Skip to Content

11. Consultancy

"உத்தரவை ஏற்றுக் கொள்வது"

காலம் மாறுகிறது. அத்துடன் நேற்றைய முதலாளி இன்றைய தொழிலாளியாகும் நிலைகளும் உருவாகின்றன. அன்று கம்பெனி முதலாளி உத்தரவு வேதவாக்கு. தலைமேல் ஏற்றுச் செயல்பட்ட காலம் உண்டு. இன்று முதலாளி தன் கீழே வேலை செய்பவர்களை சேர்த்து என்ன செய்யலாம், உங்கள் இஷ்டப்படி செய்வோம் என்ற நிலை பரவலாக எழுந்து நிலை பெற்றுள்ளது. காலம் மாறலாம், பழக்கம் மாறலாம், மாறாதவையும் உண்டு. அவற்றுள் ஒன்று

அதிகாரி கூறுவது வேதவாக்கானால், காரியம் அற்புதமாக முடியும்.

இது அன்னையின் கோட்பாடுகளில் ஒன்று. அன்னைக்கு அதிகாரி மட்டுமல்லர், எவரையும் மேலேயுள்ளவர், கீழேயுள்ளவர் - 'அதிகார பீடத்தில்' - இருப்பதாகக் கொண்டு வேலை செய்வது சரி. மனம் பணிந்தால், எவர்க்குப் பணிந்தாலும், பக்குவப்படும். அது பவித்திரம். அதிகாரியைவிட வேலை முக்கியம், வேலைக்குப் பணிவது சிறப்பு.

Negativism சொல்வதற்கு எதிராகச் செய்வது குழந்தைகளிடம் காணலாம். பெரியவர்கள் பல பேரிடம் காணலாம். அவனாகச் செய்தாலும் செய்வான், நான் சொன்னேன் என்று தெரிந்தால் நிச்சயம் செய்யமாட்டான் என தமிழ்நாட்டு பாங்க் ஒன்றை நிறுவும் முதல் அதிகாரியாக இருந்தவர் தம் மகனைப் பற்றிக் கூறினார்.

முதலாளி - சிப்பந்தி, கணவன் - மனைவி உறவில் இந்த பழக்கம் வந்துவிட்டால் அது வேலைக்குத் தடை. எந்தச் சிப்பந்தி, எந்த வேலையில் எப்படி செயல்படுவார் என அறிவதே முக்கியம்.

கம்பெனியில் 17 சேல்ஸ்மென். எவரும் $ 40,000க்கு குறையாமல் - வருஷத்தில் - சம்பாதிக்கிறார்கள். அதிகபட்சம் $150,000 சம்பாதிக்கிறார்கள். இவர்கள் வேலைக்கு budget உண்டு, target உண்டு. இலக்கு இருந்தால் சுறுசுறுப்பாக வேலை நடக்கும். அப்படிக் குறிப்பிடாவிட்டால், வேலை மந்தமாகும்.

ஒரு மாதம் பெரும்பாலும் எல்லா சேல்ஸ்மேன்களும் இலக்கை எட்டிவிட்டனர். கடைசி 2 நாட்கள் உள்ளன. வியாபாரத்தில் இந்த 2 நாளில் பாதி சேல்ஸ் செய்வதும் உண்டு. $கூட வியாபாரமாகாததும் உண்டு. ஒரு சேல்ஸ்மெனுக்கு இலக்கு $ 5000 குறைகிறது. அவர் முதலாளியிடம் போய் தம் நிலையைச் சொல்லி  ஏதாவது சொல்லுங்கள், நான் மறுக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டு செய்கிறேன் என்றார்.

அவர் கேட்ட பாணியே அக்கடைக்குப் புதியது. முதலாளிக்கு அப்பொழுதே மனதில் சரி எனப்பட்டது. இவன் செய்வான் என நினைத்து 1 மணி நேரம் சுவாரஸ்யமாக அம்மாதம் முழுவதும் படித்துப் படித்துச் சொல்லியதை மீண்டும் ஒரு முறை கூறினார், பிரியமாக சேல்ஸ்மேன் கேட்டுக்கொண்டார். செய்வதாகப் பலமாகத் தலையை ஆட்டினார்.

கடை உள்ளே போனதும் வாடிக்கைக்காரர் ஒருவர் இவருக்காகக் காத்திருந்து சரியாக $ 5000க்கு வாங்கினார்.

சொல்வதை அப்படியே கேட்டுக் கொண்டால் தேவைப்பட்டதைப் போல் சரியாக அதே தொகை வரும் என்ற தம் அனுபவத்தை அன்னை கூறுகிறார். ஒரு நாள் அவருக்குத் தேவைப்பட்ட அதே தொகை செக்காக வந்தது என ஒரு முறை அன்னை கூறினார்.

******** 

Comments

11. Consultancy Para  8 & 

11. Consultancy
 
Para  8 &  Para 9     -  இரண்டு Paragraph-களையும்   இணைக்கவும்

motnir



book | by Dr. Radut