Skip to Content

01. லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

கர்மயோகி

Page No. 76

Para No.10

X.The Pure Existent

10. சத் புருஷன்

 

We may accept the pure reason.

பகுத்தறிவை நாம் ஏற்கலாம்.

We may accept our concepts.

அதன் கருத்துகளை ஏற்கலாம்.

We may subject ourselves to it.

நாம் அதற்கு உட்படலாம்.

We may remain under its spell.

அதன் மந்திரச் சக்திக்கு நாம் கட்டுப்படலாம்.

Then it is valid.

அதை ஏற்றால், அது செல்லும்.

It is not valid, if we do not accept pure reason.

பகுத்தறிவை நாம் ஏற்காவிட்டால் அது செல்லாது.

Reason has no obligatory force.

நம்மைக் கட்டுப்படுத்தும் சக்தி பகுத்தறிவுக்கில்லை.

Neither do its concepts have it.

அதன் கருத்துகளும் நம்மைக் கட்டுப்படுத்தா.

We must judge of existence.

சத் புருஷனை நாம் அறியவேண்டும்.

We must not rely on mental conception.

மனம் கூறும் கருத்தை நாம் நம்ப முடியாது.

We can rely on what we see to exist.

நாம் காண்பதை நம்பலாம்.

The purest insight sees it as movement.

ஊடுருவும் பார்வைக்கு அது சலனம்.

The freest insight too finds it as movement.

புதிய பார்வைக்கு அது சலனமாகும்.

Two things stand out.

இரு விஷயங்கள் தெளிவு.

One is movement in Space.

ஒன்று இடத்தின் சலனம்.

The other is movement in Time.

அடுத்தது காலத்தின் அசைவு.

One is objective.

ஒன்று புறம்.

The latter is subjective.

அடுத்தது அகம்.

Existence is real.

சத் புருஷன் என்பது உண்மை.

Duration is real.

காலம் என்பதும் உள்ளது.

Space and Time are real.

காலமும், இடமும் உள்ளன.

We can go behind extension in Space.

இடத்தைக் கடந்து பின்னால் பார்க்க முடியும்.

It is a psychological phenomenon.

அது மனம் அறியும் நிகழ்ச்சி.

It is an attempt of the mind.

அது மனம் எடுக்கும் முயற்சி.

That makes existence manageable.

அதனால் சத் புருஷனை அறிய முடிகிறது.

It distributes the indivisible whole.

பிரிக்கமுடியாத முழுமையை அது பகிர்ந்தளிக்கிறது.

That is conceptual Space.

நாம் இடம் எனக் கூறுவது அதுவேயாகும்.

We cannot go behind the movement of succession.

காலத்தைக் கடந்து அதன் பின்னால் பார்க்க முடியாது.

Succession is change in Time.

சங்கிலித் தொடர் காலம் மாறுவதாகும்.

Time is the very stuff of consciousness.

காலம் ஜீவியத்தின் கரு.

We are a movement.

நம் வாழ்வு சலனத்தாலானது.

The world too is a movement.

உலகம் அது போன்றது.

It continually progresses.

உலகம் தொடர்ந்த முன்னேற்றம் பெறுகிறது.

It increases by all of the past.

கடந்தகால நிகழ்ச்சிகளால் அது பெருகி நிற்கிறது.

It is represented in the present.

அதுவே நிகழ்காலமாகிறது.

We see it as a beginning of the future.

நாம் அதை எதிர்காலத்தின் ஆரம்பமாகக் கொள்கிறோம்.

That present eludes us.

நிகழ்காலம் நமக்குப் பிடிபடுவதில்லை.

It perishes before it is born.

அது ஜனிக்குமுன் அழிகிறது.

What is, is the eternal.

உள்ளது, என்றும் உள்ளது -பிரம்மம்.

It is indivisible succession of Time.

அது காலம், காலத்தின் கதி. அதைப் பகுதியாகப் பிரிக்க முடியாது.

It carries on a stream of movement.

அது சலனத்தின் ஆற்றொழுக்கு.

It is progressive.

முன்னோக்கிச் செல்லும் நதி போன்றது.

Its consciousness also is indivisible.

அதன் ஜீவியமும் முழுமையானது.

Duration is the sole absolute.

காலம் தூய்மையான தனித்த நிலை.

It is eternally successive movement.

தொடர்ந்து ஊரும் காலம் வளர்ந்துவரும் ஜீவ நதி.

It is change of Time, change in Time.

காலத்தின் கதியில் மாற்றம், காலத்தின் மாற்றம்.

Becoming is the only being.

பிரகிருதியே புருஷன்.

 

Page No.77

Para  No.11

There is an actual insight into being.

பார்வை புருஷனை ஊடுருவும்.

There are conceptual fictions of it.

கருத்தின் கற்பனையும் புருஷனைத் தொடும்.

There is an opposition between them.

அவை முரணானவை.

The concept is of pure Reason.

கருத்து பகுத்தறிவுக்குரியது.

The opposition is fallacious.

முரண்பாடு கற்பனையானது.

That is the reality of it.

இதுவே உண்மை.

There is fundamental insight.

அடிப்படையை ஞானம் ஊடுருவும்.

There also is conceptual reasoning.

கற்பனையும் கருத்தைப் புனையும்.

One is of intuition.

ஒன்று ஞானம்.

The other is of intelligence.

அடுத்தது அறிவு.

If they are opposed to each other, we cannot support the latter.

அவை முரண்பட்டால் நாம் அறிவை ஏற்கமுடியாது.

We appeal to the intuitive experience.

ஞானம் உதயமாகும். அதை நம்பலாம்.

It is incomplete.

அது அரைகுறையானது.

It is valid upto a point.

ஓரளவுக்கு அது உண்மை.

There is the integral experience.

முழுமையான பூரணம் அனுபவம் தரும்.

It stops short of it.

அதை எட்டுமுன் நிறுத்திவிடுகிறோம்.

If so, it errs.

அப்படிச் செய்தால், அது தவறு.

Intuition fixes itself on becoming.

ஞானம் பிரகிருதியின் சலனத்தை நாடுகிறது.

Then we see movement and change.

அதனால் சலனமும், மாற்றமும் தெரிகின்றன.

It is a continual progression.

அது தொடர்ந்த முன்னேற்றம்.

It is eternal succession in Time.

அது தொடர்ந்து ஊரும் காலம் வளர்ந்து வருவதாகும்.

We are the river.

நாமே ஓடும் நதி.

We are the flame.

நாம் எரியும் தழல்.

They are the Buddhist illustrations.

பௌத்தம் தரும் உதாரணங்கள் இவை.

But there is a supreme experience.

ஓர் உச்சகட்ட ஆன்மீக அனுபவம் உண்டு.

There is a supreme intuition.

ஓர் உச்சகட்ட ஞானமுண்டு.

Through them, we can go behind the surface.

திரையை அவற்றால் விலக்கிப் பின்னால் காணலாம்.

There is this becoming.

அதுவே சிருஷ்டி.

It is a change, a succession.

அது மாற்றம், தொடர் சங்கிலியான செயல்கள்.

It is only a mode of our being.

இவை நம் ஜீவனுக்குள்ள ஓர் அம்சமாகும்.

And there is in us That.

பிரம்மம் நம்மில் உள்ளது.

It is not involved in our becoming.

பிரம்மம் சிருஷ்டியால் பாதிக்கப்படாது.

We can have the intuition of That.

ஞானத்தால் பிரம்மத்தைக் காணலாம்.

That is eternal and stable in us.

அது நிலையானது, காலத்தைக் கடந்தது.

We can have a glimpse of it.

அதன் சாயல் தெரியும்.

It is an experience behind the veil.

திரையின் பின்னுள்ள அனுபவம் அது.

The becomings in form are fleeting.

ரூபத்தில் சிருஷ்டி தோன்றி மறையும்.

They are continual.

அது தொடர்ந்த செயல்.

We can also draw back into the stable.

நாம் அங்கு போய் அடையலாம்.

We can do so entirely.

முழுவதும் அதை அடைய முடியும்.

And live there too.

அங்கேயே இருக்கலாம்.

It brings an entire change in our external life.

நம் புறவாழ்வை அது புதியதாக்கும்.

 

It changes our attitude.

நம் போக்கை மாற்றும்.

Our action upon the movement of the world also is changed.

உலகின் போக்கில் நம் செயல் மாறும்.

We can live in this stability.

இந்நிரந்தரத்தில் நாம் வாழலாம்.

Pure Reason has already given us this stability.

பகுத்தறிவு இந்நிரந்தரத்தை நமக்களித்துள்ளது.

Without reasoning too, we can touch it.

பகுத்தறியாமலும் நாம் இதையடையலாம்.

We can reach it without knowing it.

அதைத் தெரியாமல் அதை அடையலாம்.

No previous knowledge is necessary.

முன்பே அறிய வேண்டுமென்ற அவசியமில்லை.

It is pure existence, eternal, infinite.

அது சத், புருஷன், அனந்தம்.

It is indefinable.

சொல்லைக் கடந்தது.

It is not affected by the succession of Time.

காலத்தின் கதி, அதை பாதிக்காது.

It is not involved in the extensions of Space.

இடத்தில் அது உறைவதில்லை..

It is beyond form, quality or quantity.

ரூபம், குணம், அளவைக் கடந்தது.

It is only Self, absolute.

contd..

அது புருஷன், தனித்த தூய்மை.

தொடரும்

 

 

 

Comments

01. லைப் டிவைன்Line 24 -  It

01. லைப் டிவைன்

Line 24 -  It is a psychological phenomeno - It is a psychological phenomenon.

 

motnir



book | by Dr. Radut