Skip to Content

Savitri

Calling the adventure of consciousness & Joy

துணிச்சலான ஜீவியத்தின் சந்தோஷத்தை அழைப்பது

சத்பிரேம் என்ற பிரெஞ்சுச் சாதகர் அன்னையை நெருங்கி வந்த பொழுது அவரை   அன்னை  பூரணயோகத்தைப்பற்றி ஒரு புத்தகம்  எழுதச்சொன்னார். அவர்  எழுதினார்.  அந்நூல்  உலகில் பிரபலமாயிற்று.  அந்நூல் வெளியான பின்   ஆசிரமம்  வந்த மேல் நாட்டார் எவரையும் "எப்படி அன்னையைத் தெரிந்து கொண்டீர்கள்?'' எனக்  கேட்டாலும்  இப்புத்தகத்தின்  மூலம்  அறிந்தேன்  எனப்  பதில் வரும்.  அவர் எழுதிய புத்தகத்தின் பெயர்,

Adventure of Consciousness or Sri Aurobindo

Adventure என்பதற்கு நேரடியான தமிழ்ச்சொல் தெரியவில்லை. இருப்பது  அத்தனையையும்  விட்டு  இல்லாததை தேடுவது  என்பது ஒரு பொருள். வீரச்   செயல் என்பது மற்றொன்று. முழு risk எடுத்துக்கொள்வது அடுத்த அம்சம்,  இத்தனையும்  சேர்ந்தது adventure என்பதாகும்.

மலை ஏறுபவன், உலகம் சுற்றப் புறப்படுபவன், எதிரிகளை அவர்களிடத்தில் போய்ச் சந்திக்க முன் வருபவன், கரணம் தப்பினால் மரணம்  என நிலையை விரும்பி நாடுபவனை adventurer என்கிறோம். இவர்களில்  நூற்றில் ஒருவர் தப்பிப்  பிழைப்பார். ஆயிரத்திலொருவர் வெற்றியடைவார். வாழ்க்கையில் பெரிய adventure  எது என ராஜாஜி விவரிக்கும் பொழுது, "சிறுவயதில் திருமணமாகி மாமியார் வீட்டிற்குப் போகும் பெண் சந்திப்பது பெரிய adventure'' என்றார்.

ஐயங்காரான ராஜாஜி செட்டியார் காந்திஜி மகனுக்கு அந்த நாளில் பெண் கொடுத்தது ஒரு  adventure ஆகும். 1919இல் பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியப் பத்திரிகைகள் மீது கைக்கூலிகளை ஏவியபொழுது  இந்துப் பத்திரிகை, "நாங்கள் தேசபக்தியினின்றும், பத்திரிகை தர்மத்தினின்றும் வழுவமாட்டோம்'' என்று  எழுதியது அதுபோன்ற  செயல்.

ஹிட்லர்  ஐரோப்பாவை  முழுவதையும்  வென்றபின்  இங்கிலாந்து தனியாக  நின்று  எதிர்த்துப்  போராடியதும்  அதுபோன்ற  செயலாகும். மதுரை மன்னனை நீதி கேட்டு கண்ணகி தன் நிலையை விளக்கியது, நவகாளிக்கு காந்திஜி போலீஸ்   உதவியை மறுத்துப்போனது, ராஜஸ்தானில்  வினோபாஜி  கொள்ளைக்  கூட்டத்தினரைச்  சந்தித்து போலீஸுக்குச் சரணடையச் சொல்லியது, இந்து முஸ்லீம் கலவரத்தில் நேரு  தைரியமாக  நடந்தது,  பெருந்தீவிபத்தில்  தீயினுள்  நுழைந்து உயிரைக் காப்பாற்ற முயல்வது, கோர்ட்டில்  தனக்கெதிரான செய்தியைச் சொல்ல  -  உண்மை  என்பதால்  -  முன்வருவது,  கப்பல் மூழ்கும் பொழுது  400   பேர் விலகி குருடனுக்குத் தப்பிக்க வழிவிடுவது போன்ற செயல்கள்  அப்படிப்பட்டவையாகும்.

யோகம்  என்பது  உடலை  ஆராய்ச்சிக்கூடம்   (laboratory) என மாற்றுவதாகும்.  விஞ்ஞானி பிராணிகள் மீது சோதனை செய்தால் யோகி  அதுபோன்ற   சோதனையைத்  தன்   உடல், மனத்தின்  மீது செய்ய  வேண்டும். சோதனை  தவறினால்  உடல்  நோயுறும்,  மனம் ஸ்வாதீனத்தை  இழக்கும்  -  பைத்தியம்  பிடிக்கும். இங்கு  தன் உயிரை யோகி risk  செய்ய  வேண்டியிருக்கிறது  எனில்   adventure of consciousness எனில் என்ன?

மனத்திற்கு  மேல்  ஆன்மாவின்  4  பகுதிகளைக்  கடந்து  சத்திய ஜீவியம்  வந்து  ஜீவியத்தை  (consciousness)  அடையவேண்டும். அது தெய்வநிலையைக்  கடந்தது.  அங்கு  கிடைக்கும்  ஜீவியம்   Mother's Consciousness, அன்னை  ஜீவியம். அது  கிடைத்தபின்  அதை  இழக்கும் வகையில் செயல்படுவது Adventure of consciousness ஆகும்.

கிடைத்தற்கரிய அன்னை ஜீவியம் கிடைத்தபின் அதைக்கடந்து செல்ல   எடுக்கும் யோக முயற்சி adventure of consciousness ஆகும்.

*********book | by Dr. Radut