.
      "Mother பால்கனியில் வருவார்கள், வேடிக்கை பார்க்க வந்திருக்கிறார்கள்'' என்றேன்.
      வேடிக்கையில்லை, "தரிசனம்' என என்னைத் திருத்தினான்.
      தியாகியின் பேரன் நாத்திகம் பேசுகிறான்.
      அவனுக்கு உள்ளிருந்து "தரிசனம்”என்ற சொல் எழுகிறது.
      இவை இரு பகுதி - மனம், உடல் - இடையேயுள்ள புதைந்துள்ள பொக்கிஷம்.
      இவை (negative) வேண்டாதவை.
      அவை வேண்டியதானால் (positive) தாழ்த்தப்பட்டவன் ஜனாதிபதி ஆவான்.
      நம்மை உள்ளே நாமறிய வேண்டும்.
      நல்லதிற்குப் பெருமைப்படுவதும், கெட்டதற்கு வெட்கப்படுவதும் எரிச்சல்படுவதாகும் (reaction).
      அன்னை தருவது உலகம், உலகம் முழுவதும்.
      நாம் கேட்பது சிறிய பிரார்த்தனை.
      நமக்குக் கேட்கத் தெரியாது.

      ராஜா ஒருவனை பட்டம் கட்ட அழைத்தார்.
      தானே தருவதற்குப் பதிலாக, "என்ன வேண்டும்?'' எனக் கேட்டார்.
      "அரையணா வேணும்'' என்றான்.
      கேட்பதைவிட அதிகமாகக் கொடுக்கக் கூடாது என்று அரை அணா (3 நயா பைசா) கொடுத்தனுப்பினார். இது ரமண மகரிஷி கதை.
      இதுபோன்ற கதைகள் உள்ள புத்தகம் எளிமையாக இருக்கும். எவரும் படிக்கலாம்.
      ஸ்ரீ அரவிந்தம்என 1000 கதை எழுதலாம் - பிரபலமாக இருக்கும்.
      உள்ளம் பெரியதானால், உலகம் அதனுள் எழும்.

  • ஹார்டிங் என்ற வார்டன் நல்ல குணம் பலஹீனம்.
    Warden, Harding's goodness is a weakness.
    • ஹார்டிங் என்பவர் தெய்வ பக்தி, இனிமை, நேர்மைக்கு எடுத்துக்காட்டான ஆங்கிலப் பாதிரியார். 70 வயது. அவரை எட்டு அனாதைகள் உள்ள தர்மசாலைக்கு வார்டனாக நியமித்து மாதம் 1000/- ரூபாய் (150 வருஷத்திற்கு முன்) கொடுத்தார்கள். இந்த அனாதைகளுக்கு தினசரி அலவன்ஸ் 1டீ ரூபாய். அன்று இது இந்தியாவில் ஒரு குமாஸ்தா மாத சம்பளம் (ரூ.40/-). ஹார்டிங் ஊர் முழுவதும் நல்லவர்எனப் பெயரெடுத்தவர். அவர் மகளை Mr.போல்ட் திருமணம் செய்ய நிச்சயித்துள்ளார். போல்ட் பணக்கார டாக்டர். அவருக்குப் பொதுச் சேவை செய்ய ஆவல் ஏற்பட்டு இந்த அனாதை ஆசிரமத்தை ஆராய்ச்சி செய்கிறார். அனாதைக்கு 40 ரூ. தரும்பொழுது வார்டனுக்கு 1000/- ரூபாய் தருவது அநியாயம்எனத் தோன்றுகிறது. வார்டன் தாம் மணக்க இருக்கும் பெண்ணின் தகப்பனார். இதில் ஹார்டிங் தவறு எதுவுமில்லை. சம்பளம், அலவன்ஸ் டிரஸ்டிலிருந்து வருகிறது. இலட்சியம் கண்ணை மறைத்தது. ஹார்டிங் மீது கேஸ் போட்டார். போட்டவர் நல்லவர். இதனால் ஹார்டிங் மனம் புண்படுவார்என அவரால் நினைக்க முடியவில்லை. ஹார்டிங் நொந்துபோய் ராஜினாமா செய்கிறார். பெண் போல்டை மணக்க மறுக்கிறாள். கேஸை வாபஸ் செய்து பெண்ணை மணக்கிறார். ஹார்டிங் வேலை போனது போனதுதான். டாக்டருக்கு என்ன தவறுஎனப் புரியவில்லை. திருமணம் செய்தவர் ஓர் ஆண்டில் இறந்துவிட்டார். அறிவில்லாமல் இலட்சியத்தின் பெயரால் நல்ல மனிதர் மனத்தைப் புண்படுத்துவது கொலைக்கொப்பாகும். இதுவே அவர் மரணத்திற்குக் காரணம். இது பிரபல ஆங்கில நாவல். நல்லவர்கள் அறிவில்லாமல் நல்லவரைத் தொந்திரவு செய்வது. இதனால் இக்கதை பிரபலமாயிற்று.

      சத்தியம் ஞானம் பெறுவது நல்ல குணம்.
      சத்தியமோ, ஞானமோ குறைவாக இருந்தால் Goodness - நன்மை - பூரணமாக இருக்காது.
      தெம்பில்லாதவனுடைய நல்ல குணம், நல்ல குணமில்லை.
      அது அவனுக்கும் பிறருக்கும் தொந்திரவு தரும்.
      பல வகையான நல்ல குணங்களை ஆராய்வோம்.
      எந்த குணம் இருப்பதாலும் அடுத்தது ஒன்று இருக்க வேண்டும் என்ற அவசியமில்லையென பகவான் கூறுகிறார்.

      படித்தவன் தவறு செய்யமாட்டான்.
      பெரிய மனிதன் நேர்மையாக இருப்பான்.
      தலைவர் நியாயம் பேசுவார்.
      ஜட்ஜ் நியாயம் வழங்குவார்.
      வக்கீல் நம் கேஸை ஜெயிக்க முனைவார்என்று நாம் நினைப்பது சரியில்லை.
      படிப்பால் அறிவு வரும், குணம் வாராது.
      பெரிய மனிதனுக்கு அதிகாரம் உண்டு. அது நேர்மையாக இருக்கும் அவசியமில்லை என்பனபோன்ற அடிப்படை உண்மையை இக்கதை எடுத்துக் கூறுவதால் இது பிரபலமாயிற்று.

      • குணம் பல வகையின. எது இருந்தால் அடுத்தது இருக்கும் என அறுதியிட்டுக் கூற முடியாது. எந்த இரு குணங்களும் ஒருவரிடமிருக்கலாம். பொறுமை, கருமித்தனம்; அறிவு, அவசரம் கலந்து வரும்.
      • பொதுவாக, சில குணங்கள் சேர்ந்து காணப்படுகின்றன. Eg. அறிவு, திறமை. அது தற்செயலானது.
      • நாம் படித்தவன் நியாயமாக இருப்பான். பணக்காரன் நல்லவனாக இருப்பான்என சில combinationகளை இயல்பாக எதிர்பார்ப்பது தவறுஎன்பது தத்துவம்.
      • உதாரணமாக, சுத்தம், நியாயம் சேர்ந்திருக்கலாம் என நினைப்போம். இருக்க வேண்டும்என்ற அவசியமில்லை. வாழ்வில் இது ஒரு முக்கியமான விஷயம்.
        இங்கு தவறு செய்யாதவர் குறைவு.

        அனுபவமுள்ளவர்க்கு, சட்டம் தெரியாது.
        தமிழ்ப் பண்டிதர் எழுத்துப் பிழையுடன் எழுதுகிறார்.
        கந்தர்வப் பெண்கட்கு கற்பு தேவையில்லை.
        தர்மபுத்திரருக்கு common sense இருக்காது.
        Vice-Chancellorக்கு University rules தெரியவில்லை.
        50 கோடி செலவான இடத்தில் 500 கோடி திருடியதாக professors பேசுவர்.
        மகாத்மா காந்தி வன்முறையை violence கையாள்வார் என நாம் நம்ப முடிவதில்லை. 1946இல் நாட்டில் வன்முறை பரவலாக எழுந்தபொழுது மகாத்மா இந்த உண்மையை உணர்ந்து அதன் காரணம் தாமே எனக் கூறினார்.
        வாய்ப்பைக் கொடுத்த தெய்வம் பெற உதவும் எனத் தெரியாதது.

        பேப்பர் கம்பனிக்கு ஓர் இளைஞர் மானேஜர் வேலைக்கு வந்தார். இனிமையானவர். நல்லவர். அழகாக இருப்பார். இவர் குடும்பம் இராமலிங்க சுவாமிகள் குடும்பத்திற்கு உறவானது. வசதியான குடும்பம். இவர் கல்லூரியில் படிக்கும்பொழுது இவருடைய ஆசிரியர் மனைவிக்கு இளம்பிள்ளை வாதம் வந்து ஊனமானார். ஆசிரியர் இளைஞர். மனைவிமீது அன்புள்ளவர். தம் நேரம் முழுவதும் மனைவிக்குப் பணிவிடை செய்வதில் கழித்தார். அத்துடன்,

        ஓர் இலட்சியத்தை உருவாக்கி மாணவரிடம் கூற ஆரம்பித்தார். அது, "இளைஞர்கள் ஊனமுற்ற பெண்ணை மணந்து அவளுக்கு வாழ்நாள் முழுவதும் பணிவிடை செய்வது''.

        பேப்பர் கம்பனி மானேஜருக்கு இந்த இலட்சியம் மனதில் பதிந்துவிட்டது. தம் வீட்டாரிடம் கூறி ஊனமுற்ற பெண்ணை தனக்குப் பார்க்கச் சொன்னார். அவர்கள் மனக்கிலேசமடைந்தனர். இளம் வயது. அனுபவமில்லை. அறிவுமில்லை. அர்த்தமற்ற இலட்சியத்தை அடாவடியாக ஏற்று வீட்டாருக்குக் கவலையுண்டு பண்ணினார். எண்ணம் உயர்ந்தது. மிக அழகான பெண் வந்தது. பார்த்ததும் அவருக்குப் பிடித்துவிட்டது. திருமணமாயிற்று. வாய் எதைப் பேசினாலும், முடிவில் காரியம் மனம் போலவே நடக்கும் என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

        அழகும் அறிவும் சேர்ந்திருக்கும்.
        திறமையும் நேர்மையும் சேர்ந்திருக்கும்.
        ஆங்கிலத்தை நாடு முழுவதும் எதிர்த்த அரசியல் தலைவர்கள் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளி (English school)யில் சேர்க்கின்றனர்.

        ஹார்டிங் எந்தத் தவறும் செய்யாமல் வேலையை இழக்கிறார். இது நியாயமா? இரு வருஷங்கட்குப் பின் இவருக்கு (Dean) டீன் வேலை £ 1200 வருகிறது. போனது £ 800, வந்தது £ 1200. இவர் எளியவர். இவர் பேத்தியை, பெரும்பிரபு £ 100,000 வருமானமுள்ளவர் திருமணம் செய்துகொள்கிறார். பார்வைக்கு அதர்மமாகத் தெரிவதின்பின் வாழ்க்கை தர்மமிருப்பதை, கதை எடுத்துக் காட்டுகிறது. அதுவே அதன் பிரபலத்திற்குக் காரணம்.

        • ஹார்டிங் வரலாறு, அவர் இராஜினாமா, Dean வேலை வந்தது, அதை மறுத்தது, பேத்தியை Lordகட்டிக்கொண்டது ஆகியவை பல விஷயங்களைத் தெளிவுபடுத்தும். இதுபோன்ற நிகழ்ச்சிகளை இலக்கியத்தில் காணலாம்.
        • அன்னையிடம் இவ்விதிகள் செயல்படும் வழியும், விதிவிலக்காக நடப்பதும் நாம் அன்னையை அறிய உதவும்.
        • வாழ்வில் எந்த நுணுக்கமும், அது அன்னையிடம் மாறுவதும், மாற மறுப்பதும் அன்னையை அறிய உதவும்.
          • இது நாம் நம்மை ஆழ்ந்து அறிய உதவும்.
          • இது உலகில் பொதுவாகக் காண முடியாத அறிவு.
  • கொடுத்தீங்க, இல்லேன்னு சொல்லலை,
    எனக்குப் புண்ணியப்படவில்லை.

    இந்தக் குரல் கேட்டபின் அவர்களுடன் பழகக் கூடாது.
    அது தவறு, பாவம்.

    • பிறருக்கு உதவி செய்வது நமக்கெல்லாம் வாழ்வின் இலட்சியம்.

      உடன்பிறந்தவர், பெற்றோர், பிள்ளைகட்குச் செய்வது உதவியில்லை, கடமை.

      • இது பெரிய இலட்சியம். இதைவிடப் பெரிய இலட்சியமில்லை.
      • செய்பவர் இலட்சியமாக எடுத்துக்கொண்டால், பெறுபவர் சௌகரியமாக நினைப்பார். அவ்வழி இலட்சியம் பாவமாக மாறும். குறைந்தபட்சம் அறிவீனமாகும்.
      • ஸ்ரீ அரவிந்தர் மட்டுமே இந்தப் புதிருக்கு விடை அளித்துள்ளார். அது ஞான பொக்கிஷம்.

        மனித உறவு இனிமையாகக் கடமையில் ஆரம்பித்து கடுமையான கொடுமையில் முடியும். இவை இரு துருவங்கள். எல்லையில் நிறுத்தினால் தவறில்லை. நிறுத்தாவிட்டால் கொடுப்பவர் பெறுபவர் நிலைக்குத் தவறாது வருவார். அந்த நேரம்,

      • பெறுபவர், "அவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டும்; நான் கைதட்டிச் சிரிக்க வேண்டும்'' எனச் சொல்லத் தவறியதேயில்லை. இந்த எண்ணம் உள்ளேயிருப்பதை ஏற்பது sincerity, மறுப்பது முழுப்பொய். "இந்தக் குளத்தில் சேறு இல்லை'' எனச் சொல்வது போலிருக்கும்.
      • நம் sincerityயைச் சோதனை செய்ய பல வழிகளில் இது ஒன்று.
      • மற்றவை,
        • எவரிடம் நம் குறையைச் சொன்னோமோ அவர் எதிரியாவார்.
        • நம்மால் நஷ்டமடைந்தவரை அளவுகடந்து கேசெய்வது.
        • உதவி செய்தவரை அழிக்க ஆழ்ந்து விரும்புவது.
        • சந்தர்ப்பம் கிடைத்தால் தவறாது தப்பு செய்வது.
        • பிறரை மட்டம் தட்ட மனம் ஆர்வமாக எழுவது.
        • பொறாமைப்படுவது.
        We invite as guests to our house our enemies - 'Savitri'.
        எதிரிகளை நம் வீட்டிற்கு விருந்தாக அழைக்கிறோம் - சாவித்திரி

        நாட்டில் செல்வாக்கிழந்த கட்சி. அதன் தலைவருக்கு வருமானமில்லை. அன்பருக்கு நெருங்கிய நண்பர். இவருக்கு 60 வருகிறது. கொண்டாட வசதியில்லை. 10 அல்லது 15 உறவினர்கள் வெளியூரிலிருந்து வந்தனர். உள்ளூரில் எவரும் இவரை வீட்டிற்கு வந்து வாழ்த்து கூறவில்லை. 60 நிறைய 1 வாரம் முன்பு இவருக்கும் இவர் மனைவிக்கும் பட்டு வேஷ்டி, பட்டுப் புடவை எடுத்துத் தர அன்பர் முடிவு செய்தார். அரை மணி நேரத்தில் தலைவர் வந்தார். காரணமில்லாமல் திட்டினார். அன்பருக்கு தம் தவறான முடிவு புரிந்து மனதை மாற்றிக் கொண்டார்.

        இந்த அனுபவத்திற்குப் பிறகும் அன்பருக்குத் தலைவர் மீது பிரியம். அது 1969ஆம் வருஷம். தலைவர் 50 ரூபாயில் குடும்பம் நடத்துகிறார். அவருக்கு ரூ.500/- இனாம் கொடுத்தார் அன்பர். தலைவர் பெற்றுக்கொண்டு கேலியாக, குத்தலாக, "உங்கள் பார்ட்னரிடம் என் நன்றியைக் கூறுங்கள்'' என்றார். அன்பர் கம்பனி பணத்தை எடுத்து தானம் செய்வதாகச் சொல்கிறார். அது பொய். பணம் அன்பருடையது. அதுவே அன்பர் கொடுத்த கடைசி உதவி.

        "எனக்குச் செய்ய உனக்கு அதிர்ஷ்டமில்லை'' என்பது அதுபோன்ற சொல்.

        பிறர் பாவத்தை ஏற்று நாம் நஷ்டப்பட்டால் நம்மை கேலி செய்வர்.

        (பணக்காரப் பெண் திவாலைக் காப்பாற்றியவளை ஓரகத்திகள் கேலி செய்வது). பெரிய குடும்பம். திவாலுக்கு வந்துவிட்டது. அது வெளியில் தெரியுமுன் அடுத்த மாவட்டத்தில் பெரிய இடத்து சம்பந்தம் செய்துவிட்டனர். பெண் வீட்டிற்கு வந்தாள். சிறிது நாள் கழித்து அமீனா வந்தான். 4 ஓரகத்திகள் உள்ள வீடு. புதிதாக வந்த பெண் தன் நகைகளையெல்லாம் கொடுத்து, மேலும் தகப்பனாரை உதவச் சொல்லி திவாலைத் தவிர்த்தாள். சில மாதம் கழித்து ஒரு பெரிய இடத்துக் கல்யாணம் வந்தது. எல்லா ஓரகத்திகளும் எல்லா நகைகளும் போட்டிருந்தனர். தியாகம் செய்தவளிடம் நகையில்லை. அவளை அனைவரும் கேலி செய்தனர். இதுவே யதார்த்தம். எவரும் தம் நகையைக் கடன்தர முன் வரவில்லை.

        கூலிக்காரன், பிச்சைக்காரன் புத்திசாலியானால் இப்படிப் பேசுவான். எல்லாப் பூசாரிகளும் இப்படிமட்டும் பேசுவான். இதைப் பேசாத பூசாரி தெய்வம்.

        இந்த மனிதர்கள் நாகரீகமடைய 1000 ஆண்டுகளாகும்.

  • "இதற்கு வழியில்லை என்பது இங்கில்லை".

    This is an absolute TRUTH. விலக்கில்லாத விதி.

    அன்னை தவிர வேறெவரும் இதைக் கூறவில்லை, கூற முடியாது. மனிதன் பிரம்மம். அதனால் infinite. குதர்க்கமாகி மாறினால் இதையும் மீறிவிடுவான் - தான் பெறுவதைவிட இந்தச் சட்டம் பொய் என நிரூபிக்க மனம் விழையும். எவரிடமும், எல்லையைத் தாண்டினால், இந்தக் குரல் கேட்கும்.

    • என் நண்பர் ஒருவர் இங்குதான் ஆரம்பிப்பார்.
    • நமது உண்மை (sincerity)யைச் சோதனை செய்யும் சட்டம் இது.
    • இக்குரல் அழிந்து திருவுருமாறினால் (transform) யோகம் பிறக்கும்.
    • இந்தியாவில் அறிவு வளர்ந்த இடம் தமிழ்நாடு. அதை மிஞ்சியது கேரளா.
    • அறிவு அகந்தைமூலம் வருவது குதர்க்கம்.
    • அறியாமை அகந்தைமூலம் வருவது பெரிய குதர்க்கம். ஈடு இணையில்லாதது - தன்னைத் தானே கேலிக்கூத்தாக்குவதை அறியாத மடமை. இப்படிப்பட்டவர் யாராவது அகப்படமாட்டார்களாஎனக் காத்திருப்பார்கள். பொறி (trap) வைத்துப் பிடித்து சுரண்டியபின் "என்னால் நீ பிழைக்கிறாய்'' என்பார்கள்.
    • Man's resourcefulness to raise his status is infinite.தன்னை உயர்வாகப் பேசுவதில் மனிதனுக்கு அவனே நிகர் - பிச்சைக்காரனும் "எனக்குப் போட நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்'' என்பான்.

    மனிதனிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்என அன்னையைக் கேட்டதற்கு எதுவுமில்லை என்றார். உங்களை என்ன கேட்கலாம் என்றதற்கு எதுவும் கேட்கலாம் என்றார்.

    இந்த யோகத்திற்குரிய சட்டங்கள் இவை.

    எளிய மனிதனுக்கு இவை தேவையில்லை. தெரிவது உதவும்.

    • நாம் சோதனை செய்ய இந்தச் சட்டம் உதவும். முடியாது என்பது எதுவானாலும் முடியும்எனச் சோதித்தறியலாம்.
    • சோதனை ஒரு முறைக்குமேல் செய்யக்கூடாது.

    ஆங்கில நாவல்களில் (English novels) மனிதத் தன்மை, சுயமரியாதை, மெய் பேசுவது (Self-respect, truth speaking) 95% வரும். நம் வாழ்வில் 5%உம் இல்லாதது. ஒரு குடும்பம் இவற்றை 100% பெற முயன்றால் இச்சட்டம் நிறைவேற்றித் தரும் (At least two persons can try).

    இருவர் இணைந்து முயலலாம். இதுவரை எனக்கு இரண்டாம் நபர் கிடைக்கவில்லை.

தொடரும்....

********



book | by Dr. Radut