Skip to Content

13.வேதம் - ஆராய்ச்சி

வேதம் - ஆராய்ச்சி

இங்கிலாந்து பிரதமருக்கு ஆண்டுக்கு 5,000 சம்பளமிருக்கும் பொழுது, இந்தியாவில் வைஸ்ராயிக்கு ஆண்டுக்கு 24,000 சம்பளம் (ராஜாஜி கவர்னர் ஜெனரலாக வந்தபொழுது அதை மாதம் ரூ.15,000மாக மாற்றினார். சுமார் பாதியாக்கினார்). பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இந்தியாவே மகுடமாக இருந்த நாட்கள் அவை. அது மணிமகுடம்.

எலிபின்ஸ்டன் என்பவருக்கு வைஸ்ராய் பதவியை அளிக்க விரும்பினர். அவர் அதை ஏற்கவில்லை. வேதத்தில் தாம் ஆராய்ச்சி செய்யப் போவதாகவும் வைஸ்ராய் பதவி அதற்குத் தடையாகும் எனக் கூறினார். மேல்நாடுகளில் இன்றும் எந்த துறையிலும் ஆராய்ச்சியை மேற்கொள்வது சன்னியாசத்தை ஏற்பதற்கு ஒப்பாகும். வரலாறு, பிற மொழிகள், விஞ்ஞானம், அணு, கணிதம்என ஆயிரம் துறைகளில் ஆராய்ச்சி நடக்கின்றது. அவற்றை ஏற்பது எளிதன்று. காட்டில் போய் கண் மூடி நிஷ்டையிலிருந்து உடலில் செல்புற்று கட்டினாலும் உணராமல் தவம் செய்து இறைவனைக் காண்பதற்குரிய விரதம் ஆராய்ச்சி செய்பவர்கட்கு அவசியம்.

- சாஸ்திரம் சரஸ்வதி.

- அதைப் பயில சரஸ்வதியைத் தொழவேண்டும்.

- அவ்வளவு நெறியாகப் பயின்று பெரிய நாகரீகத்தை மேல்நாட்டார் கட்டியுள்ளனர்.

- அவர்கள் தேடிக் கண்டுபிடித்தது அறிவு; ஞானமில்லை. அறிவு வாழ்வுக்கு வசதியளிக்கும். மனத்திற்கு விவேகம் தாராது. ஆத்மாவுக்கு விழிப்பேற்படுத்தாது. அது வேதம் பயின்றால் பெறக் கூடியது.

****

 



book | by Dr. Radut