Skip to Content

01. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

நீங்களும் நானும்

(இருவர் அன்பால் நெருங்கி ஆர்வத்தால் செழித்து வாழ்வை அருளால் நிரப்ப விரும்பினால் அவர்கட்குரிய பக்கம் இது).

 • இது ஒரு புனித உறவு.
  புனிதமான உறவு, புரிய முடியாதது.
  நினைக்காதே, உணராதே.
  வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்.
  வாழ்வதே முக்கியம், நினைவும் உணர்வுமல்ல.
  நினைவழிந்து, மெய்மறந்து, பரவசமாகி, நெகிழ்ந்த அகவாழ்வு நமக்குரியது. கசப்பு விருப்பாவது, ஆபத்து அமிர்தமாவது, அசிங்கம் அன்பாகும்.
  வாழ்வின் சிறப்பு நம் உறவு.
  உன் பாதம் எனக்குப் புனிதமானது.
  அதன் உயர்வு உணர்வுக்குரியது.
  அகவாழ்வில் மனமும் ஆத்மாவும் நினைவால் புனிதப்படுகின்றன.
  எதையும் நல்லதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
  இவ்வுறவில் நினைவு நுழையக் கூடாது.
  உணர்வே சிறக்க வேண்டும்.
  உணர்வெல்லாம் உயரும் உணர்வாக அமைய வேண்டும்.
  எவரோடும் நம் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது.
  இந்த உறவில் யோகம் பலித்துப் பூரணமாகும்.
  ஒருவர் அடுத்தவரை சரணடைவதே தேவை.
  "அற்புதம் அன்றாட நிகழ்ச்சி''யாவதைக் காணலாம்.
  மனித வாழ்வின் சுவையைக் கடந்தது. ஷேக்ஸ்பியர் இதை (milk of human kindness) மனித உறவில் அமிர்தம் என்றார்.
  இந்த உறவு கணவன் மனைவி, நட்பு ஆகியவற்றைக் கடந்த உறவு.
  நெஞ்சு விம்மி, சந்தோஷமாகப் பரவி, காரணமின்றி இனிக்கும்.
  இனிய நெஞ்சம் இதமான ஆரோக்கியம்.
  உணர்வு செறிந்தால் உடல் நலம் உயரும்.
  உலகம் பெரியது, உள்ளே காண்பது, உத்தமமானது.
  நாலுபேர் புரிந்து கொள்வதன்று இந்த உறவு.
  இது உறவன்று, உள்ளத்தின் ஐக்கியம்.
  உள்ளம் உண்மை, அது மட்டும் உண்மை.
  "உள்ளதெல்லாம் நீயே'' என்பது பகவானுடைய மந்திரம்.
  அதுவே நமக்குரியது.
  உள்ளேபோ. உன்னைக் கண்டுபிடி, பரந்து பிரபஞ்ச முழுவதும் பரவ வேண்டும்.
  அதுவே உண்மையான வாழ்வு. சந்தோஷம் எழும். அலையலையாக வரும்.
  உள்ளே எழும் பிரவாகம் உயிரைப் புனிதமாக்குவது.
  ஒரு துளி உணர்ச்சியுள்ளவரை உலகம் நம் கையில்.
  உயர்ந்தது மட்டும் உறையும் உலகமிது.
  தாழ்ந்தது தானே கரைவது தகுதிக்கு அடையாளம்.
  நெஞ்சில் ஊறும் அன்பு வாழ்வை அன்னையாக்கும்.

சத்தியம்.

 • சத்தியம் பெரியது.
  சத்தியம் எரிக்கும்.
  நம் பொய்யை சத்தியம் எரிக்கும்.
  சத்தியம் நித்தியம்.
  சத்தியத்தை ஏற்ற அரிச்சந்திரன் படாதபாடு பட்டான்.
  அன்னை மெய் சொல்பவர்க்கு (Sunlit path) ஒளிமயமான பாதையை வழங்குகிறார்.
  இந்த யோகத்தில் அன்னை பட்டபாடு பெரிது.
  இந்த யோகம் செய்யும்படி யாரையும் நான் அழைக்க மாட்டேன் என்றார் அன்னை.
  யோகத்தால் உடல் வெந்தது. எந்த நேரமும் ஓலமிடத் தோன்றியது என்கிறார் அன்னை.
  யோகத்தில் பகவானைக் கடந்து சென்றார்.
  அவர் செய்தவரை அன்னைக்கு சிரமமேயில்லை.
  அவர் சாதனையைக் கடந்தபொழுதுதான் கஷ்டம் வந்தது.
  அது நெருப்பாற்றில் எதிர்நீச்சல் நீந்துவதுபோன்றது.
  ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் செப்பனிட்ட பாதை நமக்கு இனிமையானது.
  கஷ்டம் அவர்களைக் கடந்து போகும் பொழுதுதான்.
  சத்தியம் சத்திற்குப் புறம்.
  ஜோதி சத்தியத்தின் பகுதி.
  ஆன்மீக ஒளிமுன் நடுப்பகல் காரிருளாகத் தோன்றும்.
  ஆன்மீக இருட்டுமுன் நள்ளிரவு ஒளிமயமாகும்.
  சூரியனுடையது ஒளியன்று. அது ஆன்மீக ஒளியின் பிரதிபலிப்பு.
  உள்ளே சூரியன் உதித்தால் உலகமே ஜோதியாகும்.
  சத்தியம் பேசி, சத்தியத்தை நினைத்து, சத்தியமாய் வாழ்ந்தால், அகத்தில் சூரியன் உதயமாகும். அது ஞானோதயம், ஆன்மீக சூரியோதயம்.
  உள்ளே ஆதவன், பகலவனாக, பாஸ்கரனாக உதித்தால் வாழ்வு ஆன்மீக வாழ்வாகும்.
  சத்தியம் அல்லது பாதாளம்என்றார் அன்னை.
  நினைக்க, தீர்மானிக்க, பேச சத்தியம் மட்டும் தேவையென முடிவு செய்ய வேண்டும்.
  உள்ளே ஒரு புரட்சி எழும். அது ஆன்மீகப் புரட்சியாகும்.
  புரட்சி மலர்ச்சியாக சத்தியம் பிடிக்க வேண்டும்.
  நித்தியமான சத்தியத்தை நிலையாக ஏற்க மனம் நினைப்பை நிதர்சனமாக்குவது வாழ்வில் அன்னை உதயமாவது.
  அன்னை சத்தியம்; அன்னை மட்டும் சத்தியம்.

வாழ்வின் எதிரொலி
(Life Response)

 • சூழ்நிலை நம்மைப் பிரதிபலிக்கிறது.
  1. என் கெட்ட குணம் கெட்ட மனிதனை என்னிடம் கொண்டு வருகிறது.
  2. அது பிரதிபலிப்பு, தற்செயலானது, அதற்கு முக்கியத்துவமில்லை, வெறும்பிரதிபலிப்பு, நமக்கு எந்தப் பங்குமில்லாமல் நம் குணம் பிரதிபலிக்கும்.
  3. டாக்டரிடம் வியாதியஸ்தர் வருவதுபோல் கெட்டவர் நல்லவரிடம் வருவார். அன்பரிடம் நல்லது அதிகமாக இருப்பதால் அவரிடம் வந்து திருவுருமாற அவர்கள் வருகிறார்கள்.

  நாம் நம்மை எந்த நிலையில் வைக்கிறோம்என்பது நம் உண்மையைப் (sincerity, truthfulness) பொருத்தது. ஒன்றை மூன்றாகவும் கருதும் மனம் உண்டு.

  • இந்த மூன்றாம் நிலையிலும் மனித சுபாவம் உண்மையாகும்.

   நான் நல்லவனாகவேயிருப்பதால் என்னிடம் வந்து தான் நல்லவனாக மாற அடுத்தவன் வந்தது உண்மையானாலும் அது மேல்மனத்தில் (surface mind) ஜீவியத்திற்கு (consciousness) உரியதாகும். அதேபோல் 8 நிலைகளுண்டு. இரண்டாம் நிலைக்குப் போனால் மூன்றாம் கட்டம் (நல்லவன்) முதற்கட்டமாகும் (கெட்டவனாகும்).

 • செயலின் சுபாவம் (character) எதுவானாலும் - நல்லது, கெட்டது - செயல் என்ற அளவில் அதற்கு உயிர் உண்டு.

  என்னை துரோகம் செய்தவர் ஒரு நண்பர். நெருங்கிய நண்பராக இருந்து, நான் நம்பியதால் என்னை முழுத்துரோகம் செய்தவர், இவர் 34ஆம் வயது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் இவருடைய அபிப்பிராயம் மூட நம்பிக்கைஎன எடுத்துக் கூறியதால் 34ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார். இவர் அண்ணன்மீது வந்த அரெஸ்ட் வாரண்டை ரத்து செய்ய நான் முயன்றேன். நண்பர் நேர் துரோகியானார். நேரடியாகப் பல பெரிய தொந்திரவு செய்தார். என் அந்தஸ்து உயர்ந்த பிறகு அடக்கமாக என்னை நாடி வந்தார். நான் முகம் கொடுத்துப் பேசவில்லை. வந்துவிட்டேன். அங்கிருந்து ½ பர்லாங் என்னுடனே வந்து நான் காரில் ஏறும்வரை நின்றிருந்து, கார் புறப்பட்டபின் போனார். நான் ஏறிட்டுப் பார்க்கவில்லை. இவர் துரோகம் செய்ததால், இவரிடம் பிரியமாகப் பேசினால், மீண்டும் இவரால் துரோகம் செய்ய முடியும். கொஞ்ச நாள் கழித்துப் பழைய நண்பரை ஆசிரம வாயிலில் கண்டு, சமாதிக்கு அழைத்துப் போனேன். வெளியில் வந்து வழியனுப்பினேன். அவர் காரில் உட்கார்ந்து என்னிடம் விடை பெறாமல், என்னை நிமிர்ந்து பார்க்காமல் போனார். நான் என் துரோகிக்குச் செய்ததை அவர் எனக்குச் செய்தார். இவருக்கு என்மீது வெறுப்பு, பகையில்லை.

  • ஆனால் செயல் அப்பட்டமாகத் திரும்பி வருகிறதுஎன்பது உண்மை.
  • செயலின் உருவம் உணர்ச்சியினின்று பிரிந்து தனித்துச் செயல்படுகிறது.
 • நாம் உலகை விட்டகன்றபின் மட்டமான உலகம் நம்மை விட்டகல்கிறதுஎனத் தெரியாமல் நாம் மீண்டும் அதை நாடுகிறோம். அது அறியாமையைப் பேணுவது.
 • தீமையே உருவானவரும் நல்லது செய்வார். அது அருள் செயல்படும் வகை.

  சுபாவமே தீமையானதானால் அவர்களால் கெடுதல் செய்யாமலிருக்க முடியாது. அவர்களை மீறிச் செய்ய ஆரம்பித்தால் நல்ல சொல் வாயால் வாராது. நல்ல செயலைக் கை செய்ய மறுக்கும்.

  அன்னை அன்பர்களுக்கு அப்படிப்பட்டவரும் தானே விரும்பி, முனைந்து நல்லது செய்வதைக் காணலாம். தீயவர் நம் வாழ்வில் வருவதில்லை. தானே வந்தால், அவர்களைவிட்டு விலகாமல், ஏற்றுக் கொண்டால், நம் ஆழ்ந்த சுபாவத் தீமை திருவுருமாறும்.

  அந்த நிலையில் தீமையே உருவகமானவர் கற்பனைக்கெட்டாத பெரிய நல்லதை நமக்குக் கேட்காமல் வலியச் செய்வார். இது என் அனுபவம்.

  யானை வாயில் போன கரும்புபோல என்பது பழமொழி. அன்பருக்கு அதுவும் புதிய அனுபவத்தைத் தரும்வழி மீண்டும் வரும். நமக்கு வேலை முடியுமிடத்தில் எதிரிக்குச் செல்வாக்கிருந்தால் அந்த வேலை கெடும். நம் வேலைக்கு அனுமதியளிப்பதே எதிரியானால், அந்த வேலை என்னவாகும்? எதிரி தலைமை தாங்கிச் செய்யும் வேலையிலும் அன்பர் வேலை குறைவர நடப்பது என் அனுபவம்.

  பாவம் பாவமே; பாவம் பாவமில்லை; பாவம் புண்ணியம்என்று மூன்று நிலைகளில் முடிவு மனநிலையைப் பொருத்தது.

  செயலைப் பொருத்ததில்லை.

மறுத்துப் பேசுவது

 • இது மனிதன் குணம் - உலகில் இல்லாத இடமில்லை.

  மறுத்துப் பேசுவது தவறுஎன நெடுநேரம் பேசுபவர் அந்த நேரம் மற்றவரை மறுத்துப் பேசுவதையறியார்.

  • அறிவு எழுவதின் நிலைகள்.
   Observation, தன்னைச் சுற்றி நடப்பதைக் கவனிப்பது.
   Reflection, அதைப் பற்றிச் சிந்திப்பது.
   Understanding, ஒரு முடிவுக்கு வருவது.
   Negative thinking, முடிவுக்கு வருமுன் உள்ளதை இல்லை எனக் கூறுவது.

  சிந்தனை பூரணமாக ஒரு பிரச்சினையின் இரு புறங்களையும் அறிய வேண்டும். அதன் முதற்படி "இல்லை' என்பது. அடுத்த கட்டம் "உண்டு” என்பது. முடிவாக இரண்டும் சேர்ந்து நம் அபிப்பிராயமாக மாறுகிறது. எனவே சிந்திக்க ஆரம்பிக்கும் முதற் கட்டத்தில் மனிதன் "இல்லை' என்பான். அதாவது மறுத்துப் பேசுவான். மறுத்துப் பேசுவது என்றால் மனிதன் சிந்திக்க ஆரம்பித்துள்ளான்என்று பொருள்.

  உள்ளதை இல்லையென்பது மறுத்துப் பேசுவது.
  மறுத்துப் பேசுவது மனம் சிந்திக்க ஆரம்பிப்பது.

  மறுத்துப் பேசுகிறான்எனப் புரிந்து கொண்டால் வரும் கோபம் அவன் சிந்திக்க ஆரம்பித்து விட்டான் எனப் புரிந்தால் கோபம் தணியும்.

 • குறுக்கே பேசுவதும் மறுத்துப் பேசுவதும் ஒரே தரத்தவை.
  தானும் கலந்துகொள்ள வேண்டும் ஆசை குறுக்கே பேசச் சொல்கிறது.

  [இக்குணமுள்ளவர், இதை அறவே அழிக்க முயன்றால் அவர் 60, 70 வயதில் பெறும் பலனை 20 வயதில் பெறுவார். அவரறிந்தவரில் மிக உயர்ந்தவர் நிலையை அடைவார். அதிகபட்ச முன்னேற்றம் (Maximum possible progress) என்பது பல தரத்தன.]

  1. பெற்றோரிடமிருந்து பெற்றது.
  2. அவனுடைய திறமை தருவது.
  3. அவன் ஆழ்ந்து வெளிப்படாத திறமை தரக் கூடியது.

  சமூகம் தரும் வாய்ப்பைப் பெரும்பாலோர் பெறுவதில்லை. நான் B.A. பட்டம் பெற உதவிய தமிழ்ப் பண்டிதர் தம் முயற்சியால் M.A.யும், B.T.யும் பெற்றதால் தலைமையாசிரியரானார். சமூகம் அந்த வாய்ப்பைத் தந்தாலும் அவர் போன்ற 100 பேரில் அவர் மட்டுமே அதைப் பெற்றார்.

  இலட்சியமும் சொற்பொழிவு ஆற்றும் திறமையும் என் பேராசிரியரை வைஸ்சான்ஸசலருக்கு அடுத்த நிலைக்கு உயர்த்தியது. தமிழ்நாட்டில் (educationist) கல்வித்துறையில் பிரபலமாக்கியது.

  P.C.அலெக்ஸாண்டர் நேர்மையால் உயர்ந்தார்.

  P.C.அலெக்ஸாண்டர் I.A.S. எழுதியபொழுது அவருடன் அதே தகுதியுள்ள 30 பேர் பரீட்சை எழுத முன்வரவில்லை.

  அன்பர்களில் (Silent will) மௌன சக்தியை ஏற்றுப் பெரும்பலன் பெற்றவர் நாட்டில் பெருந்தொழிலதிபரானார்.

  மௌனசக்தியை அதுபோல் அன்பர்கள் ஏற்றுப் பலன் பெறுவதில்லை. அன்பராக இருப்பதின் பலனைப் பெருமளவு பெறுபவர் குறைவு. நானறிந்தவரை முழுப்பலனை அறிந்தவரேயில்லை. அன்னைச் சூழலின் சக்தியை அவருடனிருந்தவர்களிடம் பேசினால் அவர்கள் நம்புவதில்லை. கேலி செய்வர்.

  குணம் தலைகீழே மாறினால் இது போன்ற முன்னேற்றமுண்டு.

  அதன் அளவு பர்சனாலிட்டி personalityயால் நிர்ணயிக்கப்படும்.

தொடரும்....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தன்னையே ஒளித்து, மீண்டும் காண்பதே இருப்பதில் பேரின்பம் என்கிறார் பகவான். தடங்கலைத் தாண்டி வருவது இன்பம் துய்க்க, பெரிய வாய்ப்புகளை அளிக்கிறது. இதை, தெரிந்தும் செய்யலாம்; தெரியாமலும் செய்யலாம். நம் உரிமைகளை, குழந்தைகள், மனைவி, கீழுள்ளவர்களுக்குக் கொடுத்து, அதை ஒரு கொள்கையாகப் பின்பற்றி அவர்கள் செயலை அனுபவிப்பது இம்முறையின் சிகரம். அதைவிட உயர்ந்தது, அவர்கள் தவறாக அவ் உரிமையைப் பயன்படுத்துவதை நாம் ரசிப்பது. அதன் ஆன்மிக உச்சம் ஈஸ்வரன் சக்திக்குச் சரண் அடைவதாகும். பிரச்சினைகளும் சிரமங்களும் நாம் கண்மூடித்தனமான லீலையில் ஈடுபட்டதைக் குறிக்கும்.
 
குடும்பத்தினர் தவறு ருசிக்குமானால் மனிதன் பிரம்மமாகிறான்.

*****book | by Dr. Radut