Skip to Content

02. சாவித்ரி

சாவித்ரி

P.116 Canto 3 The Glory and Fall of Life

                      வாழ்வின் பெருமையும் சிறுமையும்

                      An uneven broad ascent now lured his Feet

                     பரந்த ஏற்றம் பதமற்ற நிலை அவனையழைத்தது

  • மனமெனும் பெட்டகத்தின் எல்லையைக் கடந்தான்
  • விரிந்த இருளின் இழந்த உரிமையின் வாயில்
  • மாற்றமும், ஐயமும் மலிந்து நிற்கும் மடம்
  • ஓய்வற்ற உழைப்பு, அயராத ஆராய்ச்சியான உலகம்
  • அறிவைக் கடந்தவன் அழகு நிறை முகம்
  • எழுவது கேள்வி, பெறுவது ஏதுமில்லை
  • தீராத பிரச்சினை தீர்க்க முடியாத ஒன்றாகிக் கவர்கிறது
  • தரையில் பதியும் கால் ஊன்றுவதை உணர முடியவில்லை
  • நிலையற்ற இலட்சியம் நிலையான நட்சத்திரம்
  • ஐயமே அன்பராகி நிறைந்த உலகினூடே உலவி
  • ஆட்டம் கண்ட அஸ்திவாரத்தின் ஆடுகின்ற எல்லை
  • தொட முடியாத எல்லை தொலைவில் தெரிகிறது
  • அணுகிவரும் அனுபவம் அனுதினம் தருகிறது
  • கானல் நீரென கரையும் எல்லை மறையும் பாங்கு
  • நிலையற்ற வாழ்வை நிலையாக அளிக்கும் நிரந்தரம்
  • எண்ணற்ற பாதைகள் முடியாமற் சேரும்
  • அவனிதயம் நிறைவுபெற எதுவுமில்லை
  • ஓட்டம் நிறை ஆட்டம் ஓய்வின்றி எழும்
  • எந்த சாஸ்த்திரத்திற்கும் கட்டுப்படாத கணக்கு
  • அலைபாயும் கடலும் சமுத்திரமும் வரிசையாய் வந்து நின்றன
  • வீறுகொண்டெழுந்த ஆத்மாவின் பெருவெளி வீச்சு
  • பிரம்மத்தின் அமைதியை சீண்டி எழுப்பியது
  • அனந்தம் துடிக்கும் அதிதீவிரம் வேகம்
  • அவள் நினைவின் போக்கை நின்று நிலைபெறச்செய்து
  • நிலையான ரூபத்தை செயலற்றதாக்கும் போக்கு
  • பழகிய பரம்பரை அரங்கத்தைக் கடந்து
  • காலத்தினூடே கடுசாக நடக்கும் ஆதரவற்ற நிலை
  • விதியாகத் தொடும் வெல்ல முடியாத நிலையும் அசைக்காத
  • ஆபத்தை அன்றாட நிகழ்ச்சியாக ஏற்கும் அன்புள்ளம்

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தமக்கு துரோகமிழைக்கும் சக்திகளை அழைத்து வேதனை தரும் வாழ்வை ஏற்படுத்தி, அதையே எதிர்கால உலகின் கருவாக அன்னை நியமித்தார்.
 
யோகத்தை ஆதாயத்திற்காக ஏற்றால் யோகம் துரோகத்தால் நிறைவேறும்.

******



book | by Dr. Radut