Skip to Content

09. புதுயுகமான புது வருஷம்

வருஷம் பிறக்கும்பொழுது நூற்றாண்டும் பிறப்பது விசேஷம். அத்துடன் ஆயிரம் ஆண்டு millennium பிறப்பது வரலாற்றில் முக்கியம். அது ஜனவரி 2000, 1ம் தேதியா, 2001, ஜனவரி முதல் தேதியா என்ற விவாதம் உலவுகிறது.

ஆன்மீகத் தத்துவப்படி எந்த நாளும், எந்த நேரமும், இறைவனுக்குரியது என்பதால் அனைத்தும் சிறப்பான நேரம், இருந்தும் இறைவன் வரும் தருணம் இது என்று பகவான் கூறியதை ஆயிரம் ஆண்டுகளில் நடந்தேறுவது கணத்தில் நடக்கும் நேரம் எனவும் விவரித்தார். மந்தமான மனத்தின் மூலம் மகத்தான காவியம் எழுந்தது ஸ்ரீ அரவிந்த அன்பர்களுடைய அனுபவம்.

நம்மைப் போன்ற எளியவர் அறிவுக்கு, கண்ணுக்குப் புலப்படுவது ஏதேனும் உண்டா?

  • இறக்கும் தருவாயில் காரணமின்றி உயிர் பிழைப்பது சத்தியஜீவிய சக்தி என்கிறார் அன்னை.
  • வேலையில்லாத் திண்டாட்டம் என்று குரல் எழுப்பிய உலகம், வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை எனப் பதறுகிறது.
  • பணம் பெருகுகிறது, தானே பெருகுகிறது, போகும் இடம் தெரியாமல் தவிக்கின்றது.
  • ஒரு நாள் ஜீவிக்க முடியாத கம்பனிகள் ஒரு பத்தாண்டு உயிரோடிருக்கின்றன.
  • உலகமே அழியப் போகிறது என்ற கூக்குரல் தானே மடிகிறது.
  • பெண்ணுக்கு உரிமை வந்துவிட்டது. ஓட்டுரிமை, சொத்துரிமை, வேலை செய்யும் உரிமை, கணவனுக்குப் பின் பென்ஷன் பெறும் உரிமை, விவாகரத்து உரிமை என உரிமைகள் வந்துவிட்டன.
  • வருஷத்தில் 10 கோடி நஷ்டப்படும் கம்பனிக்கு 4000 கோடி வருமானம் காத்திருப்பது தெரியவில்லை.
  • ஒரு ஏக்கர் வாங்கிய விலைக்கு ஒரு சென்ட் வாங்க முடியாத அளவு விலை ஏறியுள்ளது.
  • விலைவாசி ஏறிக் கொண்டேயிருக்கும்பொழுது, மனிதனுக்கு வசதியும் பெருகுகிறது.
  • குடியிருந்த இடம் எல்லாம் கடையாக மாறிவிட்டது.
  • பயிரிட்ட நிலமெல்லாம் குடியிருப்பாய் விட்டது.
  • ஹைஸ்கூலில்லாத ஊருக்கு காலேஜ் வந்திருக்கிறது.
  • லட்சாதிபதி என்ற சொல் மாறி கோடீஸ்வரன் என்று வழங்குகிறது.
  • தெருவில் இட்லி சுட்டவள் மகன் கலெக்டராக இருக்கிறான்.
  • 10 லட்சம் இந்தியர் அமெரிக்கா போய் மாதம் இலட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள்.
  • 85 பைசா விற்ற பெட்ரோல் ரூ. 30 ஆன பின் கார் சைக்கிள் போல பெருத்துவிட்டது என்றால்,

புது வருஷம் நமக்கு புதுயுகமல்லவா?

அன்னை இவற்றைக் கண்ணுற்றார். பலவற்றைக் கூறியுள்ளார்.

  • புவிஈர்ப்பு போன்ற சட்டங்களும் புதிய சக்திக்குப் பொருட்டன்று.
  • பிறவியில் உள்ள புத்திசாலித்தனம் இனி வளரும்.
  • பெரியது, சிறியது என்பதை இனி உலகம் கருதாது.
  • தாழ்ந்தது உயர்ந்ததாகத் திருவுருமாறும்.
  • வறுமையைப் பிடித்துக் கொண்டுள்ளவர்க்கு மட்டும் இனி வறுமையுண்டு.
  • அகந்தையின் ஆயுள் முடிந்துவிட்டது.
  • பேரருள் வருவதைப் பேச்சில்லாமல் ஏற்கும் எதிர்காலம் நிகழ்காலமாகும்.
  • கர்மத்திற்கும் இனி வேலையில்லை, மனிதத் திறமைக்கும் தேவையில்லை.
  • எதுவும் அவசியம் என்பது இனி இல்லை.

சூட்சுமப் பார்வையுள்ளவர்க்கு உலகில் புதுமை பொங்கி வருவது தெரியும்.

நாமென்ன செய்யலாம்? நாம் என்ன செய்யமுடியும்? எப்படி இப்பொழுது இருக்கிறோம்?

  • சமூகம் நம் வாழ்வை நடத்தத் தயாராக இருக்கிறது.
  • சமுத்திரம் நம் வாழ்வைச் சமுத்திரமாக மாற்ற விரும்புகிறது.
  • அதைக் கடந்த நிலையில் அனைத்துப் பொறுப்பையும் ஏற்க அன்னை காத்திருக்கிறார்.
  • நாம் குடும்பப் பொறுப்பை ஏற்கலாம்.
  • மனதால் நாட்டின் பொறுப்பை ஏற்க  விழையலாம்.
  • முழுமூச்சுடன் முழுமையை நாடலாம்.
  • முடிந்தவரை செய்து முடிக்கலாம்.
  • பழையது பவுன் old is gold என்பதை மாற்றி பழையது போக வேண்டியது எனலாம்.
  • நம் நாட்டின் பெருமையை உலகம் நாடும்பொழுது, உலகம் ஆமோதிக்கக் காத்திருக்காமல், நாமே அதை அறிந்து போற்றலாம்.
  • வேத பாராயணத்தைக் கைவிட்டு வேதம் என்ன கூறுகிறது என்பதைப் பின்பற்றலாம்.
  • சாங்கியத்தைத் தவிர்த்து சாஸ்திரத்தின் உட்பொருளை அறியலாம்.
  • பிரம்மத்தை ஜடத்தில் கண்ட மேல் நாட்டார் நம்மைப்போல் 100 மடங்கு வளமாக இருக்கும்பொழுது பிரம்மத்தை ஆன்மாவில் கண்ட நமக்கு சொர்க்கம் காத்திருப்பதை அறியலாம்.
  • சுத்தம் ஜடத்தின் சத்தியம் எனப் பின்பற்றலாம்.
  • நேரம் செல்வம் என அறிந்து நேரத்தில் காரியத்தை நடத்தலாம்.
  • ஒழுங்குக்கு உயிருண்டு என்பதால் ஒழுங்கைக் கடைப்பிடிக்கலாம்.
  • எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் சத்தியத்தை மட்டும் கடைப்பிடித்து அன்னைக்குரிய செல்வத்தை 10 மடங்கு பெருக்கலாம்.
  • கர்மம், கட்டுப்பட்டி, சாங்கியம், சாஸ்திரம், சம்பிரதாயம் உயிரிழந்தன என்று உணர்ந்து புது வருஷத்தில் புது வாழ்வை ஏற்கலாம்.
  • நாளொரு பவுண்டும், பொழுதொரு கிலோவாக வளரும் இளைஞன் படிப்பது தவிர மற்றனவெல்லாம் கல்லூரியில் செய்வதைப்போல் நாம் இருக்கிறோம்.
  • எல்லாத் தவறுகளையும் எல்லோரும் செய்யும்பொழுது நாடு மேலும் முன்னேறும் விந்தையை அறியலாம். அதன் மூலம் எது எனக் காணலாம். அம்மூலத்தை நம் வாழ்வில் செயல்பட அனுமதிக்கலாம்.
  • 1970இல் எல்லா பாங்குகளிலும் ரூ. 4000 கோடியிருந்தது. இன்று நிலுவையான கடன் ரூ. 45,000 கோடி என்பது நாடு சீரழிகிறது என்பதைக் காட்டுவதுடன், நாட்டில் செல்வம் பெருகுவதையும் காட்டுகிறது என்பது நம் வாழ்விலும் உண்மை எனக் கண் திறந்து பார்க்கலாம், பார்த்து அதன்படி நடக்கலாம்.
  • தன்னை Darcy விரும்புவதை அறியாத எலிசபெத் அவனைத் திட்டி அனுப்புவதைப் போல் நாம் நடக்கக் கூடாதல்லவா? பத்தாயிரம் பவுன் வருமானமுள்ளவன் ஐம்பது பவுன் வருமானமுள்ள பெண்ணைத் திட்டிய பின்னும் நாடுவதுபோல் வாழ்வும், சரித்திரமும், அன்னையும் நம்மை நாடி வருவதை அறியலாம்.

50 வருஷத்திற்கு முன் பிழைப்பது கஷ்டம். படிப்பு என்பது இல்லை. படிப்பு கிடைப்பது அதிர்ஷ்டம். வேலை கிடைப்பது அதைவிடப் பெரிய அதிர்ஷ்டம். 100 ரூபாய் நோட்டை ஊரில் பார்த்தவர்கள் குறைவு. 25,000 ரூபாய்க்கு D/D வந்ததை ஜில்லா தலைநகரில் உள்ள பாங்கில் மாற்றப்போனால், பாங்கில் 25,000 இல்லை. வேறு பாங்கில் கடன் வாங்கித் தந்தனர். எந்த பாங்கிலும் அந்த அளவு பணமில்லை என்பதால் 4 பாங்கில் கடன் வாங்க வேண்டியதாய்ப் போயிற்று. ஒருவர் சென்னைக்குப் போயிருக்கிறார் என்றால், அது ஊர் முழுவதும் பரவும் செய்தி. 1975இல் பாண்டிச்சேரியிலிருந்து அமெரிக்காவுக்குப் போனில் பேச 3 மணி முதல் 2 நாள்வரை காத்திருக்க வேண்டும். பேசியதைப் பாண்டியிலுள்ள அமெரிக்கர்களே ஆச்சர்யமாகக் கேட்டுக் கொண்டனர். அன்று தினமும் ரூ. 80/- வியாபாரமான ஹோட்டல் இன்று ரூ. 5000/- வியாபாரமாகிறது. உலகம் மாறிவிட்டது. எப்படி?

  • 1967 முதல் உலகச் சர்க்கார்கள் எல்லாம் சத்திய ஜீவிய சக்தியில் செயல்படுவதாக பகவான் கூறுகிறார்.
  • இன்று உலகச் சமுதாயமே அச்சக்தியின் ஆட்சியில் உள்ளது.
  • மனிதனுக்கு முக்கியத்துவம் வந்துவிட்டது. மனிதன் அதை இன்னும் சரியாக அறியவில்லை.
  • Twentieth century was the century of common man.

          Twenty first century will be the century of the Individual.

          20ஆம் நூற்றாண்டு ஏழையின் நூற்றாண்டு. இருபத்தோராம்  நூற்றாண்டு விடுதலை பெற்ற மனிதனின் நூற்றாண்டு எனக் கூறலாம்.

  • இன்ஜினீயர் பட்டம் பெற்றவனுக்கு அமெரிக்காவில் வேலை காத்திருப்பது தெரியவில்லை. Software கம்பெனி ஆரம்பித்த இந்தியர் டெல்லியில் 4000கோடி சம்பாதித்த பின்னர் சாதாரண பட்டதாரிக்கு விவரம் தெரியவில்லை.
  • கடைசி காலத்திலும் விவேகாநந்தருக்கு குரு மீது நம்பிக்கையில்லை. அவரே சமாதியானபின் ஸ்ரீ அரவிந்தருக்கு சத்திய ஜீவியத்தைக் காண்பித்தவர். இரண்டு நிலைகளும் உள்ளன. நாம் எதை நாடப் போகிறோம்?
  • அறியாமை ஆண்டவனிடம் அறிவைவிட நெருக்கமாக உள்ளது என்கிறார் அன்னை. இன்றும் கையால் compose செய்து அச்சடிக்கும் letter press நாட்டில் ஏராளமாக உள்ளன.

          பெரிய டெக்னாலஜி வந்துவிட்டது.

          Letter pressஐ விடமுடியவில்லை.

  • இது புது வருஷம் மட்டுமன்று. புது யுகம்.
  • நாம் எதை நாடுகிறோம் என்பது நம் வாழ்வை நிர்ணயிக்கும்.
  • எதையும் யாருக்கும் புரிய வைக்கலாம் என்ற ஆசை வேண்டாம் என்கிறார் அன்னை.
  • நாம் நடப்பதை அறிய முடியுமா? அறிந்ததை ஏற்க முடியுமா?

ஏற்றதைச் செயல்படுத்த முடியமா?

Comments

09. புதுயுகமான புது

09. புதுயுகமான புது வருஷம்
 
Para 15     -    Line 1     -      ஹைஸ்கூல்லாத      -      ஹைஸ்கூலில்லாத

motnir



book | by Dr. Radut