Skip to Content

05. சாவித்ரி

"சாவித்ரி"

Canto Two The Kingdom of Subtle Matter

சூட்சும ஜடத்தின் இராஜ்ஜியம்

P.103 In the impalpable field of secret self

பிடிபடாத ஆத்ம இரகஸ்ய அரங்கில்

  • இச்சிறு ஜீவனின் பரந்த புறத்தின் ஆதரவு
  • திருஷ்டியைத் தடைசெய்யும் பூமியின் வேலி.
  • மந்திரப் பளிங்கின் மாயமான வாயு மண்டலம்
  • உடலறியாத வாழ்வின் உண்மையைக் கண்டு
  • சூட்சுமப் பொருளை ஊனக்கண்ணுக்கு உணர்த்தும் ஒளி
  • அற்புதம் அடுக்கடுக்காக எழும் அழகு மிகும் அமைப்பு
  • ஜடத்தின் சூட்சுமம் மாயவித்தை செய்யும் ராஜ்யம்
  • பிரகாசமான வண்ணம் எல்லை கட்டும் வானம்
  • அழகின் நிஷ்டை மூடும் லேசான திரை துள்ளியெழும்
  • மேதையின் விளக்கம் மேலெழும் முன்னணி
  • அழகொழுகும் ரூபம் மலிந்த நமது லோகம்
  • பூமியின் குருட்டுப்பார்வை மறைக்க முடியாத மாநிலம்
  • உருவம் ஒளி பொருந்திய அழகு, பொருள் உண்மையின் பெருமை பெற்றது.
  • மங்கிய ஒளியின் மனமறியாத புதிர்
  • கண்கள் மூலம் சொர்க்கம் எட்டிப் பார்த்தது
  • புல்லரிக்கும் ஸ்பர்சம், குரல் புனித இசை
  • புவியின் சுபாவம் அதன் ஒளிமயமான மூலத்தைக் கண்டது
  • தன் கடமையை நிறைவேற்றும் சிறப்பான திட்டங்கள்
  • சக்தி வெளிப்பட முயலும் பிரசவ வேதனை
  • வரையறுக்கப்பட்ட வழிமுறையின் சக்குபந்திக்குள் அமையும் உறக்கம்
  • முயற்சியும் வீண், வெற்றியும் பலன் தாராது
  • வரைப்படமாக நிர்ணயித்த காலவரையறை
  • வரப்போகும் இராஜ்ஜியங்களின் உருவம்
  • ஆசை வகுத்த அழகுநிறை ஆடைகள்
  • சிக்கல் மிக்க சந்து பொந்தின் பொன்னான பலன்
  • பிடிபடாத செல்வம்; கண்காணாத பொக்கிஷம்
  • மனித எண்ணம் எட்ட முடியாத உயரத்தின் கரைபடாத கரு
  • தெளிந்த சூழலின் அமைந்த அமைதி
  • விவரமற்ற ஆரம்பம் விலக்கப்பட்ட இடம்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர் 

இன்று நாம் பிரகிருதியால் சூழப்பட்ட அகந்தையர். அகந்தை கரைந்தபின் நாம் பரிணாம வளர்ச்சிக்குரிய சைத்தியபுருஷனாவோம். பிரபஞ்சத்தில் ஆன்மாவின் பரிணாம வளர்ச்சிக்குரிய மையம் சைத்தியபுருஷன். அதனால் பிரகிருதியிலுள்ள அன்னை, நம் சைத்திய புருஷனை நோக்கி வருவார்கள். மனமும் ஜீவனும் தன்னிறைவால் நிரம்புவது அன்னை நம்மை நோக்கி வருவதன் அறிகுறி.

அன்னையின் வருகை.



book | by Dr. Radut