Skip to Content

06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. ஓடும் ஆற்று நீருக்கும் தொடக்கமாக ஓர் ஊற்று இருக்கும்.
    • தொடக்கமும் முடிவுமில்லாத ஆறு அன்பர் வாழ்வு.
  2. சினம் தன்னைத் தானே தண்டித்துக் கொள்ளும்.
    • சினத்தை மனத்தின் செயலிலிருந்து பிரித்தால் அகந்தை தெரியும்.
  3. கோபத்திற்குக் கண்ணில்லை.
    • பொறுமை, நிதானம் சமர்ப்பணத்தால் கோபத்திற்கு தியானத்தின் பலன் தரும்.
  4. கேடு தானாகவே தேடி வரும்.
    • கேடு அழியும் நேரம் வந்தால் அன்பரை நாடும்.
  5. கேடு காலத்தினால் விளையும் பயன் நன்மையே தரும்.
    • அன்னைச் சூழல் காலத்திற்குக் கேடு விளைவிக்கும் குணத்தை மாற்றிவிடுகிறது.

தொடரும்....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஆழ்மனத்தில் விரும்பிச் சேர்த்து இன்று மறந்தவை, பின்னர் (original ideas) புதிய கருத்துகளாக எழும்.
 
விரும்பி மறந்தவை புதியதுபோல் பூக்கும்.

*****



book | by Dr. Radut