Skip to Content

"ஸ்ரீ அரவிந்தம்" லைப் டிவைன்

VIII. The Methods of Vedantic Knowledge

 

All our experience is psychological.

 

We receive by our senses.

It goes to the sense-mind.

Indian philosophy calls it Manas.

Sense-mind translates the experience for us.

Therefore, it is psychological.

Manas is the sixth sense.

So say our philosophers.

We may say it is the only sense.

 

Vision, hearing, smell, touch, taste are other senses.

We can say they are specializations.

Manas uses the sense organs.

 

They are the base for its experience.

Manas, yet, exceeds the sense organs.

It is capable of direct experience.

Reason's understanding is psycological experience.

It is mixed or dependent.

 

Or, it is pure or sovereign.

8. வேதாந்த ஞானம்

 

அனுபவம்  என்பது  ஆத்மா  உறையும்  மனத்திற்குரியது.

புலன்களால்  அவற்றை  நாம்  பெறுகிறோம்.

அது  புலனறிவை  அடைகிறது.

நாம்  அதை  மனஸ்  என்கிறோம்.

புலன்கள்  அனுபவத்தை  விளக்குகின்றன.

எனவே,  அவை  மனத்தைப்  பற்றியவை.

மனஸ்  என்பது  ஆறாம்  அறிவு.

நம்  தத்துவம்  அப்படிச்  சொல்கிறது.

மனம்  மட்டுமே  நம்  புலன்  எனவும்  கூறலாம்.

பார்வை,  கேட்பது,  மனம்,  தொடுதல்,  ருசி  மற்ற  புலன்களாகும்.

அவற்றைக்  குறிப்பான  செயல்கள்  எனலாம்.

மனம்  புலன்களைப்  பயன்படுத்துகிறது.

புலன்களே  அனுபவத்திற்கு  அடிப்படை.

இருப்பினும்,  மனம்,  புலன்களைக்  கடந்தது.

நேரடியான  மனம்  அறியக்  கூடியது.

அறிவால்  புரிவது  மனத்தின்  அனுபவம்.

அது  கலப்படமாக,  புலனை  நம்பியதாக  இருக்கலாம்.

அல்லது  தூய்மையாக,  பவித்திரமாக  இருக்கலாம்.

 

 

It is mixed with outer objects.

It is pure with itself.

Reason can depend on senses.

It can form perceptions by the senses.

 

Or, It can act in itself.

It can be aware of things directly.

It is a sort of identity with them.

We are thus aware of our emotions.

 

We are aware of anger.

That is, we become anger.

We are also aware of our existence.

This is knowledge by identity.

This is the nature of experience.

It has a true character.

It is hidden from us.

By exclusion, we are separate from the world.

We are our subject.

The rest are objects for us.

Now there is separation.

The world is separated from us.

To know the world we need organs.

We have developed those organs.

Direct knowledge is no longer possible.

So, there can be indirect knowledge.

It is caused by physical contact.

மற்ற  பொருள்களுடன்  கலந்துள்ளது  அறிவு.

தனித்துள்ள  போது  தூய்மையாகவுள்ளது.

அறிவு  புலனை  நம்பிச்  செயல்படலாம்.

புலனைக்  கொண்டு,  அதன்  மூலம்,  அறிவு  புரிந்து  கொள்ளலாம்.

அல்லது  தானே  செயல்படலாம்.

நேரடியாக  நிகழ்ச்சிகளையறியலாம்.

அவற்றுடன்  அப்படி  ஐக்கியமாவதுண்டு.

நம்  உணர்வோடு  நாம்  அப்படி  ஐக்கியமாகிறோம்.

கோபம்  நாம்  அறிவது.

நாமே  கோபமாக  மாறுகிறோம்.

நம்மை  நாமறிவோம்.

ஐக்கியத்தால்  வரும்  அறிவு  இது.

இதுவே  அனுபவத்தின்  தன்மை.

இது  உண்மை.

இது  நம்மிடமிருந்து  மறைந்துள்ளது.

உலகிலிருந்து  நாம்  விலகியுள்ளோம்.

நமக்கு  நாமே  முக்கியம்.

மற்றவை  நமக்கு  புறப்பொருள்கள்.

பிரிவினை  வந்தது.

உலகம்  நம்மிடமிருந்து  பிரிகிறது.

உலகத்தை  அறியும்  உறுப்புகள்  தேவை.

இவை  நமக்குண்டு.

நேரடி  ஞானம்  இனி  இல்லை.

எனவே  ஞானம்  மறைமுகமாக  வரும்.

அது  தொடு  உணர்ச்சியால்  எழும்.

 

Mental sympathy also gives that knowledge.

This is a limitation.

It is caused by ego.

Ego always proceeds on this basis.

Ego starts from an original falsehood.

It covers the true truths.

It offers contingent falsehood in its place.

 

We take them to be practical truths.

This is our nature.

It is a nature of mental and sense knowledge.

We are presently organised thus.

These are our existing limitations.

In it there is no inevitable necessity.

 

This is a part of human evolution.

Or, it is a result of it.

These are certain physiological functionings.

They have their reactions.

Mind depends on them.

Mind is accustomed to them.

Around us is the normal universe.

It is the material universe.

Mind, thus, relates to it.

We have to be aware of the external world.

It is the rule.

அனுதாபத்தாலும்  ஞானம்  வரும்.

இதுவே  வரையறை.

அகந்தையால்  இது  ஏற்பட்டது.

அகந்தையின்  வழி  இதுவாகும்.

முழுப்  பொய்  அகந்தையின்  ஆரம்பம்.

சத்தியத்தை  அகந்தை  மறைக்கிறது.

அதற்குப்  பதிலாக  நடைமுறைப்  பொய்யை  அகந்தை  அளிக்கிறது.

நாம்  அவற்றை  நடைமுறை  உண்மை  எனக்  கொள்கிறோம்.

இதுவே  நம்  சுபாவம்.

புலனறிவும்,  மனத்தின்  அறிவும்  சேர்ந்த  ஒன்று  இது.

இது  நம்  இன்றைய  அமைப்பு.

இன்றுள்ள  வரையறை  இவை.

இவற்றிற்கு  அவசியம்  என்று  ஒன்று  எழவில்லை.

மனித  வளர்ச்சியின்  பாங்கு  இது.

அல்லது  மனித  வளர்ச்சியின்  முடிவு  இது.

உடல்  செயல்படும்  வழிகள்  உள்ளன.

அவற்றிற்குத்  தேவைகள்  உள.

மனம்  அவற்றை  நம்பி  வாழ்கிறது.

இது  மனத்தின்  பழக்கம்.

நம்மைச்  சுற்றி  உலகம்  உண்டு.

அது  ஜட  உலகம்.

மனம்  உலகத்தைத்  தொடுகிறது.

புறஉலகை  நாம்  அறியவேண்டும்.

இது  சட்டம்.

 

We have to do so indirectly.

It must be through sense-organs.

Sense can convey only a limited truth.

 

We can experience only that much.

Yet, it is only a rule.

The rule is after all a habit.

Maybe it is the regularity of a habit.

Mind can know directly.

It can know the objects itself.

It needs no aid of the sense organs.

 

It would be natural for the mind.

Thus, it is liberated.

It is liberated from the domination of matter.

Hypnosis does so.

Other psychological phenomena also act so.

Life evolves.

Life works out a balance between mind and matter.

 

This working has a balance.

This balance limits the waking consciousness.

It also determines it.

Direct knowledge is impossible for mind.

 

It is impossible during its waking hours.

Therefore the waking mind must go to sleep.

That sleep liberates the true mind.

 

The true mind is the subliminal mind.

இதை  நேரடியாகச்  செய்யமுடியாது.

புலன்கள்  மூலமே  செய்ய  வேண்டும்.

புலன்களால்  உண்மையை  முழுவதும்  தரமுடியாது.

அந்த  அளவுக்கே  அறியமுடியும்.

இது  வெறுஞ் சட்டமே.

சட்டம்  என்பது  பழக்கம்.

நெடுநாளைய  பழக்கமாகவுமிருக்கலாம்.

மனம்  நேரடியாக  அறியமுடியும்.

பொருள்களை  மனம்  அறியும்.

மனத்திற்குப்  புலன்  தேவை  என்பது  இல்லை.

புலனின்றிச்  செயல்படுவது  மனத்தின்  இயல்பு.

மனம்  அங்ஙனம்  விடுதலை  பெறுகிறது.

ஜடத்தினின்று  மனம்  விடுதலை  பெறுகிறது.

மந்திரமயக்கத்தில்  இது  நடக்கிறது.

இதுபோன்ற  பலவகை  நிகழ்ச்சிகளுண்டு.

வாழ்வு  வளர்கிறது.

மனத்தையும்  ஜடத்தையும்  வாழ்வு  இணைக்கிறது.

அவற்றை  நிதானப்படுத்துவது  வாழ்வு.

விழிப்பை  ஆள்வது  இந்த  நிதானம்.

நிர்ணயிப்பதும்  அதுவே.

மனத்தால்  ஞானத்தை  நேரடியாகப்  பெறமுடியாது.

அதுவும்  விழிப்பில்  பெறுதல்  கடினம்.

ஞானம்  பெற  விழிப்பு  விலக  வேண்டும்.

சமாதி  நிலையில்  அது  விலகும்.  மனம்  விடுபடும்.

அடிமனமே  உண்மை.  அது  விடுதலை  பெறும்.

 

Then mind is free.

A free mind can assert.

Assertion brings out its true character.

It is the all-sufficient sense.

 

Rather it is its one sense.

Mind then is free to apply to the objects.

It applies its pure action.

It need not apply its mixed action.

This is not an impossible faculty.

It is more difficult in the waking state.

There are psychological experiments.

There are people who have gone far there.

They all know this truth.

contd...

இனி  மனம்  சுதந்திரம்  பெற்றது.

சுதந்திரமான  மனம்  ஆட்சி  செய்யும்.

ஆட்சியில்  அதன்  உயர்வு  வெளிவரும்.

உயர்வு  என்பது  அனைத்தையும்  அறியும்  புலன்.

அது  மட்டுமே  புலன்  எனலாம்.

மனம்  அப்புலனால்  பொருள்களை  அறியலாம்.

அது  மனத்தின்  சுதந்திரமான  செயல்.

அது  கலப்பற்ற  செயல்.

இது  இல்லாத  திறமையன்று.

விழிப்பில்  இதைப்  பெறுதல்  கடினம்.

மனத்தை  அடைந்தவருண்டு.

அதில்  அனுபவப்பட்டவருண்டு.

அவர்கள்  இவ்வுண்மையை  அறிவர்.

தொடரும்...

*********

ஸ்ரீ  அரவிந்த  சுடர்

சுதந்திரமானவன், தனக்கென வகுத்துக்கொள்ளும் செயல்முறையைக்    கட்டுப்பாடு என்கிறோம். அது போன்ற கட்டுப்பாடு, பண்பின் அடிப்படையில்  உருவான சுபாவம் ஆகும். 

********

ஸ்ரீ  அரவிந்த  சுடர்

எதை ஒரு க்ஷணம் கூடப் பொறுக்கமுடியாதோ, அதை மனிதன் விரும்பி  நாடுவான் என்பதற்குத் திருமணம் சிறந்த உதாரணம்

*******



book | by Dr. Radut