Skip to Content

11. லஞ்சம்

லஞ்சம்

அலெக்ஸாண்டர் கவர்னராக இருந்தபொழுது அவரிடம் ஒருவர் தாம் ரிடையராகி 1½ வருஷமாகிறது, இன்னும் பென்ஷன் வரவில்லை எனக் கூறியபொழுது அலெக்ஸாண்டர் தமக்கு ஓய்வு பெற்ற பின் 3 ஆண்டாகியும் பென்ஷன் வரவில்லை என்றார்.இதுபோன்ற நிலை லஞ்சம் வளரும் சூழல். பெரிய உத்தியோகத்திருந்தவர்களும் அனுபவமில்லாதவர்போல் நடப்பதுண்டு. தினமும் சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்யும் வக்கீல் சாட்சியாகும் நேரம் வந்தால், ஒன்றுக்கு மற்றதாக உளறுவது வழக்கம். சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர், "சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நீதிபதிகட்கு அறிவு அதிகம் என்ற அபிப்பிராயம் தவறு. சப்-ஜட்ஜாக வந்தபொழுது இருந்த புத்திசாலித்தனம் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தால் வளருமா? அனுபவம் வளரும். அறிவு வளராது'' என்றார்.

பெரிய பிரைவேட் கம்பனியில் பெரிய வேலை செய்தவருக்கு ஓய்வு பெற்றபின் பெரும்தொகை வரவேண்டும். உத்தியோகம் பெரியதானாலும், உலக விவகாரங்களில் அனுபவமில்லாதவர். இவ்விடங்களில் பெரிய பெருச்சாளிகள் உலவும். இவருக்கு உதவி செய்வதாகக் கூறி ரூ. 50,000/- ஒருவர் பெற்றுக் கொண்டார். இது லஞ்சம். இப்படிப்பட்டவர்க்குப் பணம் கொடுத்தால் திரும்பி வருமா? பென்ஷன் எப்படி வரும்? இந்நிகழ்ச்சியைக் கேட்டவர் அனைவரும் திடுக்கிட்டனர், நம்பவில்லை. பிரச்சினை அன்னையிடம் வந்தது. பிரார்த்தனை மனதில் எழுந்தது.

- லஞ்சமாகக் கொடுத்த பணம், யானை வாயில் போன கரும்பு போன்றது. எனினும் திரும்பி வந்தது.

- பென்ஷன் பணமும் பின்னால் உடனடியாக வந்து சேர்ந்தது.

****



book | by Dr. Radut