Skip to Content

12. திட்டினால் தித்திக்கும்

திட்டினால் தித்திக்கும்

American President என்ற சினிமாவில் பிரசிடெண்டுக்கு ஒரு பெண் மீது பிரியம் வருகிறது. அவள் ஒரு கமிட்டிக் கூட்டத்தில் பிரசிடெண்டைக் குறைவாகப் பேசுகிறாள். அறைக்குள் வந்த பிரசிடெண்ட் காதில் அது விழுகிறது. அச்சொற்கள் அவர் மனதில் பிரியத்தை ஏற்படுத்துகின்றன. மன்னிப்புக் கேட்கிறாள். மன்னிப்பு அவர் காதில் விழவில்லை. மயக்கம் அவர் மனத்தில் ஏற்படுகிறது. அவள் வீட்டிற்குப் போய் ரிச்சர்ட் என்பவருடன் போனில் பேசுகிறாள். ரிச்சர்ட் அவளுக்கு எரிச்சல் மூட்டுகிறான். "நான் யார் தெரியுமா? நான் அமெரிக்க பிரசிடெண்ட்'' என்கிறான். "என்னுடன் பேசாதே. போனை வை'' என அவள் சத்தம் போடுகிறாள். இரண்டு நிமிஷத்திற்குள் அமெரிக்காவின் பிரசிடெண்ட் அவளைப் போனில் கூப்பிடுகிறார்.பெண் அது ரிச்சர்ட் என நினைத்துக் கொண்டு தாறுமாறாகப் பேசி போனை வைத்து விடுகிறாள். அவள் போனை வைக்கும் முன் பிரசிடெண்ட் தன் நம்பரைக் கொடுத்து தன்னிடம் பேசும்படிக் கேட்டுக் கொள்கிறார். அவளுக்கு அவருடன் பேசியபொழுது தான் ரிச்சர்ட் என தவறாக நினைத்துத் திட்டியது பிரசிடெண்ட் எனத் தெரிகிறது.அன்று மாலை dinnerக்கு அவர் அவளை அழைக்கிறார். நடந்ததை அவள் ஒரு வயதான பெண்மணியிடம் கூறி, "இன்று இரண்டு முறை பிரசிடெண்டைத் திட்டிவிட்டேன். அவரைப் பார்க்க பயமாக இருக்கிறது'' என்கிறாள். பெண்கள் திட்டுவது ஆண்களுக்குத் தித்திக்கும். என்னை விளக்கம் கேட்காதே என்கிறாள் அப்பெண்.

- முரண்பாடு உடன்பாடு என்பது ஸ்ரீ அரவிந்தம்.

-எல்லா முரண்பாட்டின் பின்னால் உள்ளது உடன்பாடு.

- நம் மனம் தாழ்ந்திருப்பதால் நாம் தேடும் உடன்பாடு, முரண்பாடாக வருகிறது.

-சிருஷ்டியில் ஆணுக்குப் பெரிய முரண்பாடு பெண். அதனால் அவளே அவனுக்குப் பரிணாமத்தைப் பூர்த்தி செய்யும் பெரிய உடன்பாடாகும்.

-ஈஸ்வரன் சக்திக்குச் சரணடைந்து தன்னைப் பூர்த்தி செய்து கொள்கிறான் என்பது விளக்கம்.

-மனம் தாழ்வாக இருப்பதால் பெரிய உடன்பாடு பெரிய முரண்பாடாக - திட்டுவதாக - அமைகிறது.

- மனம் உயர்வாக இருந்தால் திட்டுவதற்குப் பதிலாக ஜீவன் திருவுருமாறும்.

என்னை விளக்கம் கேட்காதே என்று படத்தில் அந்த வயதான பெண்மணி கூறியதற்கு

ஸ்ரீ அரவிந்தம் அளிக்கும் ஆன்மீக விளக்கம் இது.

அன்பு எழுந்தபின் திட்டினால் அன்பு பெருகும்.

அன்பில்லாமல் திட்டினால் திட்டு பெருகும்.

அடிக்கும் கணவனை அன்பால் நாடுவது இந்த சட்டப்படியேயாகும்.

அன்பு அடித்தால் அன்பு பெருகும்.

அன்பில்லாமல் அடித்தால் அடி பெருகும்.

திட்டும் பெண்ணும், அடிக்கும் ஆணும் உடன்பாட்டைத் தாழ்வாக நாடும் உருவங்கள்.

****



book | by Dr. Radut