Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/28. கேட்டுப் பெறுவது பலன்
கேளாமல் பெறுவது அருள்
கேட்க முடியாதவன் பெறுவது இறைவன்.

(February 2016 இதழில் வெளிவந்த

யோக வாழ்க்கை விளக்கத்தின் தொடர்ச்சி)

  • கேட்பது என்றால் என்ன? இல்லாததைக் கேட்கிறோம்.
  • ஏன் கேட்கிறோம்? அது இல்லாமல் முடியாது என்பதால் கேட்கிறோம்.
  • ஏனில்லை, மனம் வளராத நிலையில் இல்லாதவை ஏராளம்.
  • மனம் வளரவில்லை என்ற அறிவு உடனே அதை வளர்க்கும் திறனுடையது.
  • மனிதனுக்கு எங்கு மாற வேண்டும் எனத் தெரியவில்லை என்கிறார் அன்னை.
  • ஒரு புதுமுறையை அறிந்தவர், அதைச் செய்து பலன் பெறலாம்.
  • சட்டம், வாழ்வு, எலக்க்ஷன், அரசியல், குடும்பத்தில் ஒரு நேரம் வரும்.
  • அது ‘நேரம்’ எனப் பலரும் அறியார். ஓரிருவருக்கு அது தெரியும்.
  • பையன் பாங்க் ஏஜெண்டாக ஆசைப்படுகிறான், பாங்க் கிளார்க் வேலையும் கிடைக்கவில்லை என்ற பொழுது ‘நேரம்’ வந்ததை வீட்டில் ஒருவர் அறிந்தால் IAS பாஸ் செய்வான்.
  • அன்பர்கள் இந்த ‘நேரத்’தை அறிவர்.
  • இதுவே கேட்க முடியாத மனநிலை. IAS அவனுக்கு இறைவன்.
  • IAS-ஐ வேலையாக ஏற்காமல் அருளாக ஏற்றால் ஏற்பது எதுவானாலும் இறைவனாகும்.
  • 10 பிள்ளைகளில் ஒருவன் குமாஸ்தாவாக இருப்பதை பெரியதாக நினைக்கும் குடும்பத்தில் அடுத்தவன் சர்க்கார் ஆபீசரானான். அவனை வேறொரு வேலைக்குப் போக ஒருவர் சொன்னார். அங்குப் பிரமோஷன் சீக்கிரம் வரும். அவனுக்கு வந்தது “தொழிலதிபர்” பதவி.
  • சர்க்கார் வேலையை விடச் சொன்னது ‘தற்கொலை’க்கொப்பாகும்.
  • அதையும் சொன்னவரைக் கருதி பையன் செய்ததால் அவன் தொழிலதிபரானான். பிறகு பல தொழில்கட்கும் அதிபரானான். அது “நேரம்”.
  • கேட்பதற்கும் பெறுவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
  • கேட்பது என்றால் மனம் புரிந்ததை ஏற்பது.
  • புரிவது சிறியது. கேட்க முனைவது சிறியதை வற்புறுத்துவதாகும்.
  • கேட்க நினைத்துக் கேட்காமலிருப்பது சிறியதை அறிந்து அதைச் சிறியதாக நிலைப்படுத்தாததாகும்.
  • கேட்க முடியாதது, சிறிய கருத்தை நாடாததாகும்.
  • கேட்காவிட்டால் மனம் சுருங்காது.
  • மனத்தைச் சுருக்க முயலாவிட்டால் அதன் விரிவுபடும் தன்மை பாதிக்கப்படாது.
  • விரிவுபடும் குணம் பாதிக்கப்படாதது மனத்திற்குரியதல்ல.
  • அது ஆத்ம குணம் ஆத்ம ஞானமாவது.
  • ஆத்மா மனத்துள் வருவது பார்லிமெண்ட் அதிகாரம் சட்டசபைக்கு வருவது போல்.
  • கேட்க முடியாத மனத்தை இறைவன் தேடிக்கொண்டிருக்கிறான் என்பதால் அது அவன் கண்ணில் படும்.
  • கண்ணில் படுவது அன்பர் பெறும் திரிகால திருஷ்டி.
  • அவன் ஆத்மா விழிப்புப் பெற்று இறைவனைக் கருதும்.

**********

ஜீவிய மணி

எதை அறிந்தாலும், எவ்வளவு அனுபவம் வந்தாலும், மீண்டும் மனம் பழமையை விரும்பி ஆர்வமாக நாடுவதைக் காணலாம். பழமை தவறில்லை. பழமையின் சாரம் வைரமானது. பழமையின் அன்றைய உருவம் இன்று உதவாது. தவறு என்று எல்லா நேரமும் சொல்ல முடியாது. குடும்பப் பழமை, இன்று புதுமை. குடுமி பழமை, கிராப் புதுமை. இன்று குடுமி வைத்துக் கொள்வது தவறில்லை. எவரும் அதை நாடுவதில்லை. குடுமி தவறில்லாத பழமை. ஓலைச் சுவடி பழமை, இன்று ஓலைச் சுவடியில்லை. உபயோகப்படுத்த முடியாது. வற்புறுத்தினால் தவறில்லை. நஷ்டம் நமக்குத்தான். டைபாய்டு வந்தால் வைத்தியர் கஷாயம் சாப்பிடலாம். எவரும் தடுக்கமாட்டார்கள். உயிர் போகும். பென்சுலின் காப்பாற்றும்.

  • பழமையில் உயர்ந்தவை உன்னதமானவை உண்டு. அவை காலத்திற்கும் நமக்குரியவை.
  • தவறில்லாத பழைய பழக்கங்களுண்டு. இன்று பயன்படாது.
  • தவறில்லாவிட்டாலும் பழமை சிலவற்றில் கேலிக்குரியது.
  • கேலிக்குரியதில்லை என்றாலும் நாம் கைவிட்டுவிட்டோம்.

பழமையின் சாரம் புதுமை மலர அவசியம்.

ஸ்ரீ அரவிந்தம் புதியது. மரபு, மோட்சம், கர்மம், விதி பழையது.
அன்பர் ஆத்ம விழிப்புற்று அதனதன் சிறப்பைத் தேடிச்
சேர்ந்தால் அவர் வாழ்வு அன்னை வாழ்வாகும்.

********



book | by Dr. Radut