Skip to Content

08. லைப் டிவைன் கருத்து

P. 11. நாத்திகம் ஆத்திகத்திற்குச் செய்த சேவை பெரியது  

பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகை மதம் ஆண்டது. ஓரளவுக்கு அரசர்களும் குருமார்கட்குக் கட்டுப்பட்டிருந்தனர். இதனால் மதத் தலைவர்கள் உலகெங்கும் அநியாயமாக நடக்க முயன்றனர். வேதம் அனைவரும் பயிலக் கூடாது, பைபிளை மக்கள் படிக்கக் கூடாது, ஆண்டவனை மனிதன் பாதிரி மூலமே அடையவேண்டும், என ஆரம்பித்து உற்பத்தி செய்த கொடுமைகளும் மூட நம்பிக்கைகளும் ஏராளம்.

  • இன்றும் கம்ப்யூட்டர் சாத்தானுடைய கருவி என்று கூறுபவருண்டு.
  • சந்திரனில் மனிதன் போயிறங்கியதை நம்ப மறுக்கும் B.A. படித்தவர் ஒருவர்.
  • சோப்புப் போட்டுக் குளிப்பது அனாசாரம், துணியை சோப்புப் போட்டுத் துவைப்பது ஆசாரமில்லை என்று அழுக்கோடு வாழும் மனநிலை நடைமுறையில் உண்டு.
  • சுத்தம் hygieneக்காக ஏற்பட்ட சட்டங்களை ஆன்மிகச் சட்டங்களாக்கி மூட நம்பிக்கை வாழ்கிறது. 
  • சமூகம் சுமுகமாக வாழ ஏற்பட்ட நியதிகளில் ஆண்டவனைக் கொண்டு வந்தது குருமார்கள் மற்றவர்களை அதிகாரம் செய்ய உதவியாயிற்று. அது மூட நம்பிக்கைக்கு அஸ்திவாரமாயிற்று.
  • முதலாளி, குடும்பத்தலைவன், அரசன், படித்தவன், பணக்காரன் மற்றவர்களைத் தன் ஆட்சிக்கு உட்படுத்த ஆண்டவனைப் பயன்படுத்தியது ஏராளம்.
  • பெற்றோர் தங்கள் அறியாமையைப் பிள்ளைகள் வாழ்வில் வலியுறுத்த ஆன்மீகம் கருவியாக இருந்து கொடுமைக்கு உதவி செய்தது.
  • எந்த விதமான இயந்திரம் கண்டுபிடித்தாலும் சர்ச் அதை அடக்கியது. Steam  Engine நீராவி என்ஜின் 2ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சால் மறைக்கப்பட்டது.
  • இன்றும் எந்தப் புதிய கருத்தையும் மனிதன் தானே நேரே ஏற்பதில்லை, முக்கியமானவர்கள் ஏற்றால் மனிதன் ஏற்பான். இது பகுத்தறிவில்லை, மூட நம்பிக்கை.
  • 18ஆம்நூற்றாண்டு, 19ஆம் நூற்றாண்டுகளில் சுமார் 100 ஆண்டு காலம் ஐரோப்பாவில் குளிப்பது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று நம்பினர். டாக்டர்கள் குளிப்பது சரியில்லை என்று கூறினர். பிறகு நிலைமை மாறியது.
    • இதுபோன்ற மூடநம்பிக்கைகள் இன்று ஏராளமாக உள்ளன.
    • நாம் அதை அழிக்க முன்வரவேண்டும்.
    • அதுபோன்ற சேவையை நாத்திகம் உலகுக்குச் செய்ததை நாம் அறிவோம்.
    • நாத்திகம் அக்காலத்தில் புரட்சிகரமான வேலையைச் செய்தது. எல்லாத் துறைகளிலும், எல்லா நேரங்களிலும் மூட நம்பிக்கைகள் வளர்கின்றன. அதை அழிப்பது சேவை.
  • மூட நம்பிக்கை எந்த அளவிலிருந்தாலும் அன்னையை நெருங்க முடியாது.

********

Comments

08. லைப் டிவைன் கருத்து Para 

08. லைப் டிவைன் கருத்து
 
Para  10     -   Line   1       -   Engne         -   Engine
 
motnir



book | by Dr. Radut