Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

123. பிரபஞ்ச அமைப்பை உலக அமைப்பில் காணும் தரிசனம்.

  • பகவானுடைய யோகம் பூரண யோகம், இணைந்த ஒருமையுடையது.
  • இதெல்லாம் நாம் அடிக்கடி கேள்விப்பட்டாலும், இதன் தாத்பர்யம் மனதைத் தொடாது.
  • Molotov ஸ்டாலினுக்கு அடுத்தபடி சர்வதேச அரசியலில் 30 ஆண்டுக்குமேல் நட்சத்திரமாகப் பிரகாசித்தவர். அரசியல் மாற்றம் அவரை Collective Farm தலைவராக்கியது. அங்கு பிரிட்டிஷ் அரசியல்வாதி வந்தார். Molotov அவரை Attlee எங்கிருக்கிறார் எனக் கேட்டார். அவர் House of Lord-ல் உள்ளார் எனப் பதில் வந்தது.
  • மாலட்டாவ் அட்லியைப்பற்றிக் கேட்டதும் தன்னிலைமையைக் கருதினார்.
  • தன்னிலைமையுடன் ஒத்துப் பார்க்கும்பொழுது பிறரும் உலகமும் தெளிவாய் விளங்கும்.
  • நான், அமெரிக்க (depression) நெருக்கடி, ஹிட்லருடன் பிரிட்டன் போராடியது, காந்திஜி மக்களைத் தட்டி எழுப்பியது, பசுமைப்புரட்சி ஆகியவற்றை அடிக்கடி எழுதுகிறேன். பகவானுடைய கோணத்தில் பார்த்தால் உலகம் விளங்கும்.
  • சட்டம் புரிந்தால் சிக்கல் அவிழும்.
  • ஸ்ரீ அரவிந்தம் புரிந்தால் சட்டம் புரியும்.
  • பல வருஷமாகத் தீராத சிக்கல் மனத்தை ஆர்ப்பரித்துக் கொண்டுள்ளது.
  • The Life Divine படிக்கும்பொழுது ஒரு தத்துவம் புரிகிறது.
  • மனம் தன்னையறியாது என்பது தத்துவம்.
  • மனம் தன்னையறியாது எனில் நான் என் சிக்கலை அறியவில்லை எனப் புரிகிறது.
  • உடனே சிக்கலின் அடியில் “நான்” கொலுவீற்றிருப்பது தெரிகிறது. சிக்கல் அவிழ்ந்து சிறப்பான நேரம் வீட்டில் சூழலாக அமைகிறது.
  • பசுமைப்புரட்சி வெற்றி பெற்று உலகெங்கும் பரவியது.
  • சுப்ரமணியம் விவசாயி. கெட்டிக்காரர், சாதித்தார் எனக் கூறினர்.
  • Organisation-ஐ அவர் பயன்படுத்தியதால் அவ்வெற்றி பெற்றார் என்றனர்.
  • Floor prize விவசாயியை ஊக்கியது என்றனர்.
  • பகவான் கோணத்தில் பார்க்க நினைத்தேன். “பசுமைப்புரட்சி விவசாயியின் individuality-ஐத் தூண்டி வென்றது” எனப் புரிந்தது.
  • அதன்பின் ரூஸ்வெல்ட், சர்ச்சில், காந்திஜி செய்தவையும் புரிந்தது.
  • பகவான் கோணத்தில் உலக வரலாறு புரிந்தால், பெரும் சிக்கல்கள் அவிழும் எனவும் புரிந்தது.
  • ஒருவர் உலகை அப்படிக் கண்டால், அவருக்குப் பூரண யோகம் பலிக்கும்.
  • பூரண யோகத்தின் உயர்ந்த உலகங்கள், இருண்ட மிரட்டும் பாதாளங்கள் கனவில் தோன்றும். ஒன்று புதுஉலகம். அடுத்தது பயங்கரம்.
  • பயங்கரம் பயங்கரமில்லை. பயங்கரம் பூரண யோக வாயிலாகும்.
  • நல்ல மனிதர், பொறுப்பற்று, அன்னை சுதந்திரத்தை பேரளவில் அனுபவித்து ஆயிரம் முறை அடுத்தவர் உயிரை ஆபத்திற்குள்ளாக்கி, வாரண்ட் பெறச் செய்தவர் இதைவிட்டுப் போய் அதை தம் நாட்டில் அபரிமிதமாக அனுபவிக்கும்பொழுது அவை அவருக்குப் பூரண யோகவாயில்.

***********



book | by Dr. Radut