Skip to Content

பகவானுடைய இதர நூல்கள்

Archievs Apr-Dec '79 - Page 90

"Lord, I do not know you have need of these utensils"

"இறைவா, உனக்கு இப்பாத்திரங்கள் தேவை என்பதை  நானறியேன்''  

ஸ்ரீ  அரவிந்தர் ஓர் யோகியின் வாழ்வில்  நடந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு  திருடன்,  வந்தவன் போனபின், அந்த யோகி அங்குள்ள பாத்திரங்களை எடுத்துக்கொண்டு  அவன் பின்னால் ஓடியதைக் கூறி மேற்சொன்னவாறு  யோகி  சொல்லியதாக  எழுதுகிறார். அதிக விவரம் இல்லாததால், நாமே யூகிக்க வேண்டியிருக்கிறது.   வந்த திருடன் ஏதோ  காரணத்தால் போய்விட்டான். யோகி, வந்தவனைத் திருடனாகப் புரிந்துகொண்டு சும்மாயிருந்துவிட்டார். திருடன் போய், கொஞ்சநேரம்  ஆனபின் வந்தது இறைவன் என யோகி அறிகிறார். பாத்திரங்களை வேண்டி  வந்திருக்கிறான் இறைவன். நாம் அதை அறியாமல் இறைவனை  வெறுங்கையோடு திருப்பி அனுப்பிவிட்டோம் என உணர்கிறார். உணர்ந்தபின் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அவன் பின்னே ஓடி மேற்சொன்னவாறு பேசுகிறார் என்று தெரிகிறது.

இதை விமர்சனம் செய்து  பகவான்,  "நாமும்  இதையே செய்ய வேண்டும் என்று பொருளில்லை. நோக்கம் இதுபோலிருப்பது நல்லது'' என்று  கூறுகிறார்.  தத்துவப்படி எல்லா  மனிதர்களும்  இறைவனே, எல்லாப் பொருள்களும்   இறைவனே என்றாலும், முக்கியமான நேரத்தில் இறைவன் வெளிப்படுகிறான்.  நாம் பராமுகமாக இருந்து நேரத்தைத் தவறவிடுகிறோம் என்பதே கருத்து.

ஒரு பாங்கில் கடன்வாங்கி தொழில் நஷ்டமானபின் வருத்தமாக உட்கார்ந்துள்ளபொழுது அடுத்த பாங்க் ஏஜெண்ட் வந்து, "என்னுடன் உங்கள்   கிராமத்தை சுற்றிப்பார்க்க வரவேண்டும்'' என்று கேட்ட பொழுது ஆத்திரமும்,    வருத்தமும் வந்ததை ஒதுக்கிவிட்டு "கூப்பிடும்பொழுது போகாமலிருக்கக்கூடாது'' என்று போன பக்தரிடம்  ஏஜெண்ட், "நான் உங்களுக்கு அடுத்த பாங்க் கடனைத் திருப்பித்தர உதவ வேண்டும் என வந்தேன்'' என்றார். நமக்குத்  தொந்தரவாகப் படுவது இறைவனுடைய அருட்செயல் என  நாம் அறியமுடிவதில்லை. இந்த  மனப்பக்குவம் எல்லாச் செயல்களையும்  இறைவன்  செயலாக அறிய  உதவும்.

ஏஜெண்ட்  உதவி செய்ய முன் வருகிறார். அதுவே இல்லை என்றாலும், நடப்பது இறைவன் செயல்தான் என அறிவது ஆன்மீகப் பக்குவம்.

 

********



book | by Dr. Radut