Skip to Content

05. சிறு குறிப்புகள்

"தாசில்தார்"

சுமார் 12 ஆண்டுகட்கு முன் தாசில்தார் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். மீண்டும் வேலை இருந்தால் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும். இவருடன் ஓய்வு பெற்றவர் பெட்ரோல் பங்க்கில் 800/-ரூபாய் சம்பளத்தில் வேலையாக இருக்கின்றார். ஓய்வுபெறும்பொழுது தாசில்தார் பெற்ற சம்பளம் ரூ 2000/-.

இவர் என்னுடைய நண்பர். 1950 முதல் நான் இவரை அறிவேன். நல்லவர், இனியவர், நேர்மையானவர். அன்னையின் சேவையில் ஆசிரியர் தொழிலிலிருந்து விலகி விவசாயம் செய்தபொழுது அனுபவம் சேவையாக இல்லை. மனிதனை நம்ப முடியாது என்பதே அனுபவம். ஒரு திட்டம் வியாபாரியின் ஏமாற்றுவித்தையால் தோற்றது. அடுத்த பெரிய திட்டம் கூட்டாளியின் துரோகத்தால் தோற்றது. எந்தப் பக்கம் திரும்பினாலும் இருட்டு. வாழ்க்கை நரகமாக இல்லை. வாழ்வேயில்லை என ஆயிற்று. அதனால் எல்லாம் அன்னை மீதுள்ள நம்பிக்கை போய்விட்டால், அதற்கு நம்பிக்கை என அர்த்தமில்லை என நானிருந்த நாட்கள். தினமும் பலர் என்னை சந்திப்பார்கள். நெருங்கிய நண்பர்கள் அவருள் பலர். ஒருவர் கூட எதையும் கண்டு கொள்வதில்லை. தாசில்தார் அடிக்கடி வருவார். வந்தவுடன், இது என்ன? எல்லோரும் துரோகம் செய்தால் நீங்கள் என்ன ஆவது? குடும்பம் என்ன ஆவது? எனப் பதைத்துக் கேட்பார். அப்படி என் வாழ்வில் அக்கரை கொண்டவர் தாசில்தார் மட்டுமே. இவருக்கு வேலை வேண்டும் என்பது என் ஆழ்ந்த விருப்பம்.

Glass Factory முதலாளி ஒரு நாள் போன் செய்து தாசில்தார் விலாசம் கேட்டார். தாசில்தாரை பாக்டரியில் வேலைக்கமர்த்தப் போவதாகக் கூறினார். என்ன சம்பளம் தருவீர்கள் எனக் கேட்டேன். அவர் வாங்கிய 2000ரூபாய் தருகிறேன் என்றார். இன்று தாசில்தார் எனக்கெழுதிய கடிதம் :

"எனது 30 ஆண்டு சர்க்கார் ஊழியத்தில் பெற்ற வருமானம் போல் ஓய்வு பெற்றபின் 12 ஆண்டில் நான் சம்பளமாகவும், P.F. முதலியனவாகவும் பெற்றது இரு மடங்கு. இது அன்னையின் அருள்."

"இன்று வந்த 35,000 செக்கைப் பற்றிய செய்தியொன்று. சென்ற மாதம் செக்கைப் பெற்று பாங்கில் கொடுத்தேன். பணம் வரவில்லை. பிறகு செக் தொலைந்ததாகச் சொன்னார்கள். Duplicate செக் பெற புது procedure உண்டு. அன்னையை அனுப்புதல் நினைவுக்கு வந்து, தொலைந்து போன செக்கிற்கு அன்னையை அனுப்பினேன். மறுநாள் சென்னையிலிருந்து என் மகன் செக் கிடைத்துவிட்டதாகப் போனில் சொன்னான்".

ரிடையர் ஆனபின் வருமானம் பக்தர்கட்கு உயரும் என்பது தாசில்தார் விஷயத்தில் உண்மையாயிற்று.

அன்னையை அனுப்புதல் அவருக்குப் பலித்து ஆச்சரியம் கொடுத்தது.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்

தெரிந்த விஷயம் முக்கியமான காரியத்தில் தெளிவாகும்பொழுது அதை மனம் அதிகமாக ஏற்றுக்கொள்கிறது. முதலில் அறிந்தது அறிவு; இப்பொழுது அறிவது உணர்வு.

Comments

05. சிறு குறிப்புகள் Para  

05. சிறு குறிப்புகள்
 
Para   3    -    Line  1    -   எனது                          -   "எனது
Para   4    -    Line   1   -   இன்று                         -   "இன்று
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
Line   1  -  காரியத்தில்தெளிவாகும்பொழுது   -    காரியத்தில் தெளிவாகும்பொழுது
Line   2  -  அதிகமாகஏற்றுக் கொள்கிறது         -   அதிகமாக ஏற்றுக் கொள்கிறது
 
motnir



book | by Dr. Radut