Skip to Content

03. லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்''


லைப் டிவைன்                                                                                         கர்மயோகி

 

XI. Delight of Existence : The Problem

                            Page No. 97 , Para No. 13

11. ஆனந்தம் - கேள்வி

The Human stage is one of the three.

மனித வாழ்வு மூன்றில் ஒன்று.

It may be an all important stage.

வெகு முக்கியமானது.

It is a passage from the lower to the higher.

கீழிருந்து மேலே போகும் இடைநிலை மனித நிலை.

The human stage is only a temporary one.

மனித வாழ்வு தற்காலிகமானது.

We seek a total solution for the universe.

நாம் பிரபஞ்சத்திற்கு முழுமையான தீர்வு தேடுகிறோம்.

Ethics will admit only one stage.

தர்மம் ஒரு நிலைக்குரியது.

Therefore we cannot apply ethics to our solution.

எனவே தர்மம் நமக்குத் தீர்வு தாராது.

We cannot do otherwise.

நாம் வேறெதுவும் செய்ய முடியாது.

That way we would run the peril of falsifying all the facts of the universe.

அப்படிச் செய்தால் பிரபஞ்சத்தைப் பொய்யாக்க முனைவோம்.

The evolution has a meaning behind us and beyond us.

நமக்குப் பின்னாலும், நம்மைக் கடந்தும் பரிணாமம் உள்ளது.

It will become untrue.

து பொய்க்கும்.

Ethics is a temporary phenomenon.

ர்மம் தற்காலிகமானது.

To fashion a philosophy based on ethics is a half-evolved view.

தர்மத்தின் அடிப்படையில் தத்துவம் ஏற்பட்டால் அது அரைகுறை ஆகும்.

It is a localised utility of things

இன்று நமக்குத் தேவையானது.

We cannot commit that error.

நாம் அத்தவற்றைச் செய்ய முடியாது.

The world has three layers.

உலகம் மூன்று பிரிவுகளாக உள்ளது.

They are infra-ethical, ethical and supra-ethical.

தர்மம், தர்மத்திற்குக் கீழ்ப்பட்டது, மேற்பட்டது என்பவை அவை.

To resolve the problem, we must embrace all the three layers.

மூன்று நிலைகளையும் தழுவிய முடிவு, பிரச்சினையைத் தீர்க்கும்.

It can be done by knowing what is common to all.

மூன்றிற்கும் பொதுவானதன் மூலம் அத்தீர்வைக் காண முடியும்.

Page Nos. 97&98  Para No. 14


 

We have seen that common factor.

பொதுவான தத்துவத்தை நாம் அறிவோம்.

Sachchidananda is conscious-force of existence.

சச்சிதானந்தம் சத்தின் சித் சக்தி.

It develops into forms.

அது ரூபங்களை உற்பத்தி செய்கிறது.

It seeks delight in that development.

இச்செயலில் அது ஆனந்தம் தேடுகிறது.

Sachchidananda seeks this satisfaction.

சச்சிதானந்தம் அத்திருப்தியை நாடுகிறது.

This satisfaction is common to all three layers.

மூன்று நிலைகட்கும் பொதுவானது இந்தத் திருப்தி.

Its true beginning is this satisfaction.

இத்திருப்தியே உண்மையான ஆரம்பம்.

This satisfaction is its delight.

இந்தத் திருப்தியே அதன் ஆனந்தம்.

This self-expression is normal to Sachchidananda.

தன்னை வெளிப்படுத்துவது சச்சிதானந்தத்தின் இயல்பு.

Sachchidananda clings to it.

சச்சிதானந்தம் அதைப் பற்றியுள்ளது.

It is its base.

அதுவே அடிப்படை.

But it seeks new forms of itself.

ஆனால் புது ரூபங்களை அது நாடுகிறது.

In the passage to higher form, pain enters.

புதிய உயர்ந்த ரூபங்களை நாடும்பொழுது வலி ஏற்படுகிறது.

Suffering accompanies pain.

வலியுடன் துன்பம் வருகிறது.

Pain and suffering contradict the fundamental nature of its being.

வலியும், துன்பமும் ஜீவனின் அடிப்படை சுபாவத்திற்கு எதிரானவை.

This and this alone is the root problem.

இது மட்டுமே பிரச்சினைக்குரிய மூலம்.

                                                     Contd...

தொடரும்...

 ****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்


வெளியிலிருந்தாவது, உள்ளிருந்தாவது

 

நம்மீது திணிக்கப்படுவது கட்டுப்பாடு.


 

ஸ்ரீ அரவிந்த சுடர்


 அன்னை எந்த ரூபத்தில் (தோல்வி, வியாதி, etc.,)நம்மைத் தொடுகிறாரோ, அந்த ரூபத்தில் அன்னையை மனம் கண்டு கொள்வது (sincerity) உண்மையாகும்.

எந்த ரூபத்திலும் அன்னையை அறிவது உண்மை.


 


 


 


 



book | by Dr. Radut