Skip to Content

10. இலட்சியத் திருமணம்

"அன்னை இலக்கியம்''

இலட்சியத் திருமணம்

                                                                        (சென்ற இதழின் தொடர்ச்சி....)              இல. சுந்தரி

பாட்டி தன் மகனுக்குக் கடிதம் எழுதி வரவழைத்திருந்தாள். உமாவின் திருமணத்திற்குப்பின் பிள்ளைகளைச் சமாளிக்க முடியாது. நல்லதோ கெட்டதோ பிள்ளை வந்து அவர்களை அழைத்துப் போகட்டுமென்று. அவன் வந்து இரண்டு மூன்று நாட்களாய் பிள்ளைகள் தன்னைவிட்டு விலகி உமாவை ஒட்டிக்கொள்வதால் ஒன்றும் புரியாமல் தவித்தான். கடைசி நேரத்தில் வற்புறுத்தி அழைத்துப்போகக் காத்திருந்தான்.

மாப்பிள்ளையின் பேச்சைக் கேட்டு குழந்தையின் தந்தை (பாட்டியின் பிள்ளை) முன்வந்தான். "மாப்பிள்ளை! இந்தக் குழந்தைகளின் உரிமையாளன் நான்தான். என் அறிவீனத்தால் என் குழந்தைகளை நான் இழந்துவிட்டேன். உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் நீடு வாழவேண்டும்'' என்று கூறி, குழந்தைகளைப் பிடித்திழுத்தான். அர்விந்த் கீழே விழுந்து அழுதான்.

மாப்பிள்ளை, உடனே குழந்தையை எடுத்து மடியில் இருத்திக்கொண்டு "உங்களுக்குத் தடையில்லையென்றால் இவர்கள் எங்களுடனேயே இருக்கட்டும். உலகில் எதுவும் அதிசயமில்லை. இறைவன் அருள் இருந்தால் எதுவும் நடக்கும். என் பெற்றோர் என்ன சொல்வாரோ என்றஞ்ச வேண்டாம். அவர்கள் மிகவும் நல்லவர்கள்'' என்று கூறிவிட்டான்.

பிரச்சனைக்குக் காரணமான குழந்தைகள் மகிழ்வுடன் அவர்களுடன் இருந்தனர். சம்பந்தி அம்மாவோ குழந்தைகளிடம் அன்பாக இருந்தாள்.

இவர்களுடன் உமா மாமியார் வீடு சென்றாள். குழந்தைகளுடன் குடும்பம் ஆரம்பமாயிற்று.

தன் மகனுக்குக் குழந்தைப்பேறு வேண்டும் என சம்பந்தியம்மாள் அவர்களின் தனிமையில் குறுக்கிடாமல் பிள்ளைகளைத் தன்னுடன் வெளியூரெல்லாம் அழைத்துச் சென்றாள்.

நாட்கள் மாதங்களாயின. உமா கருவுறவில்லை. மாமியார் உமாவிடம் லேடி டாக்டரிடம் போவோமா என்றாள் பரிவாக. "ஆகட்டும் அத்தை'' என்று உடன் புறப்பட்டாள். சோதித்த டாக்டர் பெண் ஆரோக்யமாயிருப்பதாயும், குழந்தை பெறும் வாய்ப்பு 100க்கு 100உண்டு என்றார்.

பெண்ணிடம் குறையில்லை என்றால் பிள்ளையிடம் குறையா? ஐயோ! அவன் இதைத் தாங்குவானா? குழந்தைகள் என்றால் அவனுக்குப் பிடிக்குமே என்று தவித்தாள் மாமியார். எப்படியாவது தன் மகன் கவலை தெரியாமல் இந்தக் குழந்தைகளுடன் சந்தோஷமாய் இருப்பதைப் பார்த்துச் சமாதானம் ஆனாள்.

ஊரார் பேசாதிருப்பரா. குறை மகனிடம் என்றதும் சும்மாயிருக்கிறாள். மருமகளிடம் என்றால் சும்மாயிருப்பாளா? அதுதான் கல்யாணத்தின்போதே குழந்தைகளுடன் அழைத்துவந்தாள் என்றனர்.

உமா மனம் புண்பட்டாள். அன்று தன் கணவனிடம் தனிமையில் இதுபற்றிப் பேசினாள். "ஊரார் உங்களிடம் குறையிருப்பதாகப் பேசும்போது என்னால் தாங்கமுடியவில்லை'' என்றாள்.

"ஊரார் எதைப் பேசவில்லை. அவர்களுக்கு எதையாவது பேசவேண்டும். எல்லாம் சில நாட்களே. இளையான் அடக்கம் அடக்கம் என்பார்கள். வமையுடையவன் பொறுப்பதுதான் உண்மையான பொறுமை. என் இலட்சியத்திற்குத் துணை வரும் நீ என்னைப் புரிந்துகொண்டால் போதும்'' என்றான் பரிவாக.

இவன் ஆண்மை பேராண்மையல்லவா என்று பெருமிதம் கொண்டாள் உமா. புதுயுகம் பூத்துவிட்டது.


 

முற்றும்

****
 

சொசைட்டியின் வெளியீடுகள்


 

கர்மயோகியின் நூல்கள்:


 

1. பிரார்த்தனையும் சமர்ப்பணமும்

ரூ. 20

2. மனம் - ஜீவனின் முக்கிய கரணம்

ரூ. 20

3. சமூகம் அதிர்ஷ்ட சாகரம்

ரூ. 20

4. சிறியதும் பெரியதும்

ரூ. 20

5. கணவன் மனைவி

ரூ. 20

6. இரத்தினச் சுருக்கம்

ரூ. 20

7. பரமனை நாடும் ஜீவாத்மா

ரூ. 20

8. ஸ்வரூபம் சுபாவம்

ரூ. 20

9. ஸ்ரீ அரவிந்தம் - தத்துவம்

ரூ. 50

10.அபரிமிதமான செல்வம்

ரூ. 50

11.. ஸ்ரீ அரவிந்தரின் காவிய இதழ்கள்

ரூ. 60

12.வாழ்வின் அடிச்சுவடுகள்

ரூ. 60

13.அன்னையின் வாழ்வில்

ரூ. 80

14.யோக வாழ்க்கை விளக்கம் - I

ரூ. 80

15. ஸ்ரீ அன்னை பராசக்தியின் அவதாரம்

ரூ.100

16.அதிர்ஷ்டம்

ரூ.100

17.பேரொளியாகும் உள்ளொளி

ரூ.100

18.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

ரூ.100

19..நூறு பேர்கள் (2 பாகங்கள் சேர்ந்தது)

ரூ.150

தபாலில் பெற புத்தக விலையுடன் பதிவுத் தபால் கட்டணம் ரூ.20/-

சேர்த்து M.O.செய்யவும்.


 

 

 



book | by Dr. Radut