Skip to Content

04.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                            (சென்ற இதழின் தொடர்ச்சி....)         கர்மயோகி

XV. The Supreme Truth-Consciousness

15. உயர்ந்த சத்தியஜீவியம்

This is the first operative principle of the divine Supermind.

தெய்வீக சத்தியஜீவியத்தின் முதல் சட்டம் இது. இச்சட்டத்தின்படி அது செயல்படுகிறது.

It is a cosmic version.

அது பிரபஞ்ச திருஷ்டி.

It is all-comprehensive, all-pervading and all-inhabiting.

அனைத்தையும் தழுவும், அனைத்தையும் ஊடுருவும், அனைத்துள்ளும் வதியும் பார்வை அது.

It comprehends all things in being.

அதன் அறிவு ஜீவியத்தினுடையது.

It does so in static self-awareness.

சலனமற்ற சுயஞானத்தை அது அறியும்.

It is subjective, timeless, spaceless.

அதன் ஞானம் அகத்திற்குரியது, காலத்தையும்  இடத்தையும் கடந்தது.

Therefore it comprehends all things in dynamic knowledge.

எனவே அதனால் அனைத்தும் செயல்படும் ஞானத்தையும் அறிய முடிகிறது.

Therefore it governs their objective self-embodiment in Space and Time.

ஆகையால் காலம், இடத்துள் அவற்றின் புறச் சுயவிளக்கத்தை அறிய முடிகிறது.

Page No.137, Para No.10


 

Here, the knower, the knowledge and the known are one.

இங்கு அறிபவன், அறிவு, அறியப்படுவது மூன்றும் ஒன்றாக உள்ளது.

They are not different entities.

அவை வெவ்வேறு விஷயங்களில்லை.

Fundamentally they are one.

அடிப்படையில் அவை ஒன்றே.

Our mentality needs a distinction

மனம் அறிய விஷயம் பிரிந்திருக்க வேண்டும்.

Without it, cannot proceed.

பிரியாதவை மனத்திற்குப் புரியாது.

Distinction is the means of action.

செயல் எழ வேறுபாடு அவசியம்.

It is the fundamental law of action.

செயலுக்குரிய அடிப்படைச் சட்டம் அது.

Losing it, it becomes motionless and inactive.

வேறுபாடில்லைஎனில் செயலற்று, சலனமற்றுப்போகும்.

I regard myself

நான் என்னை அறிவேன்.

Still I have to make this distinction.

இருப்பினும் நான் இந்த வேறுபாட்டை அறிய வேண்டும்.

I am, as the knower.

நான் இருக்கிறேன்; நான் அறிபவன்.

I observe in myself something.

என்னுள் நான் ஒரு விஷயத்தைக் காண்கிறேன்.

I regard that as object of my knowledge.

அதை என் அறிவுக்குரிய பொருளாகக் கருதுகிறேன்.

It is myself, yet not myself.

அது நான், என்றாலும் அது நானில்லை.

Knowledge links the Knower and the known.

அறிவு, அறிபவனையும் அறியப்படுபவனையும் இணைக்கும்.

But this is artificial.

இது செயற்கையான செயல்.

It is purely practical.

இது முழுவதும் நடைமுறைக்குரியது.

It has the characterof utilitarian.

பலன் கருதி செயல்படும் சுபாவம் இங்குத் தெரிகிறது.

It is evident.

அது தெளிவு.

It does not represent the fundamental truth of things.

இது அடிப்படையான உண்மையைப் பிரதிபலிக்கவில்லை.

The reality is different.

உண்மை வேறு.

All the three are one.

இம்மூன்றும் ஒன்றே.

I the knower am the consciousness which knows.

அறிபவனான நான் அறியும் ஜீவியமாவேன்.

The knowledge is that consciousness.

அறிவு அந்த ஜீவியம்.

It is myself operating.

இது நான் செயல்படுவது.

The known also is myself.

அறியப்படுவதும் நானே.

It is a form or movement of the same consciousness.

அது ரூபம் அல்லது ஜீவியத்தின் சலனம்.

The three are clearly one existence.

இம்மூன்றும் ஒன்றே என்பது தெரிகிறது.

They are one movement.

ஒரே சலனத்தின் மூன்று பகுதிகள் அவை.

It is indivisible, though seeming divided.

பிரிந்து தெரிந்தாலும், அவற்றைப் பகுக்க முடியாது.

It is not distributed between its forms.

அதன் ரூபங்கள் அதைப் பகிர்ந்து வினியோகம் செய்யவில்லை.

It does appear to stand separate in each.

தன்னை அது வினியோகம்செய்வதாகத் தோன்றுகிறது.

It appears to stand seperate in each.

தனித்தனியே பிரிந்து நிற்பதாகத் தோன்றுகிறது.

This is a knowledge mind can arrive at.

இந்த ஞானம் மனம் அறியக்கூடியது.

It can feel.

என்னால் உணரமுடியும்.

It cannot make this knowledge the basis of its operations.

இந்த ஞானத்தின் அடிப்படையில் என்னால் செயல்பட முடியாது.

There are objects external to me.

மேலும் புறத்தில் பொருள்கள் உள்ளன.

I call that myself.

நான் அவற்றை "நான்" என்கிறேன்.

I am a form consciousness.

நான் ஜீவியத்தின் ரூபம்.

Here the difficulty is insuperable.

இங்குச் சிரமம் அதிகம்.

Even to feel the unity there is abnormal.

புறப்பொருள்களுடன் ஐக்கியமாக உணர்வது வழக்கத்திற்கு மாறானது.

To act on it continually is new action.

அந்த அடிப்படையில் செயல்படுவது நமக்குப் புதியது.

It is foreign to Mind.

அது மனத்திற்குப் புறம்பானது.

It does not properly belong to the Mind.

அத்திறன் மனத்தைச் சேர்ந்ததில்லை.

Mind can concede that truth.

இவ்வுண்மையை மனம் ஏற்கும்.

That would correct its normal activities.

அது அதன் இயல்பான செயல்களைத் திருத்தும்.

Our activities are based on division.

நம் செயல்கள் பிரிவினையின் அடிப்படையில் அமைந்தன.

We know the earth goes round the sun.

பூமி சூரியனைச் சுற்றுவதை நாமறிவோம்.

We see the sun going round the earth.

சூரியன் பூமியைச் சுற்றி வருவதை நாம் காண்கிறோம்.

Our knowledge does not prevent us from seeing.

நம் அறிவு நாம் பார்ப்பதைத் தடுப்பதில்லை.

The senses persist in seeing the sun in motion round the earth.

புலன்கள் சூரியன் பூமியைச் சுற்றி வருவதையே காண்கின்றன.

Contd...

தொடரும்....

****

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

தனித்தன்மையைச் சிருஷ்டிப்பது இயற்கைக்கு முன்னேற்றம். தனித்தன்மை பொதுத்தன்மையாவது தனித்தன்மைக்கு முன்னேற்றம். அதற்குத் தனித்தன்மை, தன்னை இழந்து மற்றதுடன் கலக்க வேண்டும். இயற்கை முரண்பாடுகளால் முன்னேறும் முறை இது.

தனித்தன்மை தன்னையிழந்து பொதுத்தன்மையாகிறது.

ஸ்ரீ அரவிந்த சுடர்

நீ மறந்துபொழுதும் உன்னையே நம்பியிருப்பது மனித உறவில் நிலையான தொடர்பு. அப்படிப்பட்ட மனிதனை முழுவதும் நம்பியிருப்பதுபோல் அவனிடம் நடந்துகொண்டால் அது தெய்வீகத் தொடர்பாகும். மனிதச் சுபாவத்தின் இருள் நிறைந்த சாகஸங்களை அறிய அது உதவும்.

சுபாவம் சாகஸமானது.


 


 


 


 


 


 


 


 



book | by Dr. Radut