Skip to Content

01. இந்தியாவைப் பற்றிச் சில கருத்துகள்

இந்தியாவைப் பற்றிச் சில கருத்துகள்

N. அசோகன்

வ.எண்
இந்தியாவின் இன்றைய நிலையும்
இந்தியாவில் வரவேண்டிய மாற்றங்களும்
1.
மேலை நாடுகளின் ஐஸ்வரியத்தையும், டெக்னாலஜியையும் இந்தியா விரும்புவதால் அந்நாடுகளின் தலைமையை ஏற்று அவற்றைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உறவு நாடுகளுக்கு ஆன்மீகத் தலைவனாக இந்தியா தலை எடுக்க வேண்டும். ஏனெனில் அதுதான் இந்நாட்டின் ஆன்மீக விதியாகும். அப்படி தலை எடுக்கும்பட்சத்தில் மேலை நாடுகள் இந்தியாவைப் பின்பற்றுவார்கள்.
2.
வளரும் நாடுகள் பலவற்றில் இந்தியா இப்பொழுது ஒன்றாக உள்ளது.
அடுத்து 20 அல்லது 30 ஆண்டுகளில் தேசிய வருமானத்திலும் மற்றும் தனிநபர் வருமானத்திலும் இந்தியா அமெரிக்காவிற்கு நிகராகவோ, அமெரிக்காவைத் தாண்டியோ வர வேண்டும்.
3.
இந்நாட்டு இளைஞர் சமுதாயம் இன்னமும் சம்பளத்தில் வேலை செய்வதிலுள்ள பாதுகாப்பையே நாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப் பாதுகாப்புத் தேடும் மனோபாவத்தை விட்டுவிட்டு சுயதொழிலில் இறங்கி தேசத்தை வளப்படுத்தி, தம்மையும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.
4.
சமூகத்திற்குக் கட்டுப்பட்டுப் பெரும்பான்மையானவர்களுடைய சமூகப் பண்புகளுக்கு ஒத்துப்போவதுதான் தற்போது இலட்சியமாக உள்ளது.
அவரவருடைய தனித்தன்மையை வளர்த்துக் கொண்டு சொந்தமாக ஒரு வாழ்க்கைப் பாணியை அமைத்துக் கொள்வதுதான் இலட்சியமாக இருக்க வேண்டும்.
5.
அமெரிக்க மற்றும் மேலைநாட்டுக் கலாச்சாரம் இந்தியாவில் பாகுபாடு இல்லாமல் பரவிக்
கொண்டிருக்கிறது.
இந்தியா தன்னுடைய அடிப்படை கலாச்சாரத்திற்கும், பண்புகளுக்கும் ஒத்துப் போகும் அளவிற்குத்தான் மேலை நாட்டுக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒத்துப்
போகாத விஷயங்களை ஒதுக்கிவிட வேண்டும்.
6.
அரசாங்க ஆதரவு மற்றும் மானியம் என்று இவற்றை நம்பிக் கொண்டிருப்பதால்
மக்களிடையே அரசாங்கத்தை நம்பி வாழும் மனோநிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி மானியங்களையும், அரசாங்க ஆதரவையும் நம்பி வாழும் மனநிலை போக வேண்டும். சொந்தமாகப் பிழைக்கக்கூடிய மனோதிடம் மக்களுக்கு வரவேண்டும்.
7.
வீடுகளிலும், பொது இடங்களிலும் சுத்தம் மிகவும் குறைவாக உள்ளது.
மற்றும் மேலை நாடுகளிலுள்ள அதே சுத்தம் இங்கும் வரவேண்டும்.
8.
மனப்பாடம் செய்வதற்கும், தேர்வெழுதி தேர்ச்சி பெறவும்தான் இந்தியக் கல்வித் திட்டம் உதவுகிறது.
சிந்தனையையும், படைப்புத் திறனையும் தூண்டிவிடும் வகையில் நம் நாட்டின் கல்வித் திட்டத்தையும், பாடத் திட்டத்தையும் மாற்றி அமைக்க வேண்டும்.
9.
அரசாங்க அலுவலகங்களில் ஊழல் மலிந்து இருக்கிறது.
அரசாங்க அதிகாரிகள் இலஞ்சம் வாங்குவதை இழிவாக நினைத்து அதனைக் கைவிட வேண்டும். மேலும் இலஞ்சம் வாங்க தேவையில்லாத அளவிற்கு அவர்களின் வருமானம் உயர வேண்டும்.
10.
திருமணங்கள் வரதட்சணையை மையமாக வைத்து வியாபாரம் போல் நிகழ்த்தப்படுகிறது.
திருமணத்திலிருந்து வரதட்சணை அறவே நீக்கப்பட வேண்டும். அன்பின் அடிப்படையில் திருமணங்கள் நடைபெற வேண்டும்.
11.
சடங்கு, சம்பிரதாயங்களும் தேவையில்லாத நடைமுறைகளும் இன்னமும் பரவலாக இருக்கின்றன.
சடங்கு, சம்பிரதாயங்களிலிருந்து மக்கள் தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
தேவையில்லாத பழக்க வழக்கங்களை விட்டுவிட்டுத் தங்களுடைய எனர்ஜி விரயமாவதைத் தவிர்த்துத் தங்கள் சாதிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.
12.
போட்டி மற்றும் அடுத்தவர்கள் கொடுக்கின்ற நிர்பந்தம் என்று இவற்றின் காரணமாகத்தான் மக்கள் சாதிக்க உந்தப்படுகிறார்கள்.
இப்படி, போட்டி மற்றும் அடுத்தவருக்குச் சமமாக இருக்க வேண்டும் என்ற காரணங்கள் குறுக்கிடாமல் தானே சொந்தமாக சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக உந்தப்பட்டு
சாதிக்க வேண்டும்.
13.
பொய் சொல்வது இங்கு பரவலான பழக்கமாக இருக்கிறது. கோர்ட்டில் சாட்சி
சொல்பவர்கள்கூட பொய் சொல்லத் தயங்குவதில்லை.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஜென்டில்மேன் எப்படி நடந்து கொண்டானோ
அப்படி இந்தியர்களும் நடந்து கொள்ள வேண்டும்.
14.
கம்யூட்டர் மற்றும் இன்டர்நெட் மூலம் கல்வியை மேம்படுத்திக் கொள்வது மற்றும்
வேலைகளை முடித்துக் கொள்வது ஆகியவைகளைப் பற்றி மக்களுக்கு இன்னமும் தெரியாமல் உள்ளது.
ஒவ்வொரு மாணவ, மாணவியும் சொந்தமாக ஒரு கம்யூட்டர் வைத்திருக்க வேண்டும். இன்டர்நெட் மூலம் ஏராளமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்பதை மக்கள் புரிந்து
கொள்ள வேண்டும்.
15.
இந்திய பொருளாதாரத்தில் ஒரு சிறு பிரிவுதான் முறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியப் பொருளாதாரம் முழுவதும் முறைப்படுத்தப்பட வேண்டும்.
16.
Organisationனால் கிடைக்கின்ற பலன்களைச் சிறிதளவுதான் இந்நாடு அனுபவித்திருக்கிறது.
இந்தியப் பொருளாதாரத்தின் எல்லாத் துறைகளிலும், Organisationனுடைய முழுப்பலனையும் நாம் பார்க்க வேண்டும்.
17.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியர்களின் சாதனை மிகவும் குறைவாக
உள்ளது.
இந்தியர்கள் நிறைய ஒலிம்பிக் பதக்கங்களை வாங்க வேண்டும். பதக்கம் வாங்குவதில் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா வர வேண்டும்.
18.
ஏதோ ஒரு சமயம்தான் இந்தியர்கள் நோபல் பரிசை வாங்குகிறார்கள்.
ஏதேனும் ஒரு வருடத்திலாவது 6 பரிசுகளையும் இந்தியர்கள் வாங்க வேண்டும்.
19.
அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவற்றோடு
இந்தியாவிற்கு சுமுகக் குறைபாடுள்ளது.
இந்த இந்தியத் துணைக் கண்டத்தின் ஆன்மீக ஒற்றுமை நடைமுறையிலும் உண்மையாக வேண்டும்.
அதாவது பாகிஸ்தான், வங்காள தேசம், நேபாளம், இலங்கைபோன்ற நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து காட்சியளிக்க வேண்டும்.
20.
இந்நாட்டின் ஆன்மீகப் பாரம்பரியம் இந்நாட்டு மக்களுக்கே சரியாகத் தெரியவில்லை.
இந்தியர்கள் இந்தப் பாரம்பரியத்தின் சிறப்பை உணர்ந்து இந்த ஆன்மீக சக்தியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் வாழ்க்கையின் தரத்தையும் ஆன்மீக பலத்தைக் கொண்டு உயர்த்திக் கொள்ள வேண்டும்.
21.
இரு மாநிலங்களிலும் பாயும் ஆறுகள் பற்றி சர்ச்சைகள் எழுந்துள்ளன.
கங்கையும், காவிரியும் இணைக்கப்பட வேண்டும். நதி நீர் பங்கீடு பற்றிய சர்ச்சைகள் எல்லாம் மறைய வேண்டும்.
22.
இந்தி கற்றுக் கொள்வது விஷயமாக, தமிழ்நாட்டில் ஒரு எதிர்ப்பு இருக்கிறது.
தமிழ் மக்கள் இந்தி கற்றுக் கொள்ள முன்வர வேண்டும். அப்படி கற்றுக் கொள்ளும்பட்சத்தில் தமிழ்நாடு தேசிய கலாச்சாரத்துடன் ஒன்றிணைய வேண்டும்.
23.
சிக்கலான அரசாங்க நடைமுறைகள் மக்களின் செயல்திறனை குறைக்கின்றன. மேலும் நாட்டின் வளர்ச்சியின் வேகத்தையும் குறைக்கின்றன.
அரசாங்க நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். செயல்திறன் மற்றும்
செயல்படும் வேகம் அதிகரிக்கும் வகையில் இந்த நடைமுறைகள் அமைய வேண்டும்.
24.
மதம், மொழி, ஜாதி என்று இவற்றிலுள்ள பாகுபாடுகளையும், பிரிவினைகளையும்
வலியுறுத்தி அரசியல் நடத்தப்படுகிறது.
இப்படிப்பட்ட பிரிவினையை வலியுறுத்தும் அரசியல் முடிவுக்கு வந்து தேசிய ஒற்றுமைக்கு முன்னுதாரணமான ஒரு நாடாக இந்தியா தலை எடுக்க வேண்டும்.
25.
இன்சூரன்ஸினுடைய பேராற்றலை இந்நாட்டு மக்கள் முழுமையாக உணரவில்லை.
இந்நாட்டின் பொருளாதாரத்தில் எந்தெந்தத் துறைகளில் எல்லாம்
இன்சூரன்ஸைக் கொண்டுவர முடியுமோ அங்கெல்லாம் அதைக் கொண்டுவர வேண்டும். இப்படிச் செய்யும் பொழுது நாட்டின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.
26.
சாலையில் பிரயாணம் செய்பவர்களுக்கான பாதுகாப்பு மிகவும் குறைவாக இருக்கிறது.
எல்லா நெடுஞ்சாலைகளிலும் நடுவில் சாலை பிரிக்கப்பட வேண்டும். அப்படி
பிரிக்கப்படும்பொழுது விபத்துகள் பெருமளவிற்குக் குறையும்.
27.
பணபலம் மற்றும் அடியாள் பலம் என்று இவைதான் தேர்தல்களை ஆக்கிரமித்துக்
கொண்டுள்ளன.
தேர்தல்கள் மிகவும் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும். பணம் கொடுத்தோ அல்லது
அடியாட்களை வைத்து மிரட்டியோ மக்கள் ஓட்டுப் போடும் நிலைமை மாற வேண்டும்.
28.
மாநகரங்களில் இருக்கின்ற சேரிகளும், குப்பங்களும் நகரங்களின் அழகைக் கெடுக்கின்றன.
இப்படி மாநகரங்களில் உள்ள குப்பங்கள் எல்லாம் அகற்றப்பட்டு எல்லோருக்கும் நல்ல வீட்டுவசதி அமைய வேண்டும்.
29.
பருவ மழையில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகளின் காரணமாகப் போதுமான
நீர்வளம் கிடைப்பது அரிதாகிவிட்டது.
மழை நீர் சேகரிப்பு திட்டம், நதிகள் இணைப்புத் திட்டம் மற்றும் நீர் வளம் சம்பந்தப்பட்ட சரியான
மேனேஜ்மெண்ட் முறைகள் என்று இவையெல்லாம் ஒன்று சேர்ந்து பருவ மழையில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டும்.
30.
ஆடம்பரமான திருமண வைபவங்கள் அவற்றை நடத்துகின்ற குடும்பங்களுடைய
பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கின்றன.
திருமண நிகழ்ச்சிகள் மிகவும் எளிமையான நிகழ்ச்சிகளாக மாற வேண்டும். பொருளாதார
ரீதியாகவும் செலவு குறைய வேண்டும்.
31.
ஒரு முறையில்லாமல் நகரங்கள் வளர்ந்துகொண்டு வருவது நகராட்சி அலுவலகங்களுக்கு ஒரு
பெரிய தலைவலியாக உள்ளது.
கட்டிடங்களை விதிமுறைக்கு உட்பட்டு கட்ட வேண்டும். சாலைவசதி, குடிநீர் வசதி, மின்வசதிபோன்ற அடிப்படை வசதிகளை ஒழுங்காகச் செய்துதர வேண்டும்.
32.
சுற்றுச் சூழலைப் பாதிக்கும் வகையில் நீர்வளம், நிலவளம் மற்றும் காற்றுமண்டலம் என்று எல்லாமே மாசுபடுத்தப்படுகிறது.
சுற்றுச் சூழலைப் பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும். அதன் பலனாக சுற்றுச் சூழல் மீண்டும் நலம்பெற வேண்டும்.
33.
ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருப்பதால் அரசாங்கவேலை மற்றும் கல்லூரிப் படிப்புவாய்ப்பு எல்லாம் இதன் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தியா போதியளவு முன்னேற்றம் அடைந்துள்ளதால் இடஒதுக்கீடு தேவையில்லை. கல்லூரிப் படிப்பு மற்றும் அரசாங்க வேலையெல்லாம் எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்யலாம்.
34.
லாட்டரி மற்றும் ஷேர் விற்பது, வாங்குவதுபோன்று சுலபமான வழிகளில் பணம் சம்பாதிப்பதில் மக்கள் நிறைய ஆர்வம் காட்டுகிறார்கள்.
இப்படிச் சுலபமாகச் சம்பாதிப்பதிலிருக்கும் நாட்டத்தை விட்டுவிட்டு சம்பாதிப்பதற்காகக் கடினமாக உழைக்க வேண்டும்.
35.
வரி ஏய்ப்பு பரவலாக உள்ளது.
அவரவர்கள் கட்ட வேண்டிய வரியை மக்கள் முறையாகக் கட்ட வேண்டும்.
36.
மக்கள் நிறைய நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்கிறார்கள்.
வருடத்தில் 12 நாட்களுக்கு மேல் விடுமுறை எடுக்காமல் இருக்க வேண்டும்.
37.
இந்தியாவின் பல மாநிலங்களில் பயங்கரவாதம், வன்முறை தலைவிரித்தாடுகிறது. பயங்கரவாதத்திற்கு மூலகாரணமான ஏழ்மை முதலில் மறைய வேண்டும்.
இப்படி ஏழ்மை மறையும்பொழுது, ஏழ்மையால் விளைந்த வெறுப்புணர்வும் மறைந்து அதன் பலனாக வெறுப்புணர்வால் விளைந்த பயங்கரவாதமும் மறையும்.
38.
சிறுபிள்ளைகளை வேலைக்கு வைப்பதால் அவர்களுக்கு படிக்கும் வாய்ப்பு பறிபோகிறது.
இது விஷயமாக, சட்டம் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். அதன் பலனாகப் படிக்க வேண்டிய வயதில் பிள்ளைகள் எல்லோரும் படிக்க வேண்டும்.
39.
கூட்டுக் குடும்ப வாழ்க்கை குறைந்து வருவதால் வயதானவர்களுக்கு ஒரு சரியான பராமரிப்பு இல்லாமல் போகிறது.
முதியோர்களுக்குப் போதிய பராமரிப்பு வழங்கும் வகையில் ஓய்வூதியத் திட்டங்கள்
மேம்படுத்தப்பட வேண்டும்.
40.
அணுகுண்டுகள் வைத்திருப்பதை இந்தியா பெருமையாக நினைக்கிறது.
அமைதியும், சமாதானத்தையும் உண்மையாக விரும்புவதற்கு அடையாளமாக இந்தியா தன்
கைவசமுள்ள அணுகுண்டுகளை எல்லாம் கைவிட வேண்டும்.
41.
இந்தியாவினுடைய பெரிய ஜனத்தொகை ஒரு சுமையாகக் கருதப்படுகிறது.
கல்வி, மற்றும் முறையான பயிற்சியின் மூலம் இந்தப் பெரிய ஜனத்தொகை இந்தியாவிற்கு ஒரு பெரிய ஆதரவாக மாற வேண்டும்.
42
இந்நாடு உலகத்தின் கண்ணோட்டத்தில் ஒரு விவசாயம் செய்கின்ற கிராமிய நாடாகத்தான்
பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவைப்போல இந்நாட்டு ஜனத்தொகையில் 3% பேர்தான் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். மேலும் இந்நாடு நகர் மையமான நாடாக மாற வேண்டும்.
43.
நீதிமன்றங்களில் நிறைய வழக்குகள் தேங்கி இருக்கின்றன. மேலும் வழக்காடுவதும் மிகுந்த செலவை உண்டுபண்ணுகின்ற காரியமாகிறது.
இப்படி, தேங்கி நிற்கும் வழக்குகளைப் பரிசீலனை செய்ய நிறைய விரைவு நீதிமன்றங்கள் வரவேண்டும். இப்படிச் செய்தால் நீதிமன்றங்களின்மூலம் உரிய நேரத்தில் நியாயம் கிடைக்க வாய்ப்புள்ளது.
44.
மின்வெட்டுஎன்பது அடிக்கடி நிகழக்கூடிய ஒரு பிரச்சினையாக உள்ளது.
இப்படி மின்வெட்டைக் கொண்டுவர அவசியம் இல்லாத அளவிற்கு மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.
45.
சாலை பராமரிப்பு மிகவும் குறைவாக உள்ளது. மழைநீர், வடிகால் வசதியும் திருப்தி
இல்லாமல் இருக்கிறது.
சாலைகள் குண்டும் குழியுமாக இல்லாமல் தரமாக அமைய வேண்டும். மேலும் மழைக்காலத்தில் மழைநீர் தேங்காத அளவிற்கு வடிகால் வசதிகள் இருக்க வேண்டும்.
46
மனை விலை மற்றும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் விலை எல்லாம் மிகவும் அதிகரித்துவிட்டது.
சமூகத்திலுள்ள எல்லாப் பிரிவினருக்கும் சுலபமாகக் குடியிருக்கும்வசதி அமைய வேண்டும்.
47.
செல்வர்களும், அதிகாரத்தில் இருப்பவர்களும் நீதிமன்றங்களின் தண்டனைக்கு உட்படாமல்
தப்பித்துக் கொள்கின்றனர்.
செல்வர்களும், அதிகாரத்தில் உள்ளவர்களும் தவறு செய்திருந்தால் அவர்களையும் தண்டிக்கும் அளவிற்கு சட்டத்தின்கை வலுப்பெற வேண்டும்.
48.
ஐக்கிய நாட்டுச் சபையின் பாதுகாப்புக் குழுவில் இந்தியா உறுப்பினர் இல்லை.
இந்நிலைமாறி இந்தியா உறுப்பினராக வேண்டும்.
பாதுகாப்புக் குழு எடுக்கும் தீர்மானங்களில் இந்தியாவின் சம்மதமும் இருக்க வேண்டும்.
49.
இருசக்கர வாகனங்களும், கார்களும் சாலையில் மிகுந்த நெரிசலை உண்டு
பண்ணுகிறது.
நகரங்களில் நெரிசலைத் தவிர்க்க மக்கள் இரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும்.
50.
இந்தியர்கள் வெளிநாட்டவருடன் உறவாடும் பொழுது தாழ்வு மனப்பான்மையின் காரணமாக தாழ்ந்தவர்களாக நடந்து கொள்கிறார்கள்.
இதற்கு மாறாக இந்தியர்கள் நம் நாட்டின் ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பெருமைகளை நினைத்துப் பெருமைப்பட்டு, கம்பீரமாக நடந்து கொள்ள வேண்டும்.

 

******



book | by Dr. Radut