Skip to Content

05. சாவித்ரி

சாவித்ரி

P.70 He in a petty coastal traffic plies

கடலோரம் கண்ட சிறுதொழில்

. துறைமுகந்தோறும் காணும் வருமானம்.

. மாற்றமற்ற தொழிலின் நிலையான வருமானம் தரும் நிம்மதி.

. புதியதைப் புறக்கணித்து பழக்கமற்றதை விலக்கும் மனநிலை.

. பெருங்கடலின் பேர்ஆரவாரம் கேட்கிறது.

. விரிந்து பரவும் உலகம் தொலைவிலிருந்து அழைக்கிறது.

. அகண்ட திருஷ்டியின் வளையும் வட்டத்துள் செய்யும் பயணம்.

. முகந்தெரியாத மக்களும் இனம் தெரியாத இடங்களும்.

. வணிகக் கலத்தின் இலட்சிய வண்ணம்.

. காலமெனும் குபேரனின் உலகத்து வாணிகம்.

. நிலங்கொண்ட நீர்ப்பரப்பின் நுரை நிறைந்த கடல்.

. கண்டறியாத நாடுகளின் தொலைவிலுள்ள துறைமுகங்கள்.

. வாழ்வின் வளம் நிறைந்த சுபிட்சத்தின் வாயிலாகும் வணிகத்துறை.

. செதுக்கப்பட்ட சிற்பங்கள், வடிவொழுகும் வண்ணச்சீலைகள், பொன் சுமக்கும் பொதிகள்.

. மணி பதித்த பொம்மைகள் மணியான குழந்தைகள்.

. கடின உழைப்பின் கலங்கிய பரிசுகள்.

. மின்னலென மறையும் சுவர்க்கச் சுவைகள் வந்தது அழிகிறது.

. கற்றூண் வாயிலைக் கடந்து வருகின்றன.

. இனம் தெரியாத கடலோரம் நெருங்கிவரும் கப்பலோட்டம்.

. தூரம் துலங்கும் கனவூடே பயணம்.

. பெயரறியாத சமுத்திரத்தைக் கடக்க மறுக்கும் மனம்.

. புலியடமிருந்து புகடம் தேடும் புதுமை.

. எண்ணமெனும் காந்தம் எடுத்துரைக்கும் பாதை.

. விண்மீன் விளங்காத ஜோதியின் பொவுள் மூழ்கினான்.

. அறியாமையின் சந்தைகளைக் கடந்து வந்தான்.

. புதிய துறைகளைப் புலப்பிக்கும் மரக்கலம்.

. கற்பனையைக் கடந்த கண்டங்களைக் கண்டான்.

. புண்ணிய ஆத்மாக்களின் தீவுகளைத் தேடுபவன்.

. முடிவான கடலோரம் கடந்து, முடிவற்ற கடலையடைந்தும், தவச்சின்னமான பிரம்ம சிருஷ்டியை நோக்கிச் செல்கிறான்.

. காலம் வகுத்த கதியை வாழ்வு மாற்றும்.

. அதன் பிம்பங்கள் அனந்தத்தின் திரைகள்.

. புவியின் எல்லை புலப்படாமல் நகருகிறது.

. வாயுமண்டலம் வண்ணத்திரையாக மறைப்பதில்லை.

. அழியும் எண்ணமும் நம்பிக்கையும் அவனைக் கடந்தன.

. பூமியின் எல்லையில் புதுமையைக் காண்கிறான்.


 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

பொறுமைக்கு ஓர் அடையாளம் பிறர் அவசரம் நம்மை பாதிக்கக்கூடாது.

எவர் அவசரமும் பாதிக்காதது பொறுமை.

ஸ்ரீ அரவிந்த சுடர்

தன்னலமற்றவரின் இரகஸ்யம் மௌனத்தை அளிக்கும். பிறருக்கு அதிகமாகக் கொடுக்க உதவும். தன்னலமற்ற திறமையை அதிகரிக்க உதவும்.


 


 



book | by Dr. Radut