Skip to Content

07.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரின் பாதத்தில் சமர்பிக்கின்றேன்.

நான் CRPF-இல் Hyderabadஇல் LDCஆக பணிபுரிகிறேன். என் குழந்தைக்கு 6 வயது. அவனுக்கு Hyderabad climate conditionஒத்துவராமல் அடிக்கடி நோயினால் (ஜுரம், சளி, இருமல், weeezing) அவதியுற்றான். எனவே அவனைச் சென்னைக்கு என் பெற்றோர்களிடத்தில் அனுப்பிவைத்தேன். அங்குக் கடவுளின் கிருபையால் பரிபூரணச் சுகத்துடன் இருக்கிறான். எனக்கோ குழந்தையைச் சென்னையில் விட்டுவிட்டு Hyderabadஇல் இருக்க மனம் இல்லாததால் சென்னைக்கு transfer கேட்டு ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரின் ஆசியோடு apply செய்தேன். But அதை எனக்கு return செய்துவிட்டார்கள், due to some administrative reasons. So again I have applied for personal interview of IGP. Again எனக்கு அதையும் தர மறுத்துவிட்டார்கள். இதன்பிறகு நான் மிகவும் மனம் உடைந்து நம்பிக்கையில்லாமல் அழுதுகொண்டிருந்தேன். "அன்னையே உன்னிடம் நான் கேட்டு உன் பாதத்தில் வைத்து சமர்ப்பித்த என் விண்ணப்பம் இப்படி எல்லா வழிகளிலும் return செய்துவிட்டார்களே என்று வருத்தப்பட்டேன். எனக்கு வழி என்ன அன்னையே'' என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன்.

திடீரென்று என் மனதில் IGP officeக்கு நாம் directஆகச் சென்று ஏன் அந்த concerned officer ஐப் பார்க்கக்கூடாது என்று தோன்றியது. அதன்படியே அன்னை ஸ்ரீ அரவிந்தரை மனதில் நிறுத்தி ஒரு சனிக்கிழமையன்று உயர் அதிகாரியை சந்தித்து என் பிரச்சினைகள் அனைத்தையும் கூறினேன். அவரும் உன்னை நான் IGPஐப் பார்ப்பதற்கு permission வாங்கித் தருகிறேன் என்றார். பின்பு அதேபோல் IGP யிடம் அழைத்துச் சென்றார். ஆனால் IGP யோ என் கஷ்டங்களைக் கேட்காமல் அவர் தன்னிஷ்டம்போல் பேசி என்னைத் திட்டி "உனக்கு குழந்தை வேண்டுமா? வேலை வேண்டுமா? Transfer தரமுடியாது'' என்று மறுத்து எழுதிவிட்டார். அதைக் கேட்டு இன்னும் மனம் வருந்தி மிகவும் கஷ்டப்பட்டேன்.கிடைக்காது என்று நம்பிக்கை இழந்தேன்.

பிறகு நான் சந்தித்த அதே உயர் அதிகாரியை again சென்று பார்த்தேன். "ஐயா, என்ன செய்வது?IGP  இப்படிச் சொல்லி விட்டாரே? நீங்கள் மனது வைத்தால் நடக்கும், உங்களைத் தெய்வம்போல் நம்பியுள்ளேன்'' என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். அதன்பிறகு நான் தினமும் அன்னை ஸ்ரீ அரவிந்தரை மனதில் நிறுத்தி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன். சில நாட்களுக்குப்பிறகு எனக்குச் சென்னை மாற்றல் one yearக்கு order வந்தது. என்ன ஆச்சரியப்பட்டேன் தெரியுமா? கிடைக்காது என்ற transferஐ அன்னை எவ்வளவு சுலபமாக அந்த உயர் அதிகாரியின் மனதில் புகுந்து செய்துவிட்டார். இது எவ்வளவு பெரிய விஷயம் அல்லவா?


 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

நாலு பேர் முன்னிலையில் தன் தகுதியைக் காப்பாற்றவும், தன் உள்ளுணர்ச்சிகளைப் புண்படாமலும் காக்க முனைவதைப்போல் மனிதன் விஷயத்தை அறிவால் புரிந்து கொள்ள முனைவதில்லை.

தகுதியைக் காக்கும் மனிதன் அதுபோல் அறிவை நாடுவதில்லை.


 


 


 


 



book | by Dr. Radut