Skip to Content

02. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

கர்மயோகி

 

XIX. Life
 
 
We see what Mind is in its divine origin.
Page No.173
Para No.01
It is related to the Truth-Consciousness.
Mind is the highest of the three lower principles.
They constitute our human existence.
It is a special action of divine consciousness.
It is the final strand of the whole creative action.
The Purusha has the relations of different forms and forces of
himself to each other.
Mind enables the Purusha to hold apart those relations.
It creates phenomenal differences.
They take the appearance of radical divisions.
It is so to the individual soul.
Because it has fallen from the Truth-Consciousness.
It is the original perversion.
It is the parent of all the resultant perversions.
They impress us.
They do so as contrary dualities.
They are the opposition proper.
19. வாழ்வு
 
மனத்தின் தெய்வீக ஆரம்பத்தை நாம் காண்கிறோம்.
மனம் சத்தியஜீவியத்துடன் தொடர்பு கொண்டது.
கீழ்உலகின் மூன்று லோகங்களில் உயர்ந்தது மனம்.
இதுவே மனித வாழ்வு.
தெய்வீக ஜீவியத்தின் சிறப்பான செயல் மனம்.
சிருஷ்டியின் முழுமையில் முடிவான கட்டம் மனம்.
பல ரூபங்களும் சக்திகளும் தங்களுக்குள் தொடர்பு கொண்டன.
இவை புருஷனுடையவை.
இத்தொடர்புகளின்று பிரிந்து நிற்க புருஷனுக்கு மனம் உதவுகிறது.
தோற்றத்தில் மாறுபாடுகளை மனம் உண்டுபண்ணுகிறது.
தோற்றத்தைத் தீவிரப் பிரிவினையாக அவை கொள்கின்றன.
ஜீவாத்மாவுக்கு அப்படித் தோன்றுகிறது.
சத்தியஜீவியத்திலிருந்து பிரிந்ததால் அப்படித் தோன்றுகிறது.
இதுவே குதர்க்கத்தின் ஆரம்பம்.
பின்னால் எழும் எல்லாக் குதர்க்கங்களுக்கும் இதுவே தாய்.
நமக்கு இப்படித் தோன்றுகிறது.
இவை முரண்பாடான இரட்டையாகக் காட்சியளிக்கிறது.
இதுவே முறையான எதிர்ப்பாகும்.
It is an opposition to the life of the Soul.
It is the Soul in the Ignorance.
It is not separated from the Supermind in the beginning.
Then, it supports the various workings of Truth.
They are the workings of the universal Truth.
It, then, does not support the perversions and falsehood.
Mind appears as creative cosmic agency.
Page No.173
Para No.02
Our normal mentality is different.
We regard Mind as a perceptive organ.
It perceives what is already created.
It is created by Force working in Matter.
We allow Mind an origination.
We allow to it a secondary creation.
It is of new combined forms.
We are recovering some old knowledge.
Science is helping us.
That shows a new insight.
There is a subconscious Mind in Matter, it says.
It is at work and aims at emergence.
It emerges first in the forms of life.
Secondly it comes in the forms of mind itself.
First, it is seen in the nervous consciousness.
It is in the plant life.
Also it is in the primitive animal.
Secondly it is in man and the evolved animal.
It is there we see the ever-developing mentality.
Matter is only substance form of Force.
We saw it already.
Now, we make another discovery.
இது வாழ்வுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள எதிர்ப்பு.
இது அஞ்ஞானத்தின் ஆத்மா.
ஆரம்பத்தில் இது சத்தியஜீவியத்தினின்று பிரியவில்லை.
சத்தியத்தின் பல கூறுகளை அது ஆதரிக்கிறது.
அவை பிரபஞ்ச சத்தியத்தின் அம்சங்கள்.
அப்படியானால், அது பொய்யையும், குதர்க்கங்களையும் ஆதரிப்பதில்லை.
பிரபஞ்சத்தில் மனம் சிருஷ்டியின் கருவியாகத் தோன்றுகிறது.
நாம் பொதுவாக மனத்தை அப்படி அறிவதில்லை.
மனம் அறிவின் கருவி என நாம் அறிவோம்.
சிருஷ்டிக்கப்பட்டதை அறிவது மனத்தின் திறன்.
சக்தி ஜடத்தில் செயல்படுவதால் அவை சிருஷ்டிக்கப்படுகின்றன.
மனத்திற்குச் சொந்தமான சக்தியுண்டு என நாம் கொள்கிறோம்.
அது இரண்டாம்பட்ச சிருஷ்டி.
அது புதிய இணைந்த ரூபங்கள்.
பழைய ஞானத்தை நாம் மீண்டும் கண்டுபிடிக்கிறோம்.
விஞ்ஞானம் உதவுகிறது.
இதற்குப் புதிய ஞானம் உதயமாகியுள்ளது.
ஜடத்தில் ஆழ்ந்து புதைந்துள்ள மனம் உண்டு என விஞ்ஞானம் கூறுகிறது.
அது வேலை செய்கிறது. புறப்பட்டு வெளியே வருகிறது.
முதலில் அது வாழ்வின் வடிவங்களாக வெளிவருகிறது.
அடுத்தாற்போல் அது மனத்தின் உருவமாகவே வருகிறது.
முதலில் அது உயிரின் ஜீவியத்தில் காணப்படுகிறது.
அது தாவர வாழ்வு.
இது வளர்ச்சியற்ற விலங்குகளிலும் உண்டு.
அடுத்தாற்போல் இது மனிதனிலும், வளர்ந்த மிருகங்களிலும் உண்டு.
இங்கே தொடர்ந்து வளரும் மனப்பான்மை தெரியும்.
ஜடம் என்பது பொருள் பெற்ற உருவம்.
நாம் அதை ஏற்கனவே கண்டோம்.
இரண்டாம் புதிர் விளங்குகிறது.
It is material force is energy-form of Mind.
Material force is subconscious Will, its operation.
Will works in us.
It works in what seems to be light.
In truth, it is no more than half-light.
Material force works in us.
It does so in what seems to us darkness.
It is of unintelligence.
They are in essence the same.
Materialistic thought felt it instinctively.
It saw from the lower or wrong end.
Spiritual knowledge works from the summit.
It discovered it long ago.
Therefore the subconscious Mind created this material world.
It is Intelligence.
It manifests Force as its driving-power.
It is its executive Nature.
It is Prakriti.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Contd...
ஜடசக்தி என்பது சக்திரூபம், மனத்தின் சக்திரூபம்.
ஆழ்மனம் உறுதி பூண்பது ஜடசக்தி.
உறுதி நம்மில் வேலை செய்கிறது.
ஒளியாகத் தோன்றுவதில் அது வேலை செய்கிறது.
உண்மையில் அது பாதி ஒளி.
ஜடசக்தி நம்மில் வேலை செய்கிறது.
நாம் இருள் என அறிவதில் அது வேலை செய்கிறது.
இது அறிவற்றது.
சாரத்தில் இரண்டும் ஒன்றே.
நாத்திகவாதி அதை இயல்பாகக் கண்டான்.
கீழிருந்து தவறான பாதைமூலம் இதைக் கண்டெடுத்தான்.
ஆன்மீக ஞானம் மலையுச்சியிலிருந்து வேலை செய்கிறது.
இவ்வுண்மையை அது நெடுநாளைக்குமுன் கண்டு கொண்டது.
இந்த ஜடஉலகை ஆழ்மனம் சிருஷ்டித்தது.
அது அறிவு.
சக்தியை அது தன்னை உந்தும் சக்தியாக வெளிப்படுத்துகிறது.
அதன் சக்தியைச் செயல்படுத்தும் இயற்கை இது.
இதைப் பிரகிருதி என்கிறோம்.
தொடரும்....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
துரோகத்திற்குப்பின் அன்னையைக் காண்பது, தன்னுள் அன்னையைக் காண்பதாகும். எனவே மனிதனுடைய துரோகம் அன்னைக்கு விஸ்வாசமாக மாறக்கூடும்.
 
அன்னையை துரோகத்தில் காண அகக்கண் விழிக்க வேண்டும்.
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மன்னிக்க முடியாத பாவமான குற்றத்தை உனக்கிழைத்தவர் அதைச் செய்யும் காரணமாக நீயே இருந்தாய் என அறிவது உணர்வின் உண்மை.
 
உனக்கு வரும் பாவத்திற்கு நீயே காரணம்.
 

*****



book | by Dr. Radut