Skip to Content

09.அஜெண்டா

"Agenda"

Needless to say that those who aspire to Truth must abstain from telling lies.

சத்தியத்தை நாடுபவர் பொய் சொல்லக்கூடாது என்பது தெளிவு.

. இலட்சியம் பெரியதானால் உலகம் அறியும், போற்றிப் புகழும்; பின்பற்றாது.

. ஏசு கொண்டுவந்த அன்பானாலும் புத்தர் அளித்த ஞானமானாலும் சங்கரருடைய மாயை எனினும் கிருஷ்ண பரமாத்மாவின் யுகதர்மமானாலும் பொதுமக்களுக்கு அன்றாட வாழ்வில் பின்பற்ற அவர்கட்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்.

. இலட்சியத்தைக் கூற கதை அவசியம்.

சத்தியத்தின் உயர்வை அரிச்சந்திரன் கதை கூறும்.

காலில் குறையின்றி அழுக்குப் போகும்படிக் கழுவாவிட்டால் அந்தப் பொக்கை வழியாக சனியன் உள்ளே வருவான் என்பதை அனைவரும் அறிவர். அதையே இலட்சியமாகக் கூறியிருந்தால் நளமகராஜன் கதை நாட்டில் பரவியதுபோல் கருத்து பரவியிருக்காது.

. பொய் சொன்னபின் அங்கு சத்தியமிருக்காது என்ற இலட்சியத்தை எப்படி எடுத்துக்கூறலாம்?

உதாரணம்மூலம் கூறும்பொழுது புரிந்துகொள்வது அறிவு - மனம்.

ஊரில் முக்கியஸ்தர் செய்வதைப் பின்பற்றுவது உணர்ச்சி - vital பிராணன்.

எழுத, படிக்க, தலைவார, பல்விளக்க குழந்தைக்குக் கற்றுக்கொடுப்பது உடல் பெறும் பயிற்சி. சொல்லான கதைமூலமோ, மற்றவர் செய்வதைப் பார்த்துப் பின்பற்றுவதோ குழந்தைக்குப் பயன்படாது. பயிற்சி தேவை.பயிற்சி உடலுக்குத் தேவை.

. உலகம் சத்தியத்தை மேற்கொண்டால் சத்தியஜீவியம் வருவது சீக்கிரமாக முடியும்.

. இந்திய எழுத்தாளர் இங்கிலாந்து கோர்ட்டில் பொய் சொன்னதால் 4ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். சட்டப்படி கோர்ட்டில் சொல்லும் பொய்க்கு அமெரிக்காவில் 20 ஆண்டுவரை சிறைவாசம் தரலாம்.மேல்நாட்டார் பொய் சொல்வதில்லை. நாம் 98 பங்கு பொய் சொன்னால் அவர்கள் 2 பங்கு சொல்வதால் தண்டனை பொய் சொல்வதைத் தடுக்கும். நம் நாட்டில் தண்டிக்க முடியாது.தண்டனை கொடுத்தால் ஜெயிலில் இடமிருக்காது. வக்கீலும் ஜட்ஜும் உள்ளேயிருப்பர். சுப்ரீம் கோர்ட் பிரதம நீதிபதி தம் வயதைக் கூறுவதில் பொய் சொல்லி விட்டார் எனில் நிலைமை விளங்கும்.தண்டனை அளித்துத் தவற்றைத் தடுக்கவும் மக்கள் பெருமளவு சத்தியத்தைத் தாங்களே மேற்கொண்டிருக்க வேண்டும்.

தானே விரும்பி நாடாததை தமக்கு அளிக்கும் திறன் ஆண்டவன் உட்பட எவருக்கும் இல்லை.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

புதுமை உணர்வு, உற்சாகம், ஆச்சரியம், மின்னலான ஜோதி ஆகியவை அடிக்கடி சூட்சுமத்தில் ஏற்படும்; எளிதாகவும் நிகழும்.ஜடவாழ்வில் அரிது.

புதுமையும், புத்துணர்வும், மின்னல் ஜோதியும் சூட்சுமத்திற்குரியன; ஜடத்திற்கன்று.


 


 


 

 


 


 


 



book | by Dr. Radut