Skip to Content

08. அஜெண்டா

"Agenda"

Jesus ran away from an idiot. An idiot can be changed

ஏசுநாதர் மடையனைக் கண்டு ஓடினார்.

மடையனுக்கும் புத்தி வரும்

- அஜெண்டா

"ஏசுநாதர் அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருந்தார். ஒரு கூடையிலிருந்து மீன் எடுத்துக் கொடுத்தார். அது அட்சயப் பாத்திரமாக வளர்ந்தது. கண் பார்வையிழந்தவனுக்குப் பார்வை தந்தார். நடக்க முடியாதவன் நடந்தான். அப்பொழுது ஒருவர் ஒரு மடையனை அவரிடம் கொண்டு வந்து, "இவனை புத்திசாலியாக்க முடியுமா?" எனக் கேட்டார். ஏசுநாதர் ஓடிவிட்டார்" என்பது ஒரு கதை. கதை உண்மையா, பொய்யா என்பதைவிட இதனுள் தத்துவம் உண்டா எனக் கருதலாம்.

  • ஒருவரை எளிமையாகப் பிரதமராக்கலாம், விசா வாங்குவது கடினம் என்றார் அன்னை. அதாவது பெறுபவர் ஒத்துழைத்தால் வேலை எளிமையாகும்.
  • மடையன் என்பவன் தத்துவப்படி மடையனில்லை. மடமையை அவன் ஆத்மா விரும்பி ஏற்று, அக்கண்ணோட்டத்தில் உலகை அறிய முயல்கிறது. பகவான் ஸ்ரீ அரவிந்தர் அறியாமை உயர்ந்த அறிவு எனக் கூறுவது நமக்குத் தெரியும்.

    ஒருவருடைய ஆத்மா தேர்ந்தெடுத்த பாதையை நாம் கர்மம் என்கிறோம்.

    அதில் தலையிட எவருக்கும் உரிமையில்லை. தலையிட்டால் அவருடைய கர்மம் தலையிடுபவரைப் பாதிக்கும்.

    மடையன் தானே விரும்பி அறிவுபெற முயன்றால், நாம் பள்ளியில் பெற்ற அறிவைப்பெற அவனுக்கு 80 அல்லது 100 ஆண்டுகளாகும்.

    அன்னைமுறையை அவன் ஏற்றால், அவனுக்கு மடமை எளிதில் நீங்கும்.

    அது தொடரப்பட்டால், அவனே மேதையுமாகலாம்.

    அன்னை இது விஷயத்தில் தம் அனுபவத்தை எழுதியிருக்கிறார்.

    அன்னைமுறை என்பது ஆத்ம சமர்ப்பணம்.

    பாஸ் செய்ய முடியாத மாணவன் 45 நாளில் முதல் மார்க் வாங்கியது எனது சொந்த அனுபவம்.

  • இந்தியப் பொருளாதார நிபுணர் 1980இல் "இந்தியா அமெரிக்காவாக வேண்டும்” என்று கூறியவரிடம் "அது வீண் கனவு. 100 ஆண்டிலும் நடக்க முடியாது” என்றார்.

    அன்றைய நிலையில், அவர் அறிந்த பொருளாதாரப்படி அது உண்மை. இன்று 2025இல் இந்தியா ஜெர்மனியைத் தாண்டும் என்று அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். 2050இல் உலகில் மூன்றாம் நாடாக இருக்கும் என்கிறார்கள். இதன் உண்மை என்ன?

    அபிவிருத்தி என்பது படிப்படியாய் வருவது. அதற்கு நாளாகும்.

    திருவுருமாற்றம் என்பது தான் உள்ள நிலையை அறிந்து, மனதால் ஏற்று, தலைகீழே - எதிராக - மாற ஒருவர் முடிவு செய்தால்,

    ஏழ்மையை உருவாக்கும் சக்திகள் உள்ளே மாறி
    செல்வத்தை உருவாக்கும் சக்திகளாக மாறும்.
    அதனால் ஏழை, செல்வனாவான்.

    ஏழை, தான் ஏழ்மையைவிட்டு வெளிவர முடியாதுஎன நம்புவதால் ஏழ்மை நீடிக்கிறது. வரமுடியும் என நம்புவதாலும், முயல்வதாலும், அதற்கு ஆத்மாவைத் துணைதேடுவதாலும், நடக்காதது நடக்கும்.

  • கீழ்மட்டத்தினின்று மேல்மட்டம் வந்த உத்தமர்களை ஆயிரமாயிரமாகப் பத்திரிகைகள் பாராட்டி எழுதுகின்றன.

******



book | by Dr. Radut