Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

ஆங்கிலம்: லெஸ்லி ஜேக்கப்ஸ்

தமிழாக்கம்: வித்யா ரங்கன்

திருத்தம்: ஸ்ரீ கர்மயோகி

 

II/1. Indeterminates, Cosmic Determinations and the Indeterminabe
Page 297
Para 3
II/1. பிரபஞ்ச சிருஷ்டி பிரம்ம சிருஷ்டி
Do we need to posit an Infinite which contains our formed universe?
ஒரு அனந்தம் உருவம் பெற்ற பிரபஞ்சத்தைத் தன்னுள்ளடக்கி உள்ளது என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளலாமா?
This conception is imperatively demanded by our mind.
நம் மனம் தவிர்க்க முடியாத அளவில் இக்கருத்தை எழுப்புகிறது.
It is a necessary basis to its conceptions.
அதன் கருத்துகளுக்கு இது ஒரு அவசியமான அடிப்படை.
It is unable to fix a limit in Space or Time
அது காலம் மற்றும் நேரத்தில் ஒரு வரம்பைப் பொருத்த முடியாமல் உள்ளது.
Beyond such limit there would be nothing.
அவ்வரம்பைத் தாண்டிய நிலையில் ஒன்றுமிராது.
Before or after which there would be nothing.
அதற்கு முன்னர் அல்லது பின்னர் ஒன்றுமிராது.
The alternative is a Void or Nihil.
அதற்கு ஈடானது ஒரு வெறுமை அல்லது சூன்யம்.
It can be only an abyss of the Infinite we refuse to look into.
இது அனந்தத்தின் படுகுழியாக மட்டுமே இருக்க முடியும் என்பதால் இதை நாம் காண மறுக்கிறோம்
A necessary postulate may be an infinite mystic zero of Non-Existence.
அனந்தமான மாயப் பூஜ்ஜியமான ஒரு அசத் உள்ளதை ஒரு அவசியமான அனுமானமாக நாம் வைத்துக் கொள்ளலாம்
This would replace an infinite X.
விளங்க முடியாத அனந்தத்தை இவ்வனுமானம் ஈடு செய்யலாம்.
It would be the basis for our seeing what is to us existence.
நாம் வாழ்வு என்று அறிந்ததைக் காண்பதற்கு இது அடிப்படையாக இருக்கும்.
Or we may refuse to recognise anything as real.
அல்லது நாம் எதையும் உண்மை என்று அறிய மறுக்கலாம்
We may recognise only the limitless expanding material universe.
நாம் வரம்பற்று பரந்து விரியும் ஜடப் பிரபஞ்சத்தை மட்டும் ஏற்கலாம்.
Only that finite is real with its teeming determinations.
அபரிமிதமான நிர்ணயங்களைக் கொண்ட கண்டம் மட்டுமே உண்மை எனக் கொள்ளலாம்
But the enigma remains the same.
ஆனால் புதிர் விடையின்றி புதிராகவே உள்ளது.
To us, Infinite existence or boundless finite are original indeterminables.
நமக்கு அகண்டமான வாழ்வு அல்லது எல்லையற்ற கண்ட இவை மூலமான நிர்ணயிக்க இயலாதவை.
We can assign to them no distinct features.
அவைகளுக்கு நாம் தனிப்பட்ட எந்த அம்சங்களையும் குறிப்பிட இயலாது.
We can assign nothing which would predetermine their determinations.
அவற்றின் நிர்ணயங்களை முன்னரே முடிவு செய்யும் எதையும் நாம் அவற்றிற்குத் தர முடியாது.
We can describe the fundamental character of the universe as Space or Time.
பிரபஞ்சத்தின் அடிப்படையான குணத்தை நாம் இடம் அல்லது காலம் என்று கூறலாம்
But this does not help us.
ஆனால் இது நமக்கு உதவி செய்யாது.
Our mental view on the cosmos imposes abstractions of our intelligence.
பிரபஞ்சத்தை நாம் மனத்தால் பார்ப்பதால் நம் அறிவு எழுப்பும் கருத்துகளை மனம் வலியுறுத்துகிறது.
They are the mind’s necessary perspective of its picture.
மனம் தன் காட்சிகளை அறிய அப்பார்வை அதற்கு அவசியம்
But these too are indeterminates.
ஆனால் இவையும் நிர்ணயத்தைக் கடந்தவைகளே ஆகும்
They have no clue to the origin of the determinations.
அவை நிர்ணயங்களின் மூலத்தை அடையும் வழிவகை அறியா.
The strange process by which things are determined is still not explained.
பொருட்களை நிர்ணயம் செய்யும் விசித்திரமான செய்முறை இன்னும் விளக்கப்படவில்லை
Their powers, qualities and properties are not explained.
அவற்றின் சக்தி, தன்மைகள், மற்றும் கூறுகள் தெளிவுபடுத்தப்படவில்லை.
There is no revelation of their true nature, origin and significance.
அவற்றின் உண்மையான இயல்பு, மூலம், மற்றும் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்படவில்லை.
Contd...
தொடரும்…
 
***********

 



book | by Dr. Radut