Skip to Content

1. சித்தரஞ்சன் தாஸ்

சித்தரஞ்சன் தாஸ்

கல்கத்தாவில் இன்றுள்ள பெரிய ரயில்வே தொழிற்சாலைக்கு சித்தரஞ்சன் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. 1915 முதல் 1924 வரை காங்கிரஸில் சித்தரஞ்சன் தாஸ் காந்திக்குச் சமமாக இருந்தார். 1908இல் பகவான் கேஸ் நடந்தபொழுது சித்தரஞ்சன் தாஸ் அவருடைய வக்கீலாக இருந்தார். துரைசுவாமி அய்யர் பகவானுக்கு 1920இல் இலட்ச ரூபாய் கொடுத்தார். பகவான் மறுத்து விட்டார். அன்னை கூறியதின் பேரில் 10,000ரூ பெற்றுக் கொண்டார். அவர் காந்திஜியின் நண்பர். முதலில் பகவானைக் காணவந்தபொழுது எப்படி என்னிடம் வந்தீர்கள் என்றார். சித்தரஞ்சன் தாஸ் உங்களைப் பார்க்கச் சொன்னார் என துரைசாமி பதில் கூறினார். நாகபுரியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டிற்கு சித்தரஞ்சன் கல்கத்தாவிலிருந்து வருபவர்கட்கெல்லாம் ரூ.30,000 செலவு செய்து அழைத்து வந்தார். "சித்தரஞ்சன் மகாராஜா மாதிரி செலவு செய்கிறார்'' என்றார் மகாத்மா.

சித்தரஞ்சன் தாஸ் பகவானைப் பார்க்கப் புதுவைக்கு வந்தார். சந்தித்துப் பேசினார். பகவான் தேசீய இயக்கத்திற்கு மீண்டும் வரவேண்டும்எனப் பலரும் பிரியப்பட்ட நேரம். மகாநாட்டிற்குத் தலைமை தாங்க அழைத்தனர். பகவான் மறுத்து விட்டார்.

விடை பெறும்பொழுது சித்தரஞ்சன் பகவான் காலைத் தொடக் குனிந்தார். பகவான் தடுத்து நிறுத்தி,

"அலிப்பூரில் நாராயண தரிசனம் பெற்ற பொழுது உங்கள்

நெஞ்சில் நாராயணனைக் கண்டேன்" என்று கூறினார்.

*****



book | by Dr. Radut