Skip to Content

07. சாவித்ரி

P. 23. On sustenance from occult spiritual founts

சூட்சும ஆன்மீக ஊற்றின் ஆதரவு

நாம் சாப்பிடுகிறோம், தெம்பாக வேலை செய்கிறோம். தெம்பு சாப்பாட்டிலிருந்து வருவதாக நினைக்கிறோம். சாப்பாடு உடலுறுப்புகளைச் சுறுசுறுப்பாக்குகின்றது. சுறுசுறுப்பான உடல் உறுப்புகள் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொண்டு பிரபஞ்ச சக்தியை உள்ளே கொண்டு வருகின்றன. உடலை நடத்துவது சூட்சுமம் நிறைந்த பிரபஞ்ச சக்தி. இது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. காரை ஸ்டார்ட் செய்ய பாட்டரியைப் பயன்படுத்துகிறோம். ஸ்டார்ட் ஆனபின் பெட்ரோலால் ஓடுகிறது. பாட்டரிக்கு ஸ்டார்ட் செய்வது மட்டுமே கடமை. சாப்பாட்டிற்கு உடலைச் சுறுசுறுப்பு ஆக்குவது மட்டுமே கடமை.

நாம் காண்பது சாப்பாடு, பாட்டரி.

நம் கண்ணில் படாதது பிரபஞ்ச சக்தி, பெட்ரோல்.

உலகில் இயங்குவனவெல்லாம் ஆன்மாவால். ஆன்மா என்ற ஊற்று கண்ணுக்குத் தெரியாமல் சூட்சுமமாகச் செயல்படுகிறது. நாம் பள்ளியில் படிக்கிறோம். புத்தகம் செலவு செய்து வாங்குகிறோம். பிள்ளைகள் படிக்க ஏராளமான செலவாகிறது என்கிறோம். சர்க்கார் ஆசிரியருக்குச் சம்பளம் கொடுக்கிறது. கட்டடம் கட்டுகிறது. நிர்வாகம் செய்கிறது. நம் செலவு சிறியது. அதுவே கண்ணுக்குத் தெரிகிறது.

குடும்பம் நடத்தப் பாடுபடுகிறோம். இடையறாது உழைக்கிறோம். ஏராளமான செலவு செய்கிறோம். சந்தோஷமாக வாழ்கிறோம். இந்த சந்தோஷ வாழ்வைப் பெற நாம் எடுத்த முயற்சி பெரியது. அது மட்டுமே நாம் அறிவது.

  • அதன்பின் சர்க்கார் செய்யும் ஆயிரம் செலவுகளை நாம் அறியோம்.
  • அதைவிடப் பெரிய ஆதரவைச் சமூகம் தருகிறது என்றால் நமக்குப் புரியாது. ஆனால் அது பெரியது.
  • வாழ்வு சமூகத்தைவிடப் பெரியது. க்ஷணம் தவறாமல் வாழ்வு நம்மை வாழ வைக்கிறது.
  • வாழ்வுக்குப் பின்னால் ஆன்மா உண்டு.  
  • ஆன்மாவின் சக்தி ஊற்றாக எழும்.
  • அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.
  • ஆன்மா சூட்சுமமாகச் செயல்படுவதால் தெரிவதில்லை.
  • ஆன்மா சூட்சுமம் நிறைந்தது, சக்தி நிரம்பியது, நாம் அறிவது கைம்மண் அளவு.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்

 

ஆர்வம் அதிகமானால் விலக்கப்பட்ட வேண்டியது அதிகமாகும். ஆர்வம் விலக்கப்பட வேண்டியதை விட அதிகமாக இருக்கும்வரை, தடையின்றிச் செயல்படும்.

சுபாவத்தை மீறிய ஆர்வம் தடையின்றிச் சாதிக்கும்.

 

Comments

07. சாவித்ரி ஸ்ரீ அரவிந்த

07. சாவித்ரி
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
Line 2    -    விடஅதிகமாக        -     விட அதிகமாக
 
 
motnir



book | by Dr. Radut