Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

ஒரு விஷயத்தைச் சரியாகக் (accurately) காண்பவனால்

அதைச் சரியாகச் செய்ய முடியும்.

Accurate என்பது அன்னை கூறிய French சொல்லை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது. தெளிவற்றவரை மத்தியஸ்தம் பேச அழைக்கமாட்டார்கள். அதைப் பஞ்சாயத்து என்பர். ஒரு வட்டாரத்தில் பஞ்சாயத்துக்கு அழைப்பவர் தெளிவானவராக இருப்பார். இரு தரத்தார் தங்கள் வழக்கைக் கூறியபின் பஞ்சாயத்திற்கு வந்தவர் இருவர் மறைப்பதையும் அறிந்து, அவர் பேசும்பொழுது தனக்குப் புரிந்தது என்று கூறியவுடன் இரு தரத்தாரும் அவர்கள் தரத்து வம்பைக் கைவிடுவர். வெகு சீக்கிரம் முடிவு எழும். Accurate என்பதை வழக்கில் கரெக்ட் என்பார்கள். தமிழில் சரியாக என்று மட்டும் கூற முடியும். ஒரு வரன் பெண் வீட்டாரிடம் பணமிருக்கிறது என்று தெரிந்து, அங்கு பெண் பார்க்க வருகிறான். பையனுக்கு உதட்டில் பிளவு. டாக்டரிடம் போய் பிளவு மறையும்படி தையல் போட்டுக் கொண்டு மீண்டும் பையன் பெண் வீட்டிற்கு வருகிறான். பையன் B.A என்பதாலும் சிவந்த மேனியுடையவன் என்பதாலும் பெண்ணின் தாயார் சம்மதிக்கிறாள். பெண்ணிற்குத் தகப்பனாரில்லை. தமையன் இருமுறையும் வீட்டிலில்லை. நிச்சயம் முடிகிறது. பையனுடைய தகப்பனார் நிச்சயத்தில் வைத்த நகையைக் கேட்கிறார். தமையன் மறுத்து விடுகிறான். கேஸ் கோர்ட்டிற்குப் போகிறது. பையன் தகப்பனார் தானே திரும்பி வருகிறார். பெண்ணின் தமையன் மறுத்து விடுகிறான். நாட்கள் கழித்து சமாதானமாகும்பொழுது பஞ்சாயத்திற்கு வந்தவருக்குப் பெண் வீட்டாருக்குள்ள பணத்தைக் கேட்கவே பையன் தகப்பனார் அவசரப்பட்டார் என்பதை அறிந்து, அவரைக் கேட்டவுடன் சிக்கல் அவிழ்கிறது. இதுவே accurate-ஆகப் புரிவது. புரிந்தவுடன் சிக்கல் தானே அவிழ்கிறது. Agenda முழுவதும் அன்னை திருவுருமாற்றத்தைப் பற்றிக் கூறுகிறார். அதை இங்குச் சுருக்கமாக ‘விஷயம் விவரமாகப் புரிபவன் அதைத் தீர்க்க முடியும்’ என்கிறார். அது எப்படித் திருவுருமாற்றம் என்று இத்தலைப்பின் மூலம் அன்னை கட்டம் கட்டமாக விவரம் கூறி விளக்கம் தருகிறார். அவை 1) உடலின் ஜீவியம், 2) உடலுறுப்புகளைக் கண்ட்ரோல் செய்து தன் ஆட்சிக்குட்படுத்துவது அடுத்த கட்டம், 3) உறுப்புகளின் அமைப்பை மாற்றுவது. இது திருவுருமாற்றும் முறை. அமெரிக்கா 400 ஆண்டுகளாக முன்னேறி இன்று உலகை ஆள்வதன் காரணம் செயலில் அனந்தத்தைக் கண்டவர்கள் அமெரிக்கர்கள். அவர்களுக்கு மந்திரம்போல் பயன்படுபவை இரு சொற்கள் 1) பிரச்சனை இருந்தால் அதற்குத் தீர்வுண்டு, 2) விஷயத்தின் கருவான மூலம் விவரத்தின் சிறப்பிலிருக்கிறது. ஆசிரமவாசிகள் அன்னையிடம் @நராகப் பேச முடியாது. தங்கள் பிரச்சனையை அன்னைக்கு ஒரு சாதகர் மூலம் சொல்லி யனுப்புவார்கள். சாதகர் அன்னையிடம் போய் கண் வலிக்கிறது என்று ஒரு ஆசிரமவாசி கூறுகிறார் என்றால் அன்னை அது சம்பந்தமான அத்தனை கேள்விகளும் கேட்பார். எந்தக் கண்? எப்பொழுது வலிக்கிறது? என்ன செய்யும்பொழுது வலிக்கிறது? எத்தனை நாள்களாக வலிக்கிறது? எப்பொழுது வலிக்காமலிருக்கிறது? கண்ணாடி போட்டிருக்கிறாரா? வயதென்ன? தகப்பனார் கண் பார்வை எப்படிப்பட்டது? குடும்பத்தில் வேறு எவருக்காவது கண் வலியுண்டா? பூ விழுந்திருக்கிறதா? டாக்டரைப் பார்த்தாரா? டாக்டர் என்ன சொன்னார்? எந்தச் சாப்பாடு இவருக்கு அதிகம் பிடிக்கும்? ஏன் இந்தச் செய்தி உங்கள் மூலம் வருகிறது? அவர் டிப்பார்ட்மெண்ட் தலைவர் மூலம் வரவில்லை? இத்தனையும் எவராலும் தயார் செய்து கொண்டு போக முடியாது. போனால் அன்னை மேலும் கேள்விகள் கேட்பார். அதனால் சாதகர்கள் அன்னையிடம் ஒரு பிரச்சனையை எடுத்துப்போக எளிதில் சம்மதிக்க மாட்டார்கள். அன்னை ஆயிரம் கேள்விகளைக் கேட்டு, பதில் பெற்றாலும், பெறாவிட்டாலும் ஆசிரமவாசியின் கண் சில நாட்களுக்குள் குணமாவதைக் காணலாம். 1910-இல் பகவான் இங்கு வந்தபொழுது புதுவையிலிருந்து ஒருவர் தன் மனைவியை அவரிடம் அழைத்து வந்து அவர் நோயைக் குணப்படுத்தச் சொன்னார். அது என் வேலையில்லை என்றார் பகவான். அவர் திரும்பிப் போய்விட்டார். ஆனால் பகவான் மறுத்தாலும், நோய் பகவான் காதுக்குப் போய்விட்டதால், அன்னை கேட்கும் அத்தனை கேள்விகளும் சூட்சுமத்தில் எழுந்து பதிலையும் பெற்றிருக்கும். அவர் குணமடைய ஆரம்பித்திருப்பார். இது தத்துவம். நடைமுறை எது என்று புரியவில்லை. ஐன்ஸ்டீன் ஐரோப்பியர், யூதர். அவர் காந்திஜியைப்பற்றி இதுபோல் அறிந்ததால் அவர் வாழும் உலகில் வாழ நாம் கொடுத்து வைத்தவர் என்றார். அன்னைக்குத் திருவுருமாற்றம் முக்கியம். அதற்குச் சரணாகதி அவசியம். சமர்ப்பணம் சரணாகதியில் முடியும். சமர்ப்பணமான வாழ்வு ஆனந்தமயமான வாழ்வு எனக் கூறுகிறார். பிரச்சனை தீர நாம் சமர்ப்பணம் செய்கி@றாம். வாழ்வு சமர்ப்பணம் செய்வதற்காகவே ஏற்பட்டது. செயல்கள் சமர்ப்பணம் செய்ய சந்தர்ப்பம். பிரச்சனைகள் சமர்ப்பணத்தைச் சிறப்பாகச் செய்ய உதவுகின்றன என்பது அன்னையின் சித்தாந்தம்.

************

ஜீவிய மணி

நாம் அறிந்தாலும், அறியாவிட்டாலும் உலகம் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் நிலையை உணர்ந்து பாராட்டத் தொடங்கியுள்ளது. ஆயுதம் ஏந்தாமல் சுதந்திரம் பெற்றதைவிட, எழுத்தறிவற்ற 50 கோடி மக்கள் 1952-இல் ஜனநாயகத் தேர்தலை அமைதியாக நடத்தியதை உலக அறிஞர்கள் கண்டு கொண்டனர். அன்றிலிருந்து இன்றுவரை இந்தியா தேர்தல்களை நடத்துவதை உலகம் கண்காணிக்கிறது. அது சாதனை எனப் போற்றுகிறது. எதேச்சாதிகாரம் ஆசிய, ஆப்பரிக்க நாடுகளில் மலிந்து காணப்படும் பொழுது இந்தியாவில் மக்களாட்சி நீடிப்பது உலக மேதைகளை, தலைவர்களை சிந்திக்கச் செய்கிறது. அச்சிந்தனையின் விளைவாக “இதன் மூலம் எது?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். பதில் எழாவிட்டாலும், கேள்வி எழுந்தது உலகம் இந்தியாவை அறிய முற்பட்டதற்கு அடையாளம். மார்க்கெட் என்ற அளவில் சைனாவும், இந்தியாவும் உலகில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அது மார்க்கெட்டின் முக்கியத்துவமில்லை. உலகம் எப்படிக் கருதினாலும் நாம் அது நம் ஆன்மிக மூலத்தின் விளைவு என அறிவது நமக்கு முக்கியம்.

*************



book | by Dr. Radut