Skip to Content

10. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னை துணை.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

ஸ்ரீ அன்னை மற்றும் ஸ்ரீ பகவான் பொற்பாதங்களுக்கு எங்கள் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

நாங்கள் அன்னையிடம் முழுமையாக வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. நாங்கள் எங்களுக்குச் சொந்தமான வீட்டில் ஒருவரைக் குடி வைத்து இருந்தோம் (சுமார் 6 வருடங்களாக). அந்த வீடு townல் இருந்து சற்று outerல் இருப்பதால் ரூ.1500/- மட்டும் வாடகை வந்து கொண்டு இருந்தது. எங்கள் பெண் B.Tech. III year படிக்கிறாள். பையனை +1ல் நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும். அவனை எந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பை அன்னையிடம் விட்டுவிட்டோம். பள்ளி மற்றும் கல்லூரி fees கட்டுவதற்கு எங்களுடைய வீட்டை விற்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். அன்னையை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டில் குடியிருந்தவரிடம் சென்று நாங்கள் வீட்டை விற்க முடிவு செய்துள்ளோம். எனவே 2 அல்லது 3 மாதத்திற்குள் வீட்டைக் காலி செய்து கொடுங்கள் என்று சொன்னோம். அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார். அதன்பின் வீட்டிற்கு அருகில் இருந்த நண்பர் ஒருவரிடமும் சொல்லி வைப்போம் என்று அவரிடம் போய் தற்சமயம் அங்கு அந்த இடத்தில் ground என்ன விலை போகிறது என்றும் விசாரித்தோம். அவரும் தற்போதைய விலையைச் சொன்னார். நாங்களும் வீட்டின் மதிப்பு + ground விலை இரண்டையும் சேர்த்து 7.5 லட்சம் ஆகிறது என்று தொலைபேசியில் தெரியப்படுத்தினோம். அது சமயம் பார்த்து அவர்கள் எங்கோ நிலம் வாங்க முன்பணம் கொடுப்பதற்காக கிளம்பிக் கொண்டு இருந்ததாகவும், நாங்கள் விலையைத் தொலைபேசியில் சொன்னதை சுபசகுனமாகவும் எடுத்துக் கொண்டு, எங்கள் வீட்டைத் தாங்களே வாங்கிக் கொள்வதாகவும் (7.25 லட்சத்திற்கு) பேசி முடித்து ரூ.5000/- முன்பணத்தையும் கொடுத்துவிட்டு அடுத்த நாளே ரூ.1 லட்சம் இன்னும் முன் பணமாக வைத்துக் கொள்ளுமாறும் கூறி ஓர் ஒப்பந்தம் எழுதி முடித்தோம். அவர்கள் கொடுத்த முன் பணத்தை வைத்து பெண்ணிற்கு கல்லூரி feesஉம், பையனை, திருச்செங்கோட்டில் உள்ள ஒரு நல்ல பள்ளியிலும் சேர்த்துவிட்டோம். எங்கள் பையன் ஏப்ரல் மாதம் result வருவதற்கு முன்பே அந்தப் பள்ளியில் சேர entrance பரீட்சையும் எழுதியிருந்தான். 2 அல்லது 3 நாட்கள் கழித்து அந்தப் பள்ளியில் இருந்து எங்கள் பையனை April 24ஆம் நாள் (Darshan day) கொண்டு வந்து சேர்க்குமாறு தொலைபேசியில் தெரியப்படுத்தினார்கள். (இது அன்னையின் முடிவு). X CBSE தேர்வில் 412/500 வாங்கி இருந்தான். தான் மதிப்பெண் குறைத்து வாங்கிவிட்டோம் என்ற வருத்தம் அவனுக்கு இருந்தது. பிறகு மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பம் செய்ததில் அவனுக்கு Scienceல் 10 மதிப்பெண் அதிகம் வந்தது. அதனால் மதிப்பெண் 422/500க்கு என்று ஆனதில் எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி. இதைத்தான் அன்னையின் தனிப்பட்ட முத்திரையாக எண்ணி அன்னைக்கு நன்றி தெரிவித்தோம்.

இது இப்படியிருக்க வீட்டில் குடியிருந்த நபர் 2 மாதம் ஆகியும் வீட்டைக் காலி செய்யாமல், வீடு பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்லியே காலதாமதம் செய்துவந்தார். பின்னர் ஒரு நாள் திடீரென்று வீட்டை நானே வாங்கிக் கொள்கிறேன் என்றும், நாங்கள் என்ன விலைக்குப் பேசியிருந்தோமோ, அதே விலைக்கே, ஒரு வாரத்திற்குள் பணம் கொடுத்து விடுவதாகவும், ஒரு பொது நண்பர் முன்னிலையில் பேசி, ஒரு வாரத்திற்குள் முழுப்பணத்தையும் கொடுத்துத் தம் பெயரில் பவர் ஆப் அட்டார்னி மூலம் செட்டில் செய்து விட்டார்.

இவை அனைத்தும் நடந்தது, எங்களிடம் வீட்டிற்கு advance செய்து, agreement போட்டு, பிறகு எங்களுக்கு எந்தவிதமான கஷ்டமும் வரக்கூடாது என்று அந்த நண்பர் தம்முடைய பிடியையும் உரிமையையும் விட்டுக் கொடுத்ததால் தான். இதை நாங்கள் மதர்தான் இத்தனையும் நடத்தி எங்களுடைய வீட்டை விற்க (at a strokeல் பணம் ஏற்பாடு பண்ணி) உதவியுள்ளார் என்பதை நினைத்து, நினைத்து அன்னைக்கு நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளோம்.

நாங்கள் நினைத்தது ஒன்று. பஞ்சாயத்தில் வீட்டில் குடியிருப்பவர் நல்ல முறையில் காலி செய்து கொடுப்பார். நாங்கள் advance போட்ட பார்ட்டியிடம் விற்றுவிடலாம் என நினைத்தோம். ஆனால் அன்னையின் முடிவோ வேறுவிதமாக அமைந்தது. Agreement போட்டவர் விலகச் சம்மதித்து வீட்டில் குடியிருந்தவரே ஒரே வாரத்தில் தொகையைக் கொடுத்து வீட்டை முடித்துக் கொள்கிறார்.

- ஜெயராம், திண்டுக்கல்

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அறிவுடை விளக்கத்தை வகுக்க, பகுத்தறிவு பயன்படும். அறிவு ஒரு பிரகாசம். அதன் ஒளி தெளிவைக் கொடுக்கக் கூடியது. தெளிவை மட்டுமே கொடுக்கக் கூடியது. அடுத்தவரை ஏற்றுக்கொள்ளவைக்கும் சக்தி அதற்கில்லை. அதிகபட்சம் அதன் உண்மையை மற்றவர்க்குத் தெளிவுபடுத்த முடியும். அடுத்தவர் மனம் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர் தமக்குப் புரியவில்லை என்பார்.
 
அறிவு தெளிவு தரும்.
உணர்வு ஏற்காததை மனம் புரியவில்லை என்று கூறும்.

*******



book | by Dr. Radut