Skip to Content

2. Security - பகவான் காப்பாற்றுவார்

Security - பகவான் காப்பாற்றுவார்

எனக்கு பயமாக இருக்கிறது எனக் கூறுபவர்க்கு Insecurity என்போம். தமிழில் நேரடியான சொல்லில்லை. அதனால் securityக்கும் நேரடியாகச் சொல்ல சொல்லில்லை. 10ஆம் வகுப்புடன் பள்ளியை விட்டு வந்து வீட்டில் படிக்கும் பையனின் நண்பர்கள் பட்டம் பெற்று வேலை தேடும்பொழுது, "எங்களுக்கெல்லாம் பட்டமிருக்கிறது. ஆனால் பயமாக இருக்கிறது. உனக்கு பட்டமில்லை. ஆனால் எப்படி பயப்படாமலிருக்கிறாய்?'' என்று கேட்டனர். அவனுக்கு security இருக்கிறது. இவர்கள் insecureஆக இருக்கிறனர். Security, Insecurity என்பவை இன்றுள்ள நிலைமையைப் பிரதிபலிப்பவையில்லை. பரம்பரையாக உடலில் உள்ள உணர்வு.

  • 20 கோடி பணம் சம்பாதித்த அரசியல் தலைவரைப் பற்றிப் பலரும் பேசும்பொழுது அவரை ஆதரித்துப் பேசியவர் "இந்த அரசியல்வாதிக்கு சிறு வயது வளர்ப்பால் insecurity" என்றார். 20 கோடி வந்த பின்னும் போகாத insecurity” அது.
  • இருந்த நிலம் போய்விட்டன. 3 தலைமுறைகளாக வசதியாக வாழ்ந்த குடும்பம் அண்டை வீட்டில் அரிசி கடன் வாங்கும் நிலை. பிள்ளைகட்குச் சாப்பாட்டுக்கு எந்த வருமானமுமில்லை. அவர்கட்கு insecurity பயமில்லை. அத்துடன் தாங்கள் வசதியான பணக்காரக் குடும்பம்என்ற ஆழ்ந்த நினைவு, உணர்வு தரும் சந்தோஷம், பெருமை ஏராளம்.
  • கோடீஸ்வரன் மகன், கோடிக்கணக்காகச் சம்பாதித்தார். கையில் பணமில்லையெனில் insecurity வந்துவிடும்.
  • இல்லாத குடும்பம். மகன் கோடி ரூபாய்க்குமேல் சம்பாதித்து விட்டான். அவரை insecurity பயம் பிடுங்கித் தின்கிறது. எந்த நேரமும் பிடித்து உலுக்குகிறது.
  • அன்னையை ஆத்மாவில் அரை க்ஷணம் உணர்ந்த எவருக்கும் spiritual security ஆத்மாவில் பாதுகாப்புண்டு.

******



book | by Dr. Radut