Skip to Content

05.சாவித்ரி

"சாவித்ரி"

P.32. And love is a yearning of the One for the One.

        ஆண்டவன் தன்னைப் பிறரில் அன்பாகக் காண்பதே காதல்.

. ஒன்றின் இருமுகங்கள் அன்பின் திருமுகங்கள்.

. ஓராயிரம் உள்ளங்கள் ஒன்றாகத் துடிக்கின்றன.

. அனைவரின் உண்மைகளின் ஒரு சத்திய வடிவம்.

. கதிரான எண்ணங்கள் கதிரவனில் குவியும்.

. வரையறையற்ற வளர்மதியின் வண்ணங்களை அறிவோம்.

. தெய்வீக விவேகம் சொல்லிழந்த பிரம்மமாகிறது.

. அனந்தத்தின் அமைதியில் தனித்துக் கொலுவிருந்தது.

. அசைவற்ற ஞானதிருஷ்டி அரசவையின் தனிச்சிறப்பு.

. சொற்கள் தேவைப்படாத கருத்து.

. எண்ணம் எல்லையற்ற வண்ணத்தில் குடியேறியது.

. இருக்க இடமின்றி அமரத்துவம் களைத்துச் சலித்தது.

. எண்ணச் சிற்பங்களில் எழிலுடன் எழ முன்வரவில்லை.

. சன்னலில் மடங்கிய சதுரங்கப் பார்வை.

. ஆண்டவனின் அகன்ற வானத்தின் சிறு மூலை.

. அங்கிருந்தால் அவனியை விட அகன்று வாழலாம்.

. மூலை சிறிதெனினும், மூர்த்தி பெரியது.

. அது ஜட உலகின் எண்ண வண்ணமன்று.

. விழித்தெழுந்த மௌனம் விருவிருப்பாய்ப் பரவியது.

. குரலற்ற ஜோதியின் குதூகலம்.

. திருஷ்டிக்கு அகப்படாத திருவுருவம்.

. வாழ்க்கை அறியாத வீறுகொண்ட வளம்.

. அமைதியின் ஜீவியம் அனைத்தையும் உட்கொண்டது.

. சொல்லால் மனத்தை உணர்த்தும் குரல்.

. ஆத்மாவின் மௌனத்தில் அதிரும் ஞானமாகும்.

. செயலில் தன்னை அறியும் வலிமை.

உலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது, ஒன்று பலவான வகையென்ன என்றறிய நமக்குத் தகுதியில்லை என்றோர் பண்டைய ரிஷிகள். ஆனால் அவ்வுலகின் அனைத்து அம்சங்களையும் அவர் அறிவார். ஸ்ரீ அரவிந்தம் அதற்கு முழுப் பதில் தருகிறது. அதையும் கடந்த உலகம் நெகிழ்ந்து விழையும் இலட்சியமே அதன் கரு எனவும் கூறி,

இறைவனின் காதலை இயற்கையிலும் அனுபவிக்க ஏற்பட்டது உலகம்.

சிருஷ்டியின் காரணம் காதல், சிருஷ்டியின் செயல்பாடு காதல், சிருஷ்டி இயற்கையில் ஏற்படுத்துவது காதல், நாடுவதும் காதலே. லீலை காதலுக்காக ஏற்பட்டது என்ற ஆன்மீக உண்மையை தலைப்பு ஸ்ரீ அரவிந்தத்தின் சொற்களில் கூறுகிறது. இறைவன் பிறரில் தன்னைக் கண்டுகொள்ளும் உணர்வான காதலை நாடி காலத்தைச் சிருஷ்டித்தான். காலத்தின் கதியை காதலின் கையில் ஒப்படைத்தான். நடக்கும்பொழுது மனிதனடி மண்ணில்படுவதும், விதை முளைத்துச் செடியாவதும், உதய சூரியன் உதயமாவதும், ஒருவரையொருவர் வெறுப்பதும், கொலை செய்வதும், இளம்பெண்ணின் மனத்தில் மயங்கி மருகும் காதலும் ஒன்றே என்பது இப்பக்கத்தின் பல வரிகளில் காணும் தத்துவங்கள்.


 

****


 



book | by Dr. Radut